• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

chitrAnnam: kalanda-sAdam

Status
Not open for further replies.

saidevo

Active member
When did you last have a course of chitrAnnam--kala~ndasAdam? What is your favourite item: puLiyOdarai (tamarind rice), lemon rice, tomato rice, coconut rice, vegetable briyANi, or another exotic variety? One good thing about such mixed rice varieties is that you have best of all the worlds and excess of none.

This thread is about serving chitrAnnam, as it relates to our body, mind and soul, so we have something of many things. Members might add value to this thread with similar items and varieties. I have added an English paraphrase where I felt it could be of help.

001. From the booklet
சில தர்மசாஸ்த்ர ப்ரச்னங்களுக்கு ஸமாதாங்கள்

published around the 1940s by the Veda dharmashAstra paripAlana sabhA, KumbakONam

சந்த்யாவந்தனம்

ப்ரச்னம்: ஆசமன தீர்த்தத்தின் அளவு என்ன?

ஸமாதானம்: ஹ்ருதயம் வரையில் போகக்கூடிய தீர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, வலதுகையில் உளுந்து முழுகும் அளவேதான் (இதுவே வலதுகை நடுவிலிருக்கும் மாஷரேகை முழுகும் அளவு என்றும் சொல்வதுண்டு) ஹ்ருதயம் வரையில் செல்லக்கூடியது. கையை கோகர்ணாக்ருதியாக வைத்துக்கொள்ளவேண்டும். (கை கட்டைவிரலை மடக்கி ஆள்காட்டி விரலுக்குப் பின்புறமாக நடுவிரலின் நடுரேகையைத் தொடும்படி வைத்துக்கொள்வது).

The amount of water one should take for Achamanam is the measure that could sink a grain of the Urad dahl. This is also described as the measure that could sink the mASha-rekhA in the palm. This amount of water is supposed to get to the heart when sipped. During Achamanam, the right hand should be folded in the shape of gokarNa--cow's ear.

*****

ப்ரச்னம்: நடுராத்ரியில் ஆசமனம் செய்யலாமா?

ஸமாதானம்: இரவில் இரண்டு யாமங்களில் ஆசமனம் செய்யக்கூடாது. ஆனால் மலமூத்ர விஸர்ஜனம் செய்தால் ஆசமனம் செய்யவேண்டும்.

Achamanam should not be done in two yAmas of night (one yAma=3 hours). But then if one needed to go to the toilet, he should do Achamanam thereafter.

*****

ப்ரச்னம்: ஆசமனத்தை ஆஸனத்தில் உட்கார்ந்துகொண்து செய்யலாமா?

ஸமாதானம்: கூடாது. குக்குடாஸனமாக பாதங்களை பூமியில் வைத்துக்கொண்டு, முழங்கால்களுக்குள் இரண்டு கைகளும் இருக்கும்படி வைத்துக்கொண்டு, ஆஸனத்திலோ பூமியிலோ ப்ருஷ்டபாகம் படாமல் உட்கார்ந்துகொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

Achamanam should not be done sitting on an Asanam--seat. One should sit in the posture of kukkuTASanam--stance of a hen, keeping his feet on the ground, ensuring that the pruShThabhAgam--buttocks, does not touch the ground and keeping both hands in between the knees.

*****

ப்ரச்னம்: காயத்ரீஜபம் செய்யும்போது கைகளிரண்டும் சேர்ந்திருக்கலாமா?

ஸமாதானம்: சேர்ந்திருக்கக்கூடாது. ஜபகாலத்தில் இரண்டு கைகளையும் வஸ்த்ரத்தினால் மூடிக்கொண்டு, இரண்டு கைகளினாலும் கணக்குச் செய்துகொண்டு ஜபிக்க வேண்டும் என்றும், கைகள் உத்தானங்களாக, முகத்திற்குச் சரியாக காலையிலும், மார்புக்குச் சரியாக மத்யானமும் (ஸ்தப்தகரங்களாக), ஸாயங்காலம் நாபிக்குச் சரியாக அதோமுகமாகவும், ஒன்றுக்கொன்று சேராமல் கைகளை வைத்துக்கொண்டு, வலது கையில் நடுவிரலில் ஜபமாலையை வைத்துக்கொண்டு, கட்டைவிரலினால் எண்ணிக்கை செய்யவேண்டுமென்றும், ஜபமாலையை இடக்கையால் தொடக்கூடாது என்று சொல்லியிருப்பதாலும் பர்வங்களினால் எண்ணிக்கை காயத்ரீ ஜபத்திற்கு விசேஷமாகச் சொல்லப்பட்டிருப்பது போல், ருத்ராக்ஷ குசக்ரந்திகளையும் பர்வாவுக்குச் சமானமாகவும் விசேஷமாகவும் சொல்லப்பட்டிருப்பதாலும், இரண்டு கைகளும் ஒன்றுசேர்ந்து இருப்பதற்கு ஹேது இல்லை.

Question: Can both hands be kept together when doing the gAyatrI japam?

Answer: No, they should not be. When doing the japam, one should close the hands with a vastram--cloth, and count with both hands. The hands should be stretched out in level with the face in the morning, in level with the chest at noon, and in level with the navel in the evening. The rosary should be kept hanging from the center finger of the right hand and the beads should be pushed with the thumb in counting. The rosary should not be touched with the left hand. The knuckles as well as the rudrAkSha beads are spoken with distinction for counting, in the scriptures.

