2007 ஆம் ஆண்டு ... நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி ...
அதற்கு முன் சத்தியமாக நான் ஜாதகம் - என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் ... ஜாதகம் பார்த்ததும் இல்லை ....
அந்த சமயம் என் நெருங்கிய உறவினரின் மகன் இறந்து போய்விட்டார்கள். 16 ஆம் நாள் காரியங்களுக்கு அப்புறம் .... இறந்தவரின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து ராமேஸ்வரம் கடலில் எறிந்துவிட்டு வரச் சொன்னார்கள்... சரியென்று நானும் என் நெருங்கிய தோழனும் ... ஜாதகம் சகிதமாக புறப்பட்டோம் .. காரைக்குடி வந்ததும் .. நான் ஜாதகத்தை கையில் வைத்து கொண்டு சரவணனிடம் கேட்டேன் " டேய் , இந்த ஜாதகத்தை வைத்து ஜாதகம் பாக்கிறவங்கள யாரையாச்சும் டெஸ்ட் பண்ணலாமா ??? "
முதலில் தயங்கியவன் பின் ஒப்புக் கொண்டான் ..
பிறகு.. நேரே ஒரு ஜாதகம் பார்க்கும் இடத்துக்கு போனோம்.. பெரிய கூட்டமாக இருந்தது ... பெயர் எழுதி வைத்துவிட்டு எங்கள் வருகைக்காக காத்திருந்தோம் .. நீண்ட நேர காத்திருப்பின் பலனாக எங்களை கூப்பிட்டார்கள் .. உள்ளே சென்றதும் சற்று நேரம் அந்த அறையை இற்று பார்த்தேன்... அந்த ஜாதகம் பார்க்கும் பெரியவருக்கு எப்படியும் ஒரு 75 வயதை தாண்டியிருக்கலாம்... சோமசுந்தர அய்யர், தடித்த உருவம் , அறை முழுவதும் புத்தகங்கள்... கடவுளின் படங்கள் என ரம்மியமான இடம்...
ஜாதகத்தை கொடுத்தேன்... வாங்கும் போது " தம்பி நீங்க ஜாதகம் எப்படி ?? " என்றார் ... சரவணனுக்கு பயம்.. அமைதியாக இருந்தான்... நான் " இல்லங்க சும்மாதான் பாத்துட்டு போலாம்னு வந்தோம் என்றேன்" . இறந்தவரின் வயதும் எங்கள் வயதேன்பதால் அவருக்கு நம்பிக்கை வந்தது...
நீண்ட நேர கணக்கீட்டுக்கு பின்... அவர் சொன்ன வரிகள் " இந்த ஜாதகத்துல இருக்கிற ஆள் இறந்து 15 நாளைக்கு மேல ஆகணுமே !??! , ராகு கேது என்னமோ கணக்கெல்லாம் சொல்லி சொன்னார் " ...நீங்க என்ன சோதிச்சு பாக்கணும்னு வந்தேளா ? சரி சொல்றேன் கேட்டுக்கோங்க "இவர் இறந்து 15 நாட்களுக்கு மேல ஆய்டுச்சு , அதனால இத கொண்டு போய் தண்ணீல வீசுங்க தம்பி!!" இனிமேல் இந்த மாதிரி யார்கிட்டேயும் விளையாடாதீங்கனு சொல்லி அனுப்பினார் "
50 - பணம் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தோம் ராமேஸ்வரத்துக்கு .....
எனக்கு மிக்க ஆச்சர்யம் !!! சரவணன் 2 நாள் தூங்கவே இல்லை !!!!
இது எப்படி சாத்தியம் ????
ராகு கேது என்று உண்மையிலே கிரகங்கள் இருக்கிறதா ???
இந்த குறித்து ஏதும் வேதங்களில் சொல்லபட்டிருக்கிறதா ???
தயவு செய்து விளக்கிச் சொல்லுங்கள் .....
நன்றிகளுடன்
அசோக்