• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

‘கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் &#2980

Status
Not open for further replies.
‘கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் &#2980

கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால் போதும்’


செப்டம்பர் 24,2015,

சென்னை,


கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால் போதும்’ என்று இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

சமீபகாலமாக சென்னையில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘இண்டேன்’ கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் போது ‘பில்’ தொகையை விட கூடுதலாக ரூ.40 முதல் ரூ.60 வரை வசூலிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் மத்தியில் புகார் எழுந்தது.


இதுகுறித்து, ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று (புதன்கிழமை) ‘சென்னையில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய ரூ.60 வரை கூடுதல் கட்டணம் வசூல், இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க இல்லத்தரசிகள் கோரிக்கை’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.


இந்த செய்தியின் எதிரொலியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைமை தகவல் தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் நேற்று ‘தினத்தந்தி’க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.


அந்த கடிதத்தில் சபீதா நட்ராஜ் கூறி இருப்பதாவது:–


பில் தொகையை கொடுத்தால் போதும்

சமையல் கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வரும்போது, அதை கொண்டு வருபவர்கள் கையில் இருக்கும் ‘பில்’லில் என்ன தொகை குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கொடுத்தால் போதும்.


அப்படி வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வருபவர்கள் யாராவது ‘பில்’ தொகையை விட கூடுதல் கட்டணம் கேட்டால், 1800–2333–555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


‘தினத்தந்தி’ வெளியிட்ட செய்தியை தொடர்ந்து அனைத்து சமையல் கியாஸ் வினியோகஸ்தரர்களிடமும், சிலிண்டர் டெலிவரி செய்ய அனுப்பப்படுபவர்களிடம் ‘பில்’ தொகையில் இருக்கும் தொகையை விட கூடுதல் தொகை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



http://www.dailythanthi.com/News/St...hi-message-echoes-Wells-Cylinder-Delivery.vpf
 
‘கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் &#2980

காஸ் சிலண்டர் கொண்டுவரும் தொழிலாளி சிலண்டரை வீடுகளில் மேல் மாடிகளுக்கு கொண்டுசெல்லவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு ரூபாய் பத்து சேர்த்து கொடுத்தால் தவறில்லையே. இதை ஒரு பிரச்சனையாக எடுத்து செல்வது அவசியமா என யோசிக்க வேண்டும். அரசு காஸ் சிலண்டர் விலையை கூட்டினால் நாம் சத்தமில்லாமல் கொடுக்கிறோம் , ஆனால் ஒரு தொழிலாளிக்கு சில ரூபாயை கொடுக்க யோசிக்கிறோம் ஏன் என்று தெரியவில்லை.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
We allow politicians and black marketers to swindle and cheat us and never raise our voice. But, we make it a big issue to give few rupees for a poor labourer.

We terribly lack helping tendency to poor.
 
காஸ் சிலண்டர் கொண்டுவரும் தொழிலாளி சிலண்டரை வீடுகளில் மேல் மாடிகளுக்கு கொண்டுசெல்லவேண்டி இருக்கிறது. அவர்களுக்கு ரூபாய் பத்து சேர்த்து கொடுத்தால் தவறில்லையே. இதை ஒரு பிரச்சனையாக எடுத்து செல்வது அவசியமா என யோசிக்க வேண்டும். அரசு காஸ் சிலண்டர் விலையை கூட்டினால் நாம் சத்தமில்லாமல் கொடுக்கிறோம் , ஆனால் ஒரு தொழிலாளிக்கு சில ரூபாயை கொடுக்க யோசிக்கிறோம் ஏன் என்று தெரியவில்லை.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு


hi

idhu namma mentality.....
 
This is the complaint of workers tto, irrespective of the colour of the collar. The management is willing to accept any type of cost increase - raw material cost, currency fluctuation, customs duty, and many such escalation without murmur, but become rigid when wage or bonus issues are raised.

Why blame and denigrate ourselves when there is no need or justification.

hi

idhu namma mentality.....
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top