*****
 
002. From the collection of poems titled
நடுத்தெருவில் சத்தியம்--Truth in the middle of the street
by ’குடிசைவாசி’--'hut dweller'


’வீட்டில் இல்லையென
அப்பா
சொல்லச் சொன்னார்’

முதுகில் விழுந்த
முதல் அடியில்
முகத்தில் செத்தது
புன்னகை.

பொய் பழகிய
முதல்நாள்!

"He's not at home
my father
asked me to tell you"

In what fell on my back
as the first blow
died on the face
my smile.

Learned to lie
on that first day!

*****

எங்கு பார்த்தாலும்
ஈயாய் மொய்த்துக்கிடக்கும் கூட்டம்...

நானும் மொய்க்காவிட்டால்
நாகரிகம்
ஒதுக்கிவிடும் பயத்தில்
ஓடி ஓடி மொய்க்கிறேன்
தெருவாரோடு...
ஊராரோடு...
நண்பர்களோடு...
நாட்டினரோடு...

என் அடையாளம் இழக்கும்
கூட்டத்தில்
என்னையே எனக்கு
அடையாளம் தெரியவில்லை...!

ஒற்றையடிப் பாதைகளை
அழித்துவிட்டபிறகு
என் முகம்
அழிந்ததில் வியப்பில்லை!

Wherever I look
crowd that throng like flies...

If I don't throng
this civilization
will ignore me, in that fear
running here and there, I throng
with the street people...
with the town people...
with the friends...
with the countrymen...

In losing my identity
in the crowd
I myself
can't recognize me!

After paths of singular foot
have been destroyed
my face
no wonder it was gone too!

*****

என் வாய்தானே...
ஆழ்மனத்திலிருந்து
சிரித்தால் என்ன?
ஆசையாய் இருக்கிறது.
கிறுக்கன் என்று உலகம்
கிழித்துப் போட்டுவிட்டாள்?
...

எச்சில் வழிய
என் குழந்தை சிரிப்பதுபோல்
உயிர்வரை சிரிக்கவேண்டும்
எங்கே சிரிப்பது?
எப்படிச் சிரிப்பது?

It's only my mouth...
deep from the mind
why not laugh?
It's my longing but then
as a madman if the world
tears me down?
..
.
Drooling,
as my child laughs
I should laugh up to my soul
Where to laugh?
How to laugh?

*****

பூக்காரி போன தெருவில்
குப்பை வண்டி
பிரபஞ்சமே நாறுகிறது!

On the street treaded by the flower-selling woman
the garbage wagon
the universe itself stinks!

*****
 
001. From the jnAnayoga verses of Bhadragiri siddhar, titled
மெய்ஞானப் புலம்பல்--wailing for real knowledge


13: தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்?

13: Father, mother, children, and the co-born all delusions: thus
to discern in mind and sever the deceit--at what time?

32: வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
எகாந்தமாக இருப்பதினி எக்காலம்?

32: VedAnta-Veda--throwing it all away, in niShThA--firm state of meditation,
to remain in solitude--at what time?

49: புல்லாய் விலங்காய் புழுவடிவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?

49: As the grass, beast, worm and man
all births' darkness removed--at what time?

62: நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?

62: As water-borne bubble impermanent, this life giving up, your
blissful deluge of grace to gush--at what time?

[to continue...]
 
மெய்ஞானப் புலம்பல்--wailing for real knowledge (contd.)

66: ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்?

66: In the AdhAra-mUlam--root chakra, at GaNapati's
lotus feet, to stand bowing--at what time?

99: ஓடாமல் ஓடி உலகை வலம்வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்?

99: Without running around, going the world around
searching, within myself to have darshan--at what time?

104: என்னை அறிந்துகொண்டே எங்கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்?

104: Knowing myself, and being with my lord,
to know that state and rest in fullness--at what time?

167: கடலில்‍ஒளித்திருந்த கனல்‍எழுந்து வந்தாற்போல்
உடலிலொளித்த சிவம்‍ஒளி செய்வது எக்காலம்?

167: Hidden in the sea, like that Fire came up rising,
Hidden in the body, that Shivam shining--at what time?

180: செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்?

180: Like rust in copper, swallowing the Shivam, and
becoming shrivelled, those three malas--sins, to asunder--at what time?

191: நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்?

191: As me, as you, and we both as another
all are you, in mind to get it acceptable--at what time?

230: மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பது‍உனை எக்காலம்?

230: Removing the delusion, destroying the karma to come,
and distinguishing this body, to discern you--at what time?

*****
 
Mr. Saidevo,
[h=2]chitrAnnam: kalanda-sAdam[/h]In american parlance this is typical bait-and-Switch tactics of selling what ever you are selling. LOL
You drag us in to your thread with mouth watering ideas in the title of the thread.
Then you write some philosophy in squiggly letters, in Tradition category. Where are we going, are you going to invite us for the mouth watering food?
 
namaste shrI Prasad.

Let me explain my idea behind this thread. It is good that of late we find increasing number of Tamizh texts in several threads across many forums, with special contributions from smt.VR, Raji Ram and shrI London Swaminathan. I thought I could add my bit to them.

