• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Deepavali 2024

praveen

Life is a dream
Staff member
தீபாவளியின் முக்கியத்துவம் தீபாவளி 2024 தேதி நேரம் 31.10.2024

இன்று அதிகாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.

தீபாவளி என்றும் அழைக்கப்படும் தீபாவளி, இந்து சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

நம்முடைய பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும்.
தீபத்திற்கு ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில் மட்டுமல்ல தினசரி வாழ்விலேயே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே.

இந்த நல்ல தருணத்தில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் பின்னணியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
ஒரு மனிதனின் மரணத்திற்கா இத்தனை ஒலி - ஒளிகொண்டாட்டங்கள் என்கிற கேள்வி எழலாம்.அதற்கு முதலில் நாம் நரகாசுரன் யார் என்று தெரிந்துக் கொள்வது அவசியம்.

தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணு எடுத்தபோது அவருக்கும்,பூமாதேவிக்கும் மகானாக பிறந்தவன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான்.
அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.தவத்தில் சிறந்த மகரிஷிகள்,குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான்.

ஈரேழு லோகங்களையும் வென்று விட வேண்டும் என்று எண்ணிய அவன், பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினான். பிரம்மாவும் அவன் தவத்தை மெச்சி, “உன் தவத்திற்கு மெச்சினேன், என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். “எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.

அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.
நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மாவும் வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான்.
மிஞ்சிய சிலர் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த கிருஷ்ணர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.

நரகாசுரன் அதற்கு செவி சாய்க்காததால்,போர் ஆரம்பித்தது. வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், தனக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.கடும்போரில், நரகாசுரன் தன் கடாயுத்தை கிருஷ்ணணரை நோக்கி வீச, அதில் காயம்பட்டு மயங்கி விழுவது போல் மாயக் கண்ணன் நடித்தார்.
கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்த சத்தியபாமா கோபத்தில், நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்து, அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் கூறினார்.

இறக்கும் தருவாயில் அகங்காரம் அழிந்தது மட்டுமின்றி, கிடைத்தற்கரிய விஷ்ணுவின் அவதார கோலத்தைக் கண்டு மனம் திருந்திய நரகாசுரன், தான் இறக்கும் இந்த நாளை எல்லோரும் காலையில் எழுந