• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

Status
Not open for further replies.
“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

1351440102_black_lord_krishna.jpg


“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

என் பெயர் புலவர் நக்கீரன். “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற இரண்டு வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, என்ற தலைப்பிலும் “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை” என்ற தலைப்பிலும் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும்.


கண்ணபிரான்: என் பெயர் கண்ணன். வடக்கில் கிருஷ்ணன் என்பார்கள். இப்படி ஒரு தலைப்பில் யாராவது பேச அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்தேன். காரணம் என்னவென்றால் என் கலரை மனதில் வைத்துக் கொண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கன்னா பின்னா என்று எழுதுகிறார்கள். கிருஷ்ணனென்ற பெயரை ஆங்கிலத்தில் சொல்லப்போனால் மிஸ்டர் பிளாக் Mr Black. உண்மையில் நான் சொல்வதுதான் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் உள்ளது. அவைகளை ஆரியக் கொள்கை என்றும் நான் சொன்னது த்ராவிடன் சொன்னது என்றும் பிதற்றுகிறார்கள். உண்மையில் ஆரியமே திராவிடமோ இல்லை. எல்லா காதல் பாட்டுகளிலும் கண்ணனென்று ஒப்பிட்டு காதலனை அழைப்பார்கள். இதிருந்தே உங்களுக்கு தெரியும் கறுப்புதான் எல்லோருக்கும் பிடிச்ச கலரு என்று.


வியாசர்: இடை மறித்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். யாராவது இந்ததலைப்பில் பட்டிமன்றம் நடத்தமாட்டார்களா என்று நானும் காத்திருந்தேன். என் பெயர் வியாசர். வேதங்களை அழகாகத் தொகுத்து நாலாகப் பிரித்து நான்கு சீடர்கள் மூலம் பரப்பியவன் நான். மஹா பாரத்தை எழுதியவன் நான். என் மகன் புராணங்களை எல்லாம் தொகுத்துச் சொன்னவன். என்னுடைய உண்மையான பெயர் கிருஷ்ண த்வைபாயனன். ஆங்கிலத்தில் சொன்னால் மிஸ்டர் ப்ளாக் ஐலண்டர் Mr Black Islander. நானும் கறுப்பன் (Black) தான். இந்த ஆரிய திராவிட வாதம் எல்லாம் பொய். ஆரியக் கலர் வெள்ளை என்றும் திராவிடக் கலர் கறுப்பு என்றும் மஹா பேத்தல்களால் மனம் நொந்தே போனேன்.

தீர்க்கதமஸ்: வியாசர் ஐயா அழகாச் சொன்னாரு. என்பெயர் தீர்க்க தமஸ். ஆங்கிலத்தில் சொன்னால் லாங் டார்க்நெஸ் LongDarkness. நான் ரிக்வேத ரிஷி. நான் ஒரு கறுப்பன். இதை வைத்தே நிறவாத ஆரிய திராவிடக் கொள்கை பொய் என்று சொல்லாமலே விளங்குமே. வேத காலத்தில் இப்படி நிறபேதம் இல்லை என்பது வியாசர் ஐயாவையும் என்னையும் கறுப்பனான ராம பிரானையும் பார்த்தாலேயே தெரியும்
ராம பிரான்: அட, நான் பேச நினைத்தஎல்லாம் நீ பேச வேண்டும் என்று நினைத்தேன். என்னையும் ஒரு கறுப்பன் என்று இனம் காட்டினீர்கள். நன்றி, தீர்க்கதமஸ் ஐயா.


என் பெயர் திரவுபதி. அர்ஜுனன் மற்றும் நான்கு பாண்டவர்களின் மனைவி. என் பெயர் கிருஷ்ணா (krishnaaa. நானும் கறுப்புதான். மக்கள் என்னை எந்த அளவுக்கு கொண்டாடினார்கள் தெரியுமா? ( வடமொழியில் கிருஷ்ண என்பது கண்ணன், கிருஷ்ணா என்பது திரவுபதி)


அட நீ ஒன்று. என் பெயர் காளி. கலி, காளி, காலன் என்றாலே கறுப்பு என்றுதான் அர்த்தம். நானும் விஷ்ணுவும் கறுப்புதான். நாங்கள் என்ன ஆரியர்களா, திராவிடர்களா?