I have a good collection of printed Tamizh texts and books in Tamizh, which I am browsing off and on. Besides, I have just started my efforts of compiling a Personal Library of Tamizh texts, downloading pdf files from the Internet. In that process, I happen to browse some books, and that gave me the idea of sharing what interests me. Since the subjects are varied--religious, spiritual, philosophical and secular--I have titled this thread chitrAnnam--kalanda sAdam.

I have no intention to 'bait and catch' anyone, nor do I intend to 'sell' anything here, which is the reason I have in the OP asked members to add their contributions of Tamizh texts that nourish the body-mind-soul (karma/dharma-japa/dhyAna-Atma) or anything that would be pleasing and peaceful to read. I have added an English paraphrase to the Tamizh texts for the benefit of members and readers who are not Tamizh-literate. You are welcome to add your bit.

The overall idea is to give samples from the spiritual, philosophical, religious and secular Tamizh literature, to the extent I am familiar with it.
 
namaste shrI Prasad.

Let me explain my idea behind this thread. It is good that of late we find increasing number of Tamizh texts in several threads across many forums, with special contributions from smt.VR, Raji Ram and shrI London Swaminathan. I thought I could add my bit to them.

I have a good collection of printed Tamizh texts and books in Tamizh, which I am browsing off and on. Besides, I have just started my efforts of compiling a Personal Library of Tamizh texts, downloading pdf files from the Internet. In that process, I happen to browse some books, and that gave me the idea of sharing what interests me. Since the subjects are varied--religious, spiritual, philosophical and secular--I have titled this thread chitrAnnam--kalanda sAdam.

I have no intention to 'bait and catch' anyone, nor do I intend to 'sell' anything here, which is the reason I have in the OP asked members to add their contributions of Tamizh texts that nourish the body-mind-soul (karma/dharma-japa/dhyAna-Atma) or anything that would be pleasing and peaceful to read. I have added an English paraphrase to the Tamizh texts for the benefit of members and readers who are not Tamizh-literate. You are welcome to add your bit.

The overall idea is to give samples from the spiritual, philosophical, religious and secular Tamizh literature, to the extent I am familiar with it.

No worries mate, I was just playing with you. LOL
 
004. 'Easy Stories' from 'A Tamil Prose Reading-=Book'
published in 1859 by the Rev. G.U.Pope


1. The ascetic and the fisherman

எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்நியாசி ஒரு ஏரிக்கரை மேலே போனான்; போகும்போது ஒரு செம்படவன் அந்த ஏரியிலே மீன் பிடித்தான். சந்நியாசி செம்படவனைப் பார்த்து, "ஐயோ! நீ எப்போது கரை ஏறுவாய்?" என்றான். "ஐயா, என் பறி நிரம்பினால் கரை ஏறுவேன்" என்றான்.

An ascetic, who would not kill any life, walked on the banks of a lake. When he was going, (he saw) a fisherman trying to fish in the lake. Looking at the fisherman, the ascetic said, "Alas! When would you get to the shore?" "Sir, if my load is full, I would get to the shore", said the fisherman.

[The point is the double meaning of கரை ஏறு--kaRai Eru--ascend to the shore.]

*****

3. The inattentive listener

ஒரு குருக்கள் தன் சீஷனுக்கு ஞானங்கள் உபதேசித்தார்; உபதேசிக்கும்போது, சீஷன் தன் வளையிலே நுழையப்போகும் எலியைப் பார்த்து, அதன்மேலே நினைப்பாக இருந்தான். குரு உபதேசித்து ஆன உடனே, "சீஷா எல்லாம் நுழைந்ததா?" என்றான். -- சீஷன், "எல்லாம் நுழைந்தது, வால் மாத்திரந்தான் நுழைய இல்லை," என்றான். ஆதலால், மூடர்களுக்குச் சொல்கிற புத்தி இப்படி இருக்கும்.

A guru was teaching jnAnam to his shiShya--student. When he was doing it, the student was keenly watching a rat that was about to enter its burrow. Soon after he finished his teaching, the guru asked, "shiShya, everything entered (your head)?" The shiShya replied, "Everything entered but the tail did not get in." Therefore, any buddhi--teaching wisdom, to the mUDha--stupid, would be in this manner.

*****

8. The merchant and the blockhead

ஒரு மூடன் ஒரு செட்டி பின்னே கூடிக்கொண்டு, ஊர்ப்பயணம் போனான். போகும்போது மெத்தக் கருக்கல் ஆனபடியினால் ஒரு மைதானத்திலே இவன் படுத்துக்கொண்டான். செட்டி சமீபத்திலே ஒரு செடி மறைவிலே படுத்துக்கொண்டான். இப்படி இருக்கச்சே வழியில் போகிற திருடர் காலிலே மூடன் கால் தட்டுப்பட்டது. ஒரு திருடன், "இதென்ன? கட்டை போல் இருக்குதே" என்றான். மூடனுக்குக் கோபம் வந்து, "போ! போ! உன் வீட்டுக் கட்டை இடுப்பிலே ஐந்து பணங்கூட முடிஞ்சுகோண்டு சட்டமாய்ப் படுத்து இருக்குமோ?" என்றான். திருடர் அவனைப் பிடித்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போகிறபோது, "இந்தப் பணம் செல்லுமோ செல்லாதோ?" என்று பேசிக்கொண்டார்கள்.--மூடன், "ஆ! என் பணம் அப்படிப் பட்டதா? வேண்டும். ஆனால் செல்லுஞ் செல்லாததுக்கு இதோ, செட்டியார் இருக்கிறார், காட்டுங்கள்," என்று அந்தச் செட்டியைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். அவர்கள் செட்டியிடத்தில் இருந்த நூறு வராகனையும் பறித்துக்கொண்டு போனார்கள். ஆகையால், மூடர்கள் சேர்க்கையாற் றப்பாமல் கெடுதி வரும்.

