ஸ்ரீ ஆதி அத்திவரதர் மூலவர் - 5ம் நாள் அன்று சேவை சாதி்த்தபடி
மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸ்ரீ தேவராஜ மங்களம்.
வாரிதச்யாமவபுஷே விராஜத் பீதவாஸஸே
வாரணாசலவாஸாய வாரிஜாக்ஷாய மங்களம்!
தாமரைக்கண்ணன்:
எம்பெருமானார் இளையாழ்வாராக இருந்த காலத்தில் பூர்வபக்ஷக்ரந்தங்களை
வாசிக்கும் போது தினந்தோறும் தேவப்பெருமாளை சேவிக்க வருவார் என்று
அறியப்படுகிறது. பெருமாளின் கண்ணழகு அவரை ஈர்த்திருக்கிறது! அழகு வெள்ளம்
திருவுள்ளத்தில் பாய்ந்து தங்கியது. தேவப்பெருமாளின் கண்ணழகிலே மிக்க
ஈடுபாடு கொண்டிருந்தபடியால் தானே யாதவப்ரகாசன் கூறிய அபார்த்தத்தை
கண்டித்து தத்வார்த்தத்தை சொல்ல முடிந்தது. கரியவாகிப்புடை பரந்து
மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய அல்லிக்கமலகண்கள் யாரைத்தான்
பேதமை செய்யாது!
"நதேருபம் நசாகாரம் நாயுதானி நசாஸ்பதம்" என்கிறது ஜிதந்தே ஸ்தோத்திரம்.
அவனுடைய வடிவும் அவனுக்கு அன்று. நமக்கு தான். "இந்தளூர் எம்பெருமானே!
உன்னுடைய அழகை அனுபவிக்கக் கைங்கர்யம் செய்ய நாட்டங்கொண்டு ஓடி வந்தேன்,
ஆனால் நீ உன்னை மறைத்துக் கொள்கிறாய், இதனால் என்னப்பயன். கதவை மூடிக்
கொண்டு உன் அழகை நீயே பார்த்து கொண்டு ரசித்துக் கொண்டிரு " என்றார்
திருமங்கையாழ்வார்.
தேவப்பெருமாளுடைய திருமேனியோ பீதக வாடை! கண்களோ செந்தாமரைக்கண்கள்!
கருமுகில்போல திருமேனி நிறத்தைக் காட்டி விமுகர்களையும் தன்னிடம்
அழைக்கிறான். பீதாம்பரத்தினால் தானே " மங்களானாம் ச மங்களம்" என்பதை
உணர்த்துகிறான். திருக்கண்களால் குளிரக் கடாக்ஷிக்கிறான்! ஓருவரையும்
விடுவதற்கு அவனுக்கு மனமில்லை. எப்படியாவது ரக்ஷித்தேதீர வேண்டும் என்ற
கருணையுள்ளம் கொண்டவணல்லவோ அவன். இது தேவப்பெருமாளின் அகலகிலா
விளையாட்டு! அவனுடைய பேரருளை அறுதியிட்டுச் சொல்லவும் முடியுமா!
வாரிதச்யாமவபுஷே விராஜத் பீதவாஸஸே
வாரணாசலவாஸாய வாரிஜாக்ஷாய மங்களம்!
எழுத்து : ஸ்ரீ Ramanujan Pillailokam ஸ்வாமி
படம் : ஸ்ரீ Vijay Vibhav ஸ்வாமி