V
V.Balasubramani
Guest
‘வேதங்களால் என்ன பயன்? – இதுவே சுவாமி விவேக&am
Pranams,
I would like to share a mail received from one of my friends.
‘வேதங்களால் என்ன பயன்? – இதுவே சுவாமி விவேகானந்தரின் இறுதியான போதனை – அரிய தகவல்
சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்ய
வேண்டிய தன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது
விருப்பத்தையும் வெளியிட்டார்.
”சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?” என்று கேட்டார் பிரேமானந்தர்.
சுவாமிஜி பளிச்சென்று, ”மூடநம்பிக்கைகள் அழியும்” என் றார்.
மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில்,
”இந்தியா அமரத்து வம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும்.
மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்” என்றார்.
இதுவே அவரது இறுதியான போதனை.
எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!
தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.
வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார்.
தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகுநேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.
தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப்
பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட்டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!
தம்மையறியாமலே பாடியது போல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ”காளியை மட்டும்தானா… இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன
செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன… காலவெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!”
Regards
P.S: This article is also available in 'vidhai2virutcham.com' posted on January 17, 2014.

Last edited by a moderator: