P.J.
0
10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும்
10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி!
சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ராமசாமி. ‘இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், ‘ராசியான மருத்துவர்’என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார்.
'சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்'' என்றார்.
இங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து, “இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர்" - மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி.
-பா.சிதம்பர பிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)
10 ?????????? ??????????: ??????????????? ?????????? ???????!