A blockhead accompanying a CheTTi--merchant, went on a journey. When they were travelling, as it became dark, this man lay down on a ground, while the merchant reclined behind a cluster of plants. When this was so, the blockhead's leg tripped one of the thieves who were going that way. The thief said, "What this this? Looks like a log?" Getting angry, the blockhead said, "Go, go! Would the log in your house be lying down as a frame, tying five coins of money on its hip?" When the thieves caught him, seized the money and started moving away, they discussed among themselves, "Whether this money would be passable or not?" Said the blockhead, "Ah! Is my money such? It's your luck. But then to know if it is passable or not, this CheTTiyAr--merchant, is here, show him", and pointed to the merchant lying nearby. They seized the hundred varAhans of money the CheTTi had and went their way. Thus, with the company of blockheads, ruin is sure to come.

*****
 
005. From 'AchArakkOvai' by peruvAyin muLLiyAr, a dharma-shAstra book of the Tamizh Sangam times:
ஆசாரக்கோவை: பெருவாயின் முள்ளியார்


The 'AchArakkOvai'--collection of rules of conduct, which is among the shorter eighteen texts of the Tamizh Sangam literature, is a dharma-shAstra based on its Sanskrit originals, such as the shukra-nIti and other dharma, gRuhya sUtras. Here we look at the verses that are relevant to our times.

The eight qualities to acquire for a life of dharma

1: நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நாட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.

1: Not forgetting the help done by the others,
patience (being calm and peaceful),
speaking in words that do not hurt,
ahiMsA--being harmless towards all beings,
education,
being philanthropic in life,
gaining wisdom in life,
seeking friendship with the wise,
--these eight are the seeds of life discipline prescribed.

What does one who leads a daily life of dharma gain?

2: பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

2. Birth in good lineage, long life, wealth, elegance in appearance,
ownership of land, fame and speech which wins regard, education, and freedom from disease
--these eight benefits will be attained by those who do not swerve from dharma in daily life.

Five great sins that cause the fall and gets life in hell

37: பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப்படுவதூ‍உம் அன்றி நிரயத்துச்
செவ்வழி உய்த்திடுத லால்.

37: Coveting another man's wife, drinking, thievery, gambling, and murder
--those who know dharma well in life would never think about,
as these sins not only would make one despised but would lead him to hell.

Five great occasions for charity

48: கலியாணம் தேவர் பிதிர்விழா வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.

48: One's own marriage, pujas related to gods, rituals related to manes, festivities, and yajnas (vedic sacrifices),
on these five days do not fail to donate,
and feed the guests too.

Four things to be careful about

84: அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்.

84: The snake in its burrow, the king (government), fire,
and the lion in its den--these four things,
are young, easy, trained/familiar, thinking thus,
if one is carless, they would cause him trouble.

No self-promotion

88: உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியலார்
திறத்துளி வாழ்துமென் பார்.

88: Won't speak about help done to others; won't belittle food given by others;
won't brag about their own deeds of dharma, or observances;
--those who emulate the dharmic life of elders.

Four things to preserve like gold

95: தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றி காத்துய்க்க உய்யாக்கால்
மன்னிய எதம் தரும்.

95: One's own body, wife, wealth pledged for later redemption, for one's one life
carefully saved wealth--these four things,
should be preserved like gold; otherwise,
it would result in much suffering.

Nine people who are exempted

100: அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற்றார்.

100: A foreigner unfamilar with these rules of conduct, a man in poverty, a man of advanced age,
a boy, a dead man, a frightened man, a man who dines,
a man in government service, a newly married man
--these nine people are, so to say, exempted from these rules of conduct.

*****
 
006. ponniyin selvan--son of the river Ponni (Cauvery), Kalki Krishnamurthy's magnum opus

ponniyin selvan is Tamizh a historical novel in five volumes, narrating the story of the great Chozha King RAjarAja Chozhan and his family. By all standards this is an unputdownable masterpiece, which I would rank among the best in the world. For more details, check this link: Ponniyin Selvan - Wikipedia, the free encyclopedia

The book can be downloaded with a partial English translation here:
Project Madurai - List of works
(pm0169 series for Tamizh, and pm0278 series and pm0386 for English)

In the second chapter of the book, the author describes an interesting public debate between a devotee of Shiva and a devotee of ViShNu, which was about to turn ugly involving a crowd of supporters for both sides. Vallavaraiyan Vandiya Devan, a leading character of the novel, tries to mediate the sides with a humourously chiding talk.

இரண்டாம் அத்தியாயம்
ஆழ்வார்க்கடியான் நம்பி

அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். பிறகு என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைக் கவனித்தான்.

