I would like to share the news item published in 'Dinamalar' today which among other things speak about
'சட்டத்துக்கு சவால்விடும் 9 சாமியார்கள்:
அரியானா சாமியாருக்கு பாதுகாப்பாக மனித கேடயம்: குழந்தைகள், பெண்களை பிடித்து வைத்து அராஜகம்
ஹிசார்: அரியானாவில், போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக சர்ச்சைக்குரிய சாமியார், தன் ஆசிரமத்தை சுற்றி, அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை மனித கேடயமாக நிற்க வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.
அரியானா மாநிலம், ஹிசாரில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் ராம்பால், கொலை வழக்கில் தன்னை கைது செய்வதற்காக வந்த போலீசார் மீது, ஆதரவாளர்களை ஏவி விட்டு, தாக்குதல் நடத்தினார். போலீசார், பதில் தாக்குதல் நடத்தியதில் பத்திரிகையாளர்கள் உட்பட, 200 பேர் காயம் அடைந்தனர். சாமியாரையும், அவரின் ஆதரவாளர்களையும் பிடிப்பதற்காக போலீசார், நேற்றும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரமத்தில் இருந்து வெளியில் வந்து, ஏராளமானோர் கைகளை தூக்கியபடி சரண் அடைந்தனர்.
இவர்கள் கூறியதாவது:
சாமியாரும், அவரின் ஆதரவாளர்களும், ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் மனித கேடயமாக பிடித்து வைத்துள்ளனர். இவர்கள், சாமியாரையும், ஆசிரமத்தையும் சுற்றி, பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரமத்தை விட்டு, யாரையும் வெளியேற விடாமல், ஆயுத முனையில் எங்களை மிரட்டினர். அவர்களுடன் சண்டையிட்டு தான், தப்பி வந்துள்ளோம். ஆசிரமத்துக்குள், ஒரு வாரமாக, உணவு, சாப்பாடு, மின்சார வசதி இல்லாததால், குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது. போலீசார் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குழந்கைள், பெண்களின் நிலை ஆபத்தாகி விடும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா கூறுகையில், ''சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது மாநில அரசு பிரச்னை. மத்திய அரசு இதுகுறித்து கருத்து கூற முடியாது,'' என்றார்.
தேச துரோக வழக்கு:
சாமியார் ராம்பால் மீதும், அவரின் ஆதரவாளர்கள் மீதும், அரியானா போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, அரசுக்கு எதிராக சதி செய்வது, அரசுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட, ஆயுதங்களை சேகரித்தது, கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சாமியார் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
ஆறு பேர் பலி...
* நேற்று முன்தினம் நடந்த மோதலில், நான்கு பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் இறந்தனர். இவர்களின் உடல்களை போலீசார் நேற்று மீட்டனர்.
* நெரிசல் காரணமாக இவர்கள் இறந்தனரா அல்லது சாமியார் ஆதரவாளர்கள் தாக்கியதில் இறந்தனரா என்பது, பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.
* சாமியாரின் நெருங்கிய உதவியாளர் புருஷோத்தம் தாஸ், ஆசிரமத்தில் இருந்து தப்பி ஓட முயற்சித்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
* ஆசிரமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து, 14 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.
* இவர்களில் பலர், இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி விட்டனர். இன்னும் 5,000 பேர் ஆசிரமத்துக்குள் உள்ளனர். இவர்களைத் தான் சாமியார் மனித கேடயமாக பிடித்து வைத்து உள்ளார்.
* ஆசிரமத்தை சுற்றி, போலீசார், மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்து உள்ளனர்.
* மாநில போலீசாரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாததை அடுத்து, சம்பவ இடத்துக்கு, 600க்கும் அதிகமான துணை ராணுவப் படையினர், கமாண்டோ படையினர் விரைந்து உள்ளனர்.
* 'சாமியாரை கைது செய்ய முயற்சித்தால் வன்முறை ஏற்படும்' என, உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
சட்டத்துக்கு சவால் விடும் 9 சாமியார்கள்
அரியானாவின் ஹிசார் பகுதியில், ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பாலை, கொலை வழக்கில் கைது செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது. தன்னை கைது செய்ய ஆசிரமத்துக்கு வந்த போலீசாரை, தடுத்து, தன் ஆதரவாளர்கள் மூலம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி, சட்டத்துக்கு சவால் விட்டுள்ளார், சாமியார் ராம்பால். அவரைப் போலவே, மேலும் ஒன்பது சாமியார்கள் இதுபோல், அடாவடியாக செயல்படுகின்றனர்.
ராகவேஸ்வர பாரதி ஸ்வாமி:
பெங்களூரு அருகேஉள்ள ராமச்சந்திரா மடத்தை சேர்ந்தவர். 47 வயது, பாடகியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பெங்களூரு சி.ஐ.டி., போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதுல் மகராஜ்:
மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள லவசா பகுதியைச் சேர்ந்த, இந்த சாமியார் மீது, 17 வயது இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக, போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசாராம் பாபு:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில், 16 வயது பெண்ணை சூறையாடியதாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள், கொல்லப் பட்ட வழக்கிலும், இவர் பெயர் இருக்கிறது.
சிவமூர்த்தி திவிவேதி:
உ.பி., மாநிலம் சித்ர கூடத்தை சேர்ந்த இவர், பாலியல் தொழில் நடத்தி, கடந்த, 10 ஆண்டு களில், 60 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நித்தியானந்தா:
பிரபல நடிகை ஒருவருடன், படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததாக, இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்:
பஞ்சாப் மாநிலம் தேரா சச்சா சவுதா என்ற பிரிவினரின் தலைவராக கருதப்படும் இவர் மீது, மனைவியை பாலியல் கொடுமைப்படுத்திய புகார் இருக்கிறது. 2008ல், மும்பையில், இவரின் பாதுகாவலர்கள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
மகேந்திர கிரி:
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மச்சேந்திர கிரி, தன் ஆசிரமத்தில், 24வயது பெண்ணை, அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
பாபா ராம்தேவ்:
பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ், டில்லி உண்ணாவிரதத்தின் போது, போலீசாரிடம் இருந்து தப்ப, சல்வார் கமீஸ் உடையை அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது, நில அபகரிப்பு வழக்கு இருக்கிறது.
ராமஸ்வாமி தேவிஸ்ரீ குருஜி:
பெங்களூரைச் சேர்ந்த இந்த சாமியார் மீது, செக்ஸ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.
Source:
| ??????? ???????????? ??????????? ???? ??????: ??????????, ??????? ???????? ?????? ??????? Dinamalar