என் பெயர் காலன். என்னை எமன் என்று சொன்னால் எல்லாருக்கும் எளிதில் புரியும். இந்த வெளி நாட்டு ஆராய்ச்சியாளரும், பி.எச்டி. பைத்தியங்களும் என்னை ஆரிய தெய்வங்களில் ஒன்று என்று எழுதி வைத்துவிட்டார்கள். மஹா உளறல். என்னை அனுதினமும் பிராமணர்கள் மூன்று முறை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள். அதில் கூட என்னை நீலாய (Yamaaya Dharmarajaaya……..Neelaaya parameshtine) என்ற மந்திரத்தால்தான் துகிக்கிறார்கள். நீலம் என்றாலும் கறுப்பு என்றாலும் ஒன்றுதான். நீலக் குயில் ,கருங்குயில் என்று சொல்வதிருந்து இது எளிதில் புரியும்.

BlackKrishna01.jpg


முக்கண்ணன்: ஐயாமார்கள் சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சரி. வேதத்தைப் படித்தவர்களும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி முதலில் எழுதியவர்களும் நகைப்புக்குரிய ஒரு கொள்கையை வெளியிட்டு என் பெயரை எல்லாம் ரிப்பேர் ஆக்கிவிட்டர்கள். ஆரிய ருத்திரன் சிவப்பு என்றும் திராவிட சிவன் கறுப்பு என்றும் காலப்போக்கில் இது ஒன்றாகக் கலந்துவிட்டது என்றும் நல்ல கதை கட்டிவிட்டு ஏராளமான புத்தகங்களும் எழுதிவிட்டார்கள். உண்மையில் அப்பர் பெருமான் பாடிய பாடலில் சிவனும் ருத்திரனும் ஒன்றே என்று அழகாகப் பாடியிருக்கிறார். எனக்கு ஐந்து நிறம் உண்டென்பதை இன்னொரு பாடலில் சொல்லிவிட்டார். ருத்ரம் என்னும் வேதப் பகுதியில்தான் நமசிவாய என்ற மந்திரமே வருகிறது. தமிழில் சிவன் என்ற சொல்லே ஐந்தாம் நூற்றாண்டில்தான் முதலில் வருகிறது. சங்க இலக்கியத்தில் என் பெயரே சிவனென்று சொல்லப்படவில்லை. சிவன் என்னும் செம்மேனி அம்மான் என்பதே சரி. நிறத்தின் அடிப்படையில் ஆரிய திராவிட பாகுபாடு செய்ததெல்லாம் மஹா அபத்தம் என்பது இப்போதாவது புரிகிறதா?
நீங்கள் கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, எனக்கு மகிழ்ச்சியே.


அப்பர் பெருமான்:
நீலவுரு வயிரநிறை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கு என்ற அறிவரிய நிறத்தர்போலும்
கோலமணி கொழித்தெழியும் பொன்னி நன்னீர்
குடந்தை கீழ்கொட்டத்து என் கூத்தனாரே.

(இப் பாட்டில் சிவனுக்கு நீலம், வயிரம், பச்சை, பொன், பளிங்கு என ஐந்து நிறங்கள் உள்ளதாக அப்பர் பாடி இருக்கிறார். வேறு பாடல்களில் சிவணை செம்மேனி அம்மான் என்பார்).

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை
செம்பொன்னே மரகதமே மணியே போற்றி.

நக்கீரர் முடிவுரை:

மிக அழகாக இனவாத, நிற வாத ஆரிய-திராவிட வாதத்தை தகர்த்துவிட்டீர்கள்.
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்” – என்று திரு ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார்.. இது பெரிய ஒரு தலைப்பு. ஆகையால் அடுத்த கூட்டத்தில் “ சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை” என்ற தலைப்பில் பேச உங்களை அழைக்கிறேன். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது திருமுருகாற்றுபடை புகழ் நக்கீரன்.
வாழ்க தமிழ், வளர்க பாரத ஒற்றுமை.
 
[h=1]கருமையும் அழகே[/h]
பகலும், இரவும் இருப்பதைப் போன்றே,
வெண்மையும், கருமையும் இணை பிரியாதவை!