Ponniyin Selvan: Chapter 2 -- AzhvAr-aDiyAn Nambi

It surprised him to find only three persons involved in the debate. Even though they were merely three men, the crowd around them periodically cheered their chosen favorites rather loudly. (Vallavaraiyan) Vandiya Devan realized the cause for this commotion and watched to find out the reason for the argument.

வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்வபுண்டரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும் குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார். இன்னொருவர் தமது மேனியெல்லாம் பட்டை பட்டையாய்த் திருநீறு அணிந்திருந்த சிவபக்தர். மூன்றாவது மனிதர் காவி வஸ்திரம் தரித்துத் தலையையும் முண்டனம் செய்து கொண்டிருந்தார். அவர் வைஷ்ணவரும் அல்ல, சைவரும் அல்ல, இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது.

Of the three men engaged in the debate, one was a vaiShNava bhakta shikhAmaNi--an exceptional devotee of the VaiShNava faith, who wore the sandal paste as Urdhva-puNDra--vertical (nAmam) marks and sported a topknot on his forehead. He had a short wooden staff in his hand; he seemd quite strong, reinforced with strength (like the log of a tree), in his short, squat frame. The other was a shiva-bhakta--devotee of Shiva, wearing the sacred ash all over his devout body in broad bands. The third man wore saffron robes and had his head completely shaved. It became known that he was neither a VaiShNava nor a Shaiva but an Advaita VedAntin who is past these two sects.

சைவர் சொன்னார்: "ஓ, ஆழ்வார்க்கடியான் நம்பியே! இதற்கு விடை சொல்லும்! சிவபெருமானுடைய முடியைக் காண்பதற்குப் பிரம்மாவும், அடியைக் காண்பதற்குத் திருமாலும் முயன்றார்களா, இல்லையா? முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா? அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார்?"

The Shaiva devotee said: "O AzhvAr-aDiyAn Nambi! Give me an answer to this! BrahmA tried to find the head of Shiva, and ViShNu His feet, didn't they? Unable to see the head or the foot, they both did-sharaNAgati--took refuge, in Lord Shiva's feet, didn't they? That being the case, how can be your TirumAL (ViShNu) a greater God than Lord Shiva?"

இதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான்நம்பி தன் கைத் தடியை ஆட்டிக் கொண்டு, " சரிதான் காணும்! வீர சைவ பாததூளி பட்டரே! நிறுத்தும் உம் பேச்சை! இலங்கை அரசனாகிய தசகண்ட ராவணனுக்கு உம்முடைய சிவன் வரங்கள் கொடுத்தாரே? அந்த வரங்கள் எல்லாம் எங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடுபொடியாகப் போகவில்லையா? அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார்?" என்று கேட்டான்.

Hearing this AzhvAr-aDiyAn shook his staff and asked, "Well, look! You vIra-shaiva-pAda-dhULi bhaTTa--learned man and worshipper of foot-dust of the VIra-shaiva sect! Stop your brag! Your Shiva gave boons to the King of LankA, the dasha-kanTha--ten-necked, RAvaNa, didn't he? All those boons, before the kodaNDa--bow of shrI RAma, an incarnation of our TirumAl, turned to husk-dust, didn't they? That being the case, how can be your Shiva a greater God than our TirumAl?"
 
இந்தச் சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: "நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள். பக்திக்கு மேலே ஞானமார்க்கம் இருக்கிறது. ஞானத்துக்கு மேலே ஞாஸம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைந்து விட்டால் சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. சர்வம் பிரம்மமயம் ஜகத். ஶ்ரீ சங்கர பகவத் பாதாச்சாரியார் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...."

Intervening at this time, this is what the Advaita saMnyAsin--ascetic, who wore kAvi-vastram--saffron clothes, said: "Who do you both argue in vain? However long you argue as to whether Shiva is a greater God, or ViShNu, the vyavAharam--dispute, will not be solved. VedAnta gives an answer to this question. As long as you people are in the lower bhakti-mArgam--path of devotion, you would continue to quarrel about Shiva and ViShNu. There is a jnAna-mArgam--path of knowledge, above bhakti. When you reach that level, there is no Shiva and no ViShNu. sarvam brahma-mayam jagat--all this world is filled with the Supreme Being. What shrI Shankara bhagavad pAdAchArya in his brahmasUtra-bhAShyam--commentary on the BrahmasUtra, has said is..."

இச்சமயம் ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு, "சரிதான் காணும், நிறுத்தும்! உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷதங்களுக்கும் பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?

’பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் மூடமதே!’

என்று மூன்று வாட்டி சொன்னார். உம்மைப் போன்ற மௌடீகர்களைப் பார்த்துத்தான் ’மூடமதே!’ என்று சங்கராச்சாரியார் சொன்னார்!" எனக் கூறியதும், அந்தக் கூட்டத்தில் ’ஆஹா’ காரமும், பரிகாசச் சிரிப்பும் கரகோஷமும் கலந்து எழுந்தன.

Interrupting him at this point, AzhvAr-aDiyAn Nambi said, "Well, look, stop it! Your SankarAchAryAr, after writing his bhAShyam--commentary, to all those upaniShads and bhagavad-gItA and brahuasUtram--know what he said finally?

'bhaja govindam bhaja govindam
bhaja govindam mUDhamate
'

['Worship Govinda (ViShNu), worship Govinda,
Worship Govinda, O fool!']

