• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A Tamil Poem

Status
Not open for further replies.

kk4646

Active member
எண்ணங்கள்
________________

"எண்ணங்கள்" என்பவை எவை...?

மனதென்ற "மாயச் சங்கிலியின்"
மயக்கிடும் "பிணைப்புகளா"...?

,,,,அல்லது..

மனதென்ற "மாய அரக்கனின்"
"மந்திர தந்திரங்களா"....?

....அல்லது..

மனதென்ற "ஓடையில்" ஓடிடும்
"மனத்தெளிவுகளா"........?

....அல்லது..

மனதென்ற "மாலைத் தென்றலின்"
மனம் கவற் "கவிதைகளா"....?

...அல்லது..

மனதென்ற "மலர்சோலையில்"
மலர்ந்திடும் "வாசமிகு மலர்களா"...?

...அல்லது..

மனதென்ற "குளிர் நிலவின்"
மகிழ்வூட்டும் "ஒளிச் சிதறல்களா"...?


"எண்ணங்கள்" என்பவை எவை....?

என் மனதின் "கேள்விகள்" இவை..

......ஆயினும்...

என் எண்ணைங்கள் யாவையும்

என் மன "நிலைப்பாட்டின் உருவகமே"......

TVK [kk4646]
 
மனம் என்பது என்ன?

முக்தியை விரும்பும் அன்பர்கள் கேட்கும்
முதல் கேள்வியே," நான் யார்?" என்பது!

அவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி
"மனம் என்பது என்ன?" என்பதே!

மனம் என்பது ஒரு மாய வலை.
மனம் என்பது ஒரு சிலந்திவலை.

எண்ணங்களின் பதிவே மனம்.
எண்ணங்களின் அதிர்வே மனம்.

சங்கிலித் தொடரைப் போலத்
தங்கு தடை இல்லாதது மனம்.

மனத்தைக் கட்டிப் போட்டால்
மகான் ஆகிவிடுவோம் நாம்!

மனத்தைக் கட்டும் மாயத்தை
மாயவனே நல்கிட வேண்டும்!

 
Tamil poem

Thanks for your reply poem..But with difference...

I said the Thoughts are based on the mind status & you said the mind status is based on the thoughts..

A point to be debated...


TVK[kk4646]
 
A new born child has no mind of its own!

As it grows up, it observes the world, forms impressions, mental records,

and remembers its experiences all of which make its mind form and grow.

It is a case of a hen and an egg! Which of the came first?

It is a case of a seed and a tree! Which of them came first?

It is a vicious circle, one leading to another !

Please think it over. I am ready for a debate :)
 
tamil poem..kk4646[TVK]

I feel sad in hearing this from you.. We will miss a good writer..

kk4646[TVK]
 
I am sure everyone is welcome to come and read in this website! :welcome:

This website has more sections discussing more topics in an organized

manner. You can raise any issue here and get authentic replies from well

versed persons in various fields! So bring all your friends here :)
icon4.png
 
Sow.Visalakshi Ramani,

Greetings. A new born child has it's own innocent mind. When the child is able to smile, it smiles at all and sundries. i can appreciate this very well; I am a dark skinned person, have seen hearty smile from white babies; innocent babies have but purity in their minds; happy to smile at everyone; scared of nothing; it could be a growling dog, one more baby.. all are the same for the baby.

It is a nice discussion.

Cheers!
 
dear Mr. Raghy!

If the small babies have a mind, then it is still a clean slate. They fear nothing!

They love everyone! They are free from all the impurities of the mind, the adults

are saturated with. They are precious commodities holding a promise for a better

world tomorrow, to grown ups like us. Children are God's best gifts to man!

with warm regards,
Mrs. V.R.

 
Ms Visalakshi,

I read your these poems just today. I remembered what I wrote a few years back. I am giving that kavithai here. There is a lot of similarities in the thought process.

தலைப்பு: பொங்கி வரும் பெருநிலவு

ஊமையன் ஒரு கனவு கண்டால் அதை
யாரிடம் எப்படிக் கூறிடுவான்
வீணை மீட்டும் விரல்களை இழந்த
வைணிகன் எவ்வாறு உணர்ந்திடுவான்
எல்லாம் உணர்வுகள் உணர்வுகளே

பொங்கி வருது பெரு நிலவு
பூத்து விரியுது புது மலர்
பச்சைப் பசேலென எங்கும்
பரந்திருக்குது புல்வெளி
"நதியில் விளையாடி கொடியில் தலை சீவி"*
நடந்து வருது இளந்தென்றல்

"ஆயிரம் பாத சரங்கள் கிலுககி"*
ஆழமாய் தெளிவாய் ஆறாய்
அழகாய் சுழியாய் அருவியாய்
ஓடையாய் ஒழுகுது நதி

நிலவின் தண்மை, மலரின் மணம்
புல்லின் பச்சை, தென்றலின் வருடல்
ஆற்றின் அழகு எல்லாம் என்ன?
தண்மை என்ன? வெப்பமென்ன?
பச்சை என்ன? நீலம் என்ன?
மணம் என்ன? வீச்சம் என்ன?
உனக்குள் நீயும் எனக்குள் நானும்
உணரும் இந்த நினைவுகள் என்ன?
மொழிகளுக்கப்பால் நின்றிடும் இந்த
புதிருக்கான விடை தான் என்ன?

* இந்தக் குறியிட்ட வரிகள் மட்டும் எனக்கு பிடித்த தமிழ் , மலையாள கவிஞர்களின் வரிகள். அப்படியே எடுத்து கையாண்டிருக்கிறேன்.
 
