*03/03/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக் கொண்டு வருகின்ற வரிசையிலே பும்ஸவனம் என்கின்ற சம்ஸ் காரத்தை மேலும் தொடர்கிறார்*
*இதை எப்போது செய்ய வேண்டும் எந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்பதை விரிவாக தெரிந்து கொண்டோம். அடுத்ததாக இந்த பும் சுவனத்திற்கு வேண்டிய வஸ்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.*
*இதற்கு முக்கியமான வஸ்துக்கள் 2. அதில் ஆல மொட்டை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய சம்ஸ்காரங்கள் ஆன கர்பாதானத்தில் இருந்து ஆரம்பித்து பார்த்தால் மிகவும் விலையில்லாத வஸ்துக்கள் ஆகத்தான் பார்த்து மகரிஷிகள் காண்பித்துள்ளனர். தங்கம்
வெள்ளி கட்டுக் கட்டான ரூபாய்கள் போன்றவைகள் இல்லாமல், காரணம் யாராக இருந்தாலும் இதை செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*
*இந்த அனுஷ்டானங்கள் எல்லாவற்றிக்கும் உபயோகிக்க கூடியதான வஸ்துக்கள் அனைத்து இடங்களிலும் சகஜமாக கிடைக்கக்கூடியதான வஸ்துக்கள் ஆகத்தான் நமக்கு காண்பித்துள்ளனர்.*
*நமக்கு எந்த ஒரு வஸ்துவையும் வியாபாரமாக பார்த்து பார்த்து பழக்கம் ஆனதினால் தான், பணம் கொடுத்து அனைத்தையும் வாங்குகிறோம். ஆனால் நாமே தேடி போய் அதை சேகரித்துக் கொண்டு வந்தால் அதற்கு பலன்கள் அதிகம்.*
*தானே எடுத்துக்கொண்டு வைத்து செய்வதில் பலன்கள் ஜாஸ்தி. ஸ்னானம் செய்வதற்கு தானே ஜலத்தை எடுத்து வைத்துக்கொண்டு செய்தால் அதற்கு பலன்கள் ஜாஸ்தி. தன்னுடைய வேஷ்டியை தானே அலசி காயப்போட்டு மடித்து வைத்துக்கொண்டு நாம் உபயோகப்படுத்தினால்
அனுஷ்டானங்கள் செய்தால் அதற்கு பலன்கள் ஜாஸ்தி. தான் செய்யக்கூடிய தான பூஜைக்கு புஷ்பங்களை தானே பறித்துக் கொண்டு வந்து செய்தால் அதற்கு பலன்கள் ஜாஸ்தி. தான் செய்யக்கூடிய தான அனுஷ்டானங்களுக்கு தர்ப்பையோ சமித்துகளோ தானாகவே சேகரித்துக் கொண்டு வந்து அதை உபயோகப்படுத்தினால் அதற்கான பலன்கள் ஜாஸ்தி.*
*நம்மால் எடுத்துக் கொண்டு வர முடியவில்லை அதனால் செய்யாமல் விட்டு விடக் கூடாது என்பதினால், இன்னொருவரிடம் பைசாவை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கிறோம். நம்முடைய அனுஷ்டானங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய வஸ்துக்கள் எல்லாம் மிகவும் சாதாரணமான வைத்து களாகத்தான் மகரிஷிகள் காண்பித்துள்ளனர்.*
*அதில் முதல் வஸ்து ஆல மொட்டு. இதை எவ்வாறு சேகரிக்க வேண்டும், நிக்ரோதஹா, நிக்ரோதம் என்றால் ஆலமரத்திற்கு பெயர். அந்த ஆலமரத்தின் கிழக்குப் பக்கமாக போகக்கூடிய கிளையில் இருந்ததோ, அல்லது வடக்கு திசை நோக்கி போகக்கூடிய கிளையிலிருந்தோ நாம் அந்த ஆல மொட்டை சேகரிக்க வேண்டும் என்று ஆபஸ்தம்பர் ஒரு சூத்திரம் மூலமாக காண்பிக்கிறார்.*
*_அந்த ஆல மொட்டும் எப்படி இருக்க வேண்டும் என்றால் வெறும் மொட்டாக இருக்கக் கூடாது. இந்த ஆல மொட்டு எப்படி இருக்கும் என்றால் ஆண்குறியை போன்று இருக்கும். அந்த மொட்டு
வின் பக்கத்தில் ஆலங்காய் இரண்டு ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த காய் உடன் சேர்ந்து அந்த ஆல மொட்டை எடுக்க வேண்டும் வெறும் ஆல மொட்டை பறிக்கக்கூடாது. இப்படி அதை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்._*
*அதாவது தென்மேற்கு தென்கிழக்கு வடமேற்கு வடகிழக்கு போன்ற பகுதிகளில் அந்த கிளையில் ஆல மொட்டு இருக்குமேயானால் அதை நாம் சேகரம் செய்யக்கூடாது. இப்படி கிளைகள் குறுக்கும் நெடுக்குமாக போயிருந்தால் அதிலிருந்து எடுக்கக்கூடாது.*