"He said it three times! Only looking at the mauDIkas--blockheads like you, SankarAchAryar said, 'mUDhamate'. As he said these words, from the crowd arose AhAkAra--'hear, hear!', and mocking laughter, and kara-goShaNam--sound of handclapping.

ஆனால் சந்நியாசி சும்மா இருக்கவில்லை. "அடே! முன்குடுமி நம்பி! நான் ’மூடமதி’ என்று நீ சொன்னது சரிதான் ஏனென்றால், உன் கையில் வெறுந்தடியை வைத்துக் கொண்டிருக்கும் நீ வெறுந்தடியன் ஆகிறாய். உன்னைப் போன்ற வெறுந்தடியனோடு பேச வந்தது என்னுடைய மூடமதியினால்தானே?" என்றார்.

But then the saMnyAsin--ascetic, did not keep quiet. He said: "Hey, topknot Nambi! Only right that you refer to me as mUdhamati--foolish mind, because, you who are holding a useless staff in your hands, become a useless loafer. To have sought to speak to such a useless loafer as you is due to my mUdhamati, isn't it?"

"ஓய் சுவாமிகளே! என் கையில் வைத்திருப்பது வெறுந்தடியல்ல. வேண்டிய சமயத்தில் உம்முடைய மொட்டை மண்டையை உடைக்கும் சக்தி உடையதுங் காணும்!" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் ’ஓஹோ!’ என்று ஆர்ப்பரித்தனர்.

"Oy SvAmigAL! What I have in hand is not a useless staff. At the required instant it has the power to break your shaven head, look!" Saying thus AzhvAr-aDiyAn raised his staff, and his followers in the crowd cheered him.

அப்போது அத்வைத சுவாமிகள், "அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவாய்!" என்றார்.

To that the Advaida SvAmigaL said: "My dear, hold it back! Let the staff be in your own hand. Even if you hit me with your hand-staff, I shall not be angry. Neither will I seek to fight you. What strikes is Brahman and what is struck is also Brahman! If you hit me you would become hitting yourself!"

ஆழ்வார்க்கடியான் நம்பி, "இதோ எல்லோரும் பாருங்கள்! பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்!" என்று தடியைச் சுழற்றிக் கொண்டு சுவாமிகளை நெருங்கினான்.

AzhvAr-aDiyAn Nambi said, "Now, watch everyone! parabrahman is going to serve a tiruchchAthtu--hallowed-hit on the brahmam. I am going to attack myself with this staff!" and moved towars the ascetic, swirling his staff.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு ஒரு கணம் அந்த முன் குடுமி நம்பியின் கைத்தடியை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு அவனை அந்தத் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தலாமா என்று தோன்றியது.

Vallavaraiyan (Vandiya Devan) who was watching all this, wondered if he should confront and grab the hand-staff from the topknot Nambi and serve him a few hallowed-hits with that staff.

ஆனால் திடீரென்று சுவாமியாரைக் காணோம்! கூட்டத்தில் புகுந்து அவர் மறைந்து விட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவ கோஷ்டியார் மேலும் ஆர்ப்பரித்தார்கள்.

But then suddenly the ascetic was not to be found! Mingling into the crowd, he had disappeared. The VaiShNava supporters cheered even louder as they watched (the disappearnace).

ஆழ்வார்க்கடியான் வீரசைவருடைய பக்கமாகத் திரும்பி, "ஓய் பாத தூளி பட்டரே! நீர் என்ன சொல்லுகிறீர்? மேலும் வாதம் செய்ய விரும்புகிறீரா? அல்லது சுவாமியாரைப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா?" என்றான்.

Turning towards the VIrashaiva, AzhvAr-aDiyAn said, "Oy pAda-dhULi bhaTTa--learned man and worshipper of foot-dust! What do you say? You wish to argue further, or run away like the SvAmiyAr?"

"நானா? ஒருநாளும் நான் அந்த வாய் வேதாந்தியைப் போல் ஓட்டம் எடுக்க மாட்டேன். என்னையும் உம்முடைய கண்ணன் என்று நினைத்தீரோ? கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன்தானே உம்முடைய கண்ணன்!..." என்று பாததூளிபட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். "ஏன் காணும்? உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் அடிபட்டதை மறந்து விட்டீரோ?" என்று கேட்டுக் கொண்டு கைத்தடியை வீசிக் கொண்டு வீர சைவர் அருகில் நெருங்கினான்.

"Me? Never shall I run away like that mouth-vedAntin. You thought of me too as your KaNNan (KRShNa)? Stealing and eating butter from the GopikAs'--milkmaids' house, and getting beaten by that wooden butter-churn? Before the pAda-dhULi bhaTTa could finish, AzhvAr-aDiyAn interrupted. "Why, look? You have forgotten about your Paramasivan carrying loads of sand for the sake of (an old woman's) dry pudding and getting beaten on the back?" Asking thus, he moved closer to the VIra-shaiva, swirling his hand-staff.

ஆழ்வார்க்கடியான் நல்ல குண்டாதி குண்டன். வீரசைவராகிய பாததூளிபட்டரோ சற்று மெலிந்த மனிதர்.

மேற்கூறிய இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.

இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.

AzhvAr-aDiyAn was a fat, stocky man. pAda-dhULi bhaTTa, the VIrashaiva was a somewhat puny man.