முழுவதும் பகலாய் இருந்தாலும் கடினம்;
முழுவதும் இரவாய் இருந்தாலும் கடினம்.

வெப்பம், குளிர் என்பன ஒரு இரட்டை.
வெயில், மழை என்பதும் ஒரு இரட்டை.

இன்பம், துன்பம் என்று ஒரு இரட்டை.
வெற்றி, தோல்வி என்று ஒரு இரட்டை.

வாழ்வு, தாழ்வு என்றொரு ஜோடி;
வளர்ச்சி, தளர்ச்சி என்றொரு ஜோடி.

லாபம், நஷ்டம் என்று ஒரு ஜோடி.
ராகம், த்வேஷம் என்று ஒரு ஜோடி.

வளமை, வறுமை, என்பதும் இரட்டை.
பெருமை, சிறுமை என்பதும் இரட்டை.

மானம், அவமானம் என்றொரு ஜோடி.
புகழ்ச்சி, இகழ்ச்சி என்றொரு ஜோடி.

எந்த ஜோடியின், எந்தப் பிரிவுமே,
வந்த பின்னர் வரும் நமக்கு கலக்கமே !

எது வந்தாலும், நன்மையே பயக்கும்.
இதை உணர்ந்தாலே, வாழ்வே இனிக்கும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
(இப் பாட்டில் சிவனுக்கு நீலம், வயிரம், பச்சை, பொன், பளிங்கு என ஐந்து நிறங்கள் உள்ளதாக அப்பர் பாடி இருக்கிறார். வேறு பாடல்களில் சிவணை செம்மேனி அம்மான் என்பார்).

நீலம் => Krishna/ Vishnu

பச்சை=> Rama / Parvathi (siblings!!!)

பொன்=> Murugan/Brahma/ Lakshmi (the 2nd and 3rd are siblings!!!)

Siva and sibling Saraswathi are supposed to be

of the color of the evening sky.
 
கருத்துப்பரிமாற்றம் முடிந்து கலைந்து செல்லத்தலைப்பட்டவர்கள் வெளியே வந்தனர். எல்லாரும் ஏதோ எதிர்பார்ப்புடன் வீதியின் இருபுறமும் பார்த்து நின்றனர். நம் பாணன் பாடியவாறே வந்தான்.

மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே,
கனங்குழையீர் வந்து காணீரே.

அடைந்திட்ட்மரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம்சுற்றி வாசுகி வங்கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி,
கார்முகில் வண்ணனே சப்பாணி.

குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கி
கடல் நிறக்கடவுள் எந்தை
அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ
என்செய்கேன் உலகத்தீரே.

ஆலமாமரத்தின் இலைமேலொருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி, ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே.



கேட்டவர்கள் மெய்ம்மறந்து நிற்கவும் பாணன் ஸாவேரியில் மேலும் பாடியவாறே சென்றான்:

தேனுகன் பிலம்பன் காளியனென்னும்
தீப்பப்பூடுகளடங்க உழக்கி
கானகம்படி யுலாவி யுலாவிக்
கறுஞ்சிறுக்கன் குழலூதினபோது
மேனகையோடு திலோத்தமை அரம்பை
உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய்திறப்பின்றி
ஆடல் பாடலவை மாறினர் தாமே.
 
hi
நிறம் கருப்பு
என் உள்ளம் வெள்ளை
வாழ்கையில் கருப்பும் வேண்டும்
வெள்ளை உள்ளம் இல்ல மனிதன்
வாழ்கையும் கருப்பு ஆகி விடும்....
கருமேனி ரங்கனின் அழகு
எல்லோருக்கும் பிடித்த
கலரு தானே ......
 
Last edited:
Thanks for adding informative pieces. I liked all the verses and the comments.
It is very interesting only Hindus and Buddhists allocated colours for directions, Yugas and virtues on the basis of which I have arguesd Mayans are Hindu Nagas. Strangely they are the only culture outside India who follows colour system.

I submitted two research papers in the World Tamil conference at Thanjavur on

Colour in Sangam Tamil Literature
Number in Sangam Tamil literature

Following this submission in 1995, still I am getting more and more materials.
Someone someday is going to get a Ph.D. on this subject.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top