*அதேபோல் தெற்கு மேற்கு திசைகளில் அந்த கிளைகள் போயிருந்தால் அதிலிருந்து இருக்கக்கூடிய மொட்டுக்களையும் எடுக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கி சென்றிருக்க வேண்டும் அதிலிருந்துதான் நாம் அந்த மொட்டை காயுடன் சேர்த்து எடுக்க வேண்டும். அது முக்கியமான வஸ்து அதற்கு தான் ஃபும் என்று பெயர்.*
*இதை நாம் முக்கியமாக வைத்துக்கொண்டு செய்வதினால் இதற்கு பும்ஸுவனம் என்று பெயர். இது நமக்கு ஆபஸ்தம்பர் காண்பித்து கொடுத்த வழி. ஒவ்வொரு சூத்திரங்களையும் ஒவ்வொரு மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. ஆபஸ்தம்பர் இந்த சம்ஸ் காரத்திற்கு ஆலமொட்டை முக்கியமாக சொல்லியிருக்கிறார்.*
*அதேபோல் இன்னொரு திரவியம், ஒரு பெண் குழந்தைதான். அந்தப் பெண் குழந்தை சின்ன குழந்தையாக கன்னியா குழந்தையாக இருக்க வேண்டும். காயுடன் கூடிய அந்த மொட்டை அந்தப் பெண் குழந்தையிடம் கொடுத்து, அதை அம்மியில் வைத்து அந்தப் பெண் குழந்தையை நன்றாக
இடிக்க சொல்ல வேண்டும். பாலை விட்டு நன்றாக இடிக்க வேண்டும். அந்த எசன்ஸ் அதிலிருந்து வர வேண்டும் அது போல் அதை எடுக்க வேண்டும். அப்படி இடிக்க சொல்லும் போது கூட அந்தப் பெண் குழந்தையை ஆம்பள ஆம்பள என்று சொல்லு என்று சொல்வது வழக்கம்.*
*_அதை தான் மூக்கில் பிழிவது என்று நமக்கு வைத்து கொடுத்திருக்கிறார்கள். அந்த பும்சுவனத்திற்கு என்று உள்ள மந்திரங்களை எல்லாம் சொல்லி ஆகுதிகளை கொடுத்து, ஜெயாதியும் செய்து, பிறகு அக்னிக்கு மேற்கே, அந்த கர்ப்பவதியை மேற்கு நோக்கி அமர்த்தி, அவளுடைய சிறசு மேல் நோக்கி பார்க்க வேண்டும். அப்பொழுது அந்தப் பெண்ணின் மூக்கு துவாரம் கிழக்கு நோக்கி இருக்கும். மேற்கு நோக்கி உட்கார்ந்து அண்ணாந்து பார்த்தால் மூக்கின் துவாரம் கிழக்கு நோக்கி இருக்கும். அப்படி அந்தப் பெண்ணை அமர்த்தி ஒரு புது வஸ்திரத்தில்,
அந்த கன்னிகா குழந்தை இடித்த அந்த ஆல மொட்டை மடித்து வலது கட்டை விரலுக்கு மேல் வைத்து, இந்த பும்ஸுவன மந்திரத்தை சொல்லி, மூக்கிலே பிழிய வேண்டும். அதற்கான மந்திரமே பும்ஸுவனமஸி. இந்த மந்திரத்தை சொல்லி அந்தப் பெண்ணின் வலது மூக்கில் பிழிய வேண்டும்.
அந்த புருஷனுடைய வலது கட்டை விரலின் வழியாக அந்தப் பெண்ணின் வலது மூக்கில் அந்த ரசம் ஆனது பிழியபட வேண்டும். ஒரு சொட்டு மூக்கு துவாரம் வழியாக உள்ளே செல்ல வேண்டும். இதுதான் முகூர்த்தம் பும்ஸுவனத்திற்க்கு. இந்த முகூர்த்தம் செய்வதற்குத்தான் நாம் லக்னங்கள் எல்லாம் பார்த்து வைக்க வேண்டும்._*
*_அதற்கு தகுந்தார்போல் பும்ஸுவனம் ஆரம்பித்து, முதலில் புண்யாகவாசனம், நாந்தி, இவைகளெல்லாம் செய்துகொண்டு, பிறகு இந்த பும்ஸவனம் ஆரம்பித்து செய்ய வேண்டும். இந்த முகூர்த்தத்திற்கு முன்னர், ஹோமம் செய்கிறோம். அதில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள்,
அற்புதமான மந்திரங்கள். நம்முடைய சந்ததிகள் வாரிசுகள் என்பது, நம்முடைய வாழ்நாளில் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அந்த மந்திரங்கள் காட்டுகின்றன. மிக அற்புதமான மந்திரங்கள். அந்த மந்திரங்களை சொல்லி தான் தேவதைகளுக்கு நாம் ஆகுதிகள் செய்கிறோம்
பும்ஸவனத்தில். அந்த மந்திரங்களை நாம் சாதாரணமாக பாராயணம் செய்தாலே நமக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரங்கள். அந்த மந்திரங்களின் அர்த்தங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்._