Those in the crowd who encouraged the above two men in the debate were ready themselves to enter the tussle and cheered loudly.

Vallavaraiyan felt that he must stop this absurd rumpus.
 
அவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, "எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழநாட்டுக்குப் போவதுதானே? அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே?" என்றான்.

He came forward from where he stood and said, "What for are you, elders, quarelling? Don't you have anything else to do? If you feel the itch for a fight, why not go to IzhanADu (Srilanka)? A big battle is going on there?"

நம்பி சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து, "இவன் யாரடா நியாயம் சொல்ல வந்தவன்!" என்றான்.

கூட்டத்திலே இருந்தவர்களில் சிலருக்கு, வந்தியத்தேவனுடைய வீரத் தோற்றமும் அவனுடைய அழகிய முகவிலாசமும் பிடித்திருந்தன.

"தம்பி! நீ சொல்லு! இந்தச் சண்டைக்காரர்களுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லு! உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!" என்று அவர்கள் சொன்னார்கள்.

Nambi quickly turned towards him and said, "Who is this fellow coming up to mediate?"

Some people in the crowd liked Vandiya Devan's valorous appearance and lovely mukha-vilAsam--charismatic face.

"Thambi (O younger brother)!" they said, "You tell them? Tell what is fair to these quarrel-mongers! We will support yuu."

"எனக்குத் தெரிந்த நியாயத்தைச் சொல்கிறேன். சிவபெருமானும் நாராயணமூர்த்தியும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் சிநேகமாகவும் சுமுகமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்த நம்பியும் பட்டரும் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வல்லவரையன் கூறியதைக் கேட்டு, அக்கூட்டத்தில் பலரும் நகைத்தார்கள்.

"Let me tell what looks fair to me. It does not seem that Lord Shiva and NArAyaNa-mUrti quarrel among themselves. They stay in-snehitam--friendly, and sumukha--favourable, to each other. When they are so, why should this Nambi and BhaTTar quarrel?" Hearing Vallavaraiyan say this, many people in the crowd snickered.

அப்போது வீரசைவபட்டர், "இந்தப் பிள்ளை அறிவாளியாகவே தோன்றுகிறான். ஆனால் வேடிக்கைப் பேச்சினால் மட்டும் விவாதம் தீர்ந்துவிடுமா? சிவபெருமான் திருமாலை விடப் பெரிய தெய்வமா, இல்லையா என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும்!" என்றார்.

To that the VIrashaiva BhaTTar said, "This boy seems to be intelligent. But by mere jovial talk, will the vivAdam--dispute be solved? To the question if Lord Shiva is a greater god than TirumAl (ViShNu), let him give the answer."

"சிவனும் பெரிய தெய்வந்தான்; திருமாலும் பெரிய தெய்வந்தான் இருவரும் சமமான தெய்வங்கள். யாரை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள் சண்டை எதற்கு?" என்றான் வல்லவரையன்.

"Shiva is a great god; and TirumAl (ViShNu) is a great god too. Both the deities are equal. Worship whomever you want, why quarrel?" said Vallavaraiyan.

"அது எப்படிச் சொல்லலாம்? சிவனும் விஷ்ணுவும் சமமான தெய்வங்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் அதட்டிக் கேட்டான்.

"How can you say that? To say that Sivan and ViShNu are equal gods, what is the AdhAram--proof?" AzhvAr-aDiyAn demanded, chiding him.

"ஆதாரமா? இதோ சொல்கிறேன்! நேற்று மாலை வைகுண்டத்துக்குப் போயிருந்தேன். அதே சமயத்தில் பரமசிவனும் அங்கே வந்திருந்தார். இருவரும் சம ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்..."

"Proof? Here it is. Last night I had been to VaikuNTham--ViShNu's heaven. Shiva too had come there at that same time. Both were seated in sama-Asanams--equal thrones. They both seemed to be of the same height. Still, to leave nothing to doubt, I measured the heights of them both with my arm..."


"அட பிள்ளாய்! பரிகாசமா செய்கிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.

கூட்டத்தினர், "சொல்லு, தம்பி! சொல்லு!" என்று ஆர்ப்பரித்தார்கள்.

"Hey young man! Are you mocking me?" AzhvAr-aDiyAn did-a-garjana--roared

"You tell us, Thambi, come on", shouted the crowd.

"அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இருந்தார்கள். அதோடு விடாமல் சிவனையும் திருமாலையும் நேரிலேயே கேட்டு விட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள், தெரியுமா? ’அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு’ என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள்!" என்று கூறிய வல்லவரையன், மூடியிருந்த தனது வலக்கையைத் திறந்து காட்டினான். அதற்குள்ளே ஒரு பிடி மண் இருந்தது அதை வீசி உதறினான்.

"When I measured them, they were of the same height. Not leaving at that, I asked both Shiva and TirumAl directly. You know what they said? 'Hari and Shiva are one and the same. In the mouths of those who do not know it, there is nothing but the dust of shame.' Saying that, they gave this handful of dirt to drop into the mouths of those who quarrel about them!" Vallavaraiyan said and showed them opening his fist. A handful of dust was in his palm. He shaked the dust off his hand and throw it in the crowd.