Last edited:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்

ஒரு குழந்தை ஒளிந்திருக்கின்றது .

பல மனிதர்களுக்குள்ளேயும் ஒரு
பாவலன் ஒளிந்திருக்கின்றாரோ?
:clap2:

அற்புதமான உங்கள் கற்பனைகளை

கற்றவரிடமிருந்தும் மறைத்து ஏன்? :noidea:

இனியாவது உங்கள் கவிதைக்

கனிகளை எமக்குப் படைப்பீர்களா? :hungry:

எத்தனை உண்டாலும் திகட்டாதது
இத்தகைய தமிழ்க் கவிதைகளே! :preggers:
 
Ms. Visalakshi,

Here is one more. This I wrote about 8 years back in a pensive mood after watching a kavadi procession.

தலைப்பு: கேள்வியும் விடையும்.

தாம் திந்தக்கத்தோம்,
தை திந்தக்கத்தோம்.
ஆனந்தத் தாண்டவம்
ஆடினார் ஒரு பக்தர்.

நீறு பூசிய நெற்றி.
கூடு தட்டிய நெஞ்சு.
குழிவிழுந்த கன்னங்களைக்
கிழித்து நின்றது வேல்.

மேச்செருகிய கண்களில்
பேச்சொழிந்த பரவசம்.
கல் விழுந்த நீர்ப்பரப்பாய்க்
கண்டிருந்த என்மனம்.


இந்தத் தீவிரம் இந்த பக்தி
எனக்கேன் சித்திக்கவில்லை?
கற்ற கல்வி காதற்ற ஊசியோ?
பெற்ற ஞானம் பொய்நின்ற ஞானமோ?
கற்றதும் பெற்றதும் கனத்திடும் சுமைகளோ?

விடையைத்தேடி மனக்கசத்துக்குள்
வீறுடன் முங்கியபோது..................
மொழியின் கையறு நிலையாய்............
தாம் திந்தக்கத் தோம் தை திந்தக்கத் தோம்.
 
Last edited:
பக்தி நம்மை மேன்மைப்படுத்த வேண்டும்
பக்தி நம்மை மென்மைப்படுத்த வேண்டும்.

உடலைக் குத்திக் கிழித்துக் கொள்ளும்,
உதட்டில் வேலைச் சொருகிக்கொள்ளும்,

கனலில் இறங்கிக் காலால் நடந்து செல்லும்,
கபாலத்தில் தேங்காய் உடைத்துக்கொள்ளும்,

அசுரபக்தியில் எனக்கும் விருப்பம் இல்லை.
'அவனு'ம் கூட அதை விரும்புவதும் இல்லை.:nono:
 
........
குழிவிழுந்த கன்னங்களைக்
கிழித்து நின்றது வேல்.
........
இது போதுமே!

கையில் தீச்சட்டி ஏந்திச் சூடு ஏற்ற வேண்டாம்;
கையால் அவன் தாளைப் பற்றினால் போதுமே!

காலால் அக்னிப் படுக்கை மிதிக்க வேண்டாம்;
காலால் கோவிலை வலம் வந்தால் போதுமே!

தலை அதிரத் தேங்காயை உடைக்க வேண்டாம்;
தலை வணங்கி அவனைத் தொழுதால் போதுமே!

வாயில் வேலைக் குத்தி ரணமாக்க வேண்டாம்;
வாயால் அவனின் நாமம் ஜபித்தால் போதுமே!

உடலில் சாட்டையால் அடிக்கவும் வேண்டாம்;
உடல் அவன் நினைவில் சிலிர்த்தால் போதுமே!

முதுகில் கொக்கியிட்டுத் தேர் இழுக்க வேண்டாம்;
முதுகில் பாவமூட்டை சுமக்காவிட்டால் போதுமே!


தூய பக்தி வளர்க! :pray: . . :hail:
 
Last edited:
..........
"எண்ணங்கள்" என்பவை எவை...?
....................
TVK [kk4646]
எண்ணங்கள்...

எண்ணங்கள் மனத்தில் எழும் அலைகள்;

அலைகள் என்றுமே ஓய்வதே இல்லை;

ஓயாது இருப்பதால், தொடர்ந்து வரும்;

தொடர்ந்து வருவதால், ஓட்டம் நில்லாது;

ஓட்டம் உள்ளவரை, கற்பனை இருக்கும்;

கற்பனை வற்றினால், எண்ணங்கள் நிற்கும்!


:roll:
 
Just kidding again.... B.K Sir!!

I think I can write more in other's threads...... To receive your appreciation!!

Regards,
Raji Ram :typing: . . . :thumb:
 
Raji Ram and Visalakshi,


The thrust of the theme/idea of my poem is not in the incident which I saw or its details. The last para and penultimate para has the theme. I find that you have not commented about that. Cheers.
 
Raju Sir!

My idea was not to comment about the theme of your poem!
Just wanted to say about the 'asura bhakthi' some people possess!! :whip: . :flame:

Cheers,
Raji Ram
 
Dear Mr. Raju!

The questions riddling a human mind may be in hundreds and thousands-

depending on how much we think

Ignorance is Bliss, but surely we don't to be blissful in that manner.

We want to blissful by knowing all the answers and NOT by not having

any questions!

Search till you find the answers. Then the mind will be filled by pure bliss

and pure peace. Each one has to go on his own quest to find the

answers. None ( father/mother/ guru) can give the answers. They can

guide us and show the right path but the journey is to be taken by each

individual all by himself/ herself!

with warm regards,
Mrs. V.R. :pray2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top