P.J.
0
5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இ&
5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்
மீரட்,
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பெண்கள் தங்களை காத்துக்கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இது பெண்கள் பாதுகாப்பு குறித்து நாட்டில் கவலைகளை வெளிபடுத்திய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வீணா என்ற பெண் அடித்து, உதைத்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்தார்.
சாலையில் விழுந்து கிடந்த வாலிபரை, வீணா தனது காலால் மிதித்தார். அந்த காட்சிகளை வீணாவின் தோழி, தன்னுடைய செல்போனில் வீடியோ படம் பிடித்தார். இதற்கிடையில் வீணாவின் அடி, உதையை தாங்க முடியாத வாலிபர், தன்னிடம் இருந்த ஹெல்மெட் மூலம் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபோன்று பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.
மீரட் நகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் பைக்கில் சென்றுள்ளார். சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் இருந்து திபு திபுவென வெளியே குதித்த இளைஞர்கள் 5 பேர் பைக்கிள் இருந்த இளம் பெண்ணின் தந்தையை அடித்துள்ளனர்.
அப்போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் அவரை காப்பாற்றவோ, தட்டிக் கேட்கவோ வரவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது தந்தையை காப்பாற்ற அதிரடியாக களம் இறங்கினார். சினிமா பானியில் இளைஞர்களை பிடித்து கடுமையாக தாக்கினார். இளைஞர்களை பிடித்து பளார், பளார் என அறைந்து, சட்டையை பிடித்து தர, தரவென இழுத்தும் தர்ம அடி கொடுத்தார். அடிவாங்கிய இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தனது மகளுக்கு அன்பு தந்தை முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 ?????? ??????? ??????? ???????? ????? ????????||Brave-UP-girl-thrashes-5-men-to-save-father