கூட்டத்திலிருந்தவர்களில் பலர் அப்போது பெரும் உற்சாகங்கொண்டு தலைக்குத் தலை தரையிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து, நம்பியின் தலையிலும் பட்டர் தலையிலும் வீசி எறிய ஆரம்பித்தார்கள். இந்தத் தூராக்ரகச் செயலைச் சிலர் தடுக்க முயன்றார்கள்.

"அடே! தூர்த்தர்களா? நாஸ்திகர்களா?" என்று சொல்லிக் கொண்டு ஆழ்வார்க்கடியான் தன் கைத் தடியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் பிரவேசித்தான்.

ஒரு பெரிய கலவரமும் அடிதடி சண்டையும் அப்போது அங்கே நிகழும் போலிருந்தன. நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

Getting excited, many men in the crowd picked up a handful of dust from the ground and started throwing it on the heads of AzhvAr-aDiyAn and BhaTTar. Some people tried to stop this durAgraha--obsessive act.

"Hey dhUrtas--cheats and nAstikas--atheists!" Shouting these words, AzhvAr-aDiyAn entered the crowd swirling his hand-staff.

A great disturbance and one-to-one fight was about to erupt there. Luckily, at that time, thwarting all this, a great rustling sound was heard nearby (followed by a stentorian announcement).

*****
 
சுஜாதாவின் ’கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’, 36ஆகஸ்ட்1976

வயது, விதம், நியதி, தருணம், சுகம், ஞாபகம், கேலி, அற்புதம், அவதூறு, சதுரம், சித்திரம், பாத்திரம், பயம், வாசனை, வேகம்.

மேற்கண்ட சொற்களில் வடமொழியிருந்து வந்த சொற்கள் எவை என கூற முடியுமா உங்களால்?

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பெரும்பாலும் போதகர்களாகவே வந்து தமிழ் கற்றுக்கொண்ட ஸீகன்பாகு ஐயர், இரேனியுஸ் ஐயர், உவின்ஸ்லோ ஐயர், கிளார்க் ஐயர், போன்ற பற்பல ஐரோப்பியர்களில் (இவர்களுக்கெல்லாம் ஐயர் பட்டம் யார் கொடுத்தார்கள்) போப் ஐயரும் கால்டுவெல் ஐயரும் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னவர் அவர்தம் திருவாசக மொழிபெயர்ப்புக்கு, பின்னவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்துக்கு...

போப் திருவாசகத்தையும் மற்ற சில நூலகளையும் ஆங்கிலத்தில் ஐயாம்பிக் பெண்டா மீட்டரில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பை மறந்து விடலாம். ஆனால் அவர் முன்னுரைகளை மறக்க முடியாது... சைவத்தைப் பற்றி அவ்வளவு தெளிவாக ஆழமாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் இந்தக் கிறித்தவர். மேலும் தமிழ் யாப்பைப் பற்றி ஒரு சுலபமான அறிமுகம் ஆங்கிலத்தில் தேவை என்றால் போப்பை நாடலாம்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் திராவிட மொழிகளைப்பற்றி ஹெரோடோட்டஸ், தெஸின்னாஸ்? கிரேக்க ரோம நிலநூல் ஆசிரியர்களிலிருந்தெல்லாம் எடுத்துக்காட்டி எழுதப்பட்டிருக்கிறது. அதன் சில முடிவுகள் தற்கால ஆராய்ச்சி வெளிச்சத்தில் தவறானவை...கால்டுவெல் பார்ப்பன ஆதிக்கக் கொள்கைக்கு வித்திட்டவர். வடமொழியின் ஆக்கிரமணத்தைப் பற்றிப் பேசுகையில் அவர் தாம் ஒரு மொழி ஆராய்ச்சியாளர் என்பதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்.

மத போதகர்கள் தமிழ் கற்று தமிழை உயர்த்திப் பேசியதில் வேறு நோக்கங்கள் இருந்தாலும் சென்ற நூற்றாண்டுகளில் ஆராய்ச்சி என்று வகை சொல்லும்படியான சில நூல்கள் தமிழில் தோன்றியதற்கு இவர்கள்தான் காரணம். இதை நாம் மறக்க முடியாது.

கால்டுவெல், ’தமிழ் மொழி தன் மாட்டுள்ள வட சொற்கள் முழுவதையும் நீக்கிவிட்டு தக்க தமிழ் சொற்களைப் பெய்துகொள்ளலாம். அவ்வாறு நீக்குவதால் அதன் தூய்மை மற்றும் செம்மைப் பண்பும் உயர்ந்து ஒளிரும்’ என்று எழுதுகிறார். அவர் தமிழ் உரைநடைக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

"கர்த்தருடைய இராப் போஜனத்தைச் சேர்ந்தவர்களும் அதற்கு ஆயத்தமாகிறவர்களும் தங்களை சோதித்தறிந்து செபத் தியானஞ் செய்து சேரவேண்டிய ஒழுங்கிருக்க கிறிஸ்தவர்களில் அநேகர் வேத வசனத்தை நன்றாய் அறியாதவர்களாயும் தேவ பக்தியில் தேறாதவர்களாயும் இருப்பதனாலே... தருணத்திலும் வாசிக்கத் தக்க செபத் தியானங்களுள்ள புஸ்தகங்கள் அவர்களுக்கு அவசியம் தேவையாயிருக்கிறது."

கேள்விக்குப் பதில் -- அனைத்தும் வட சொற்களே!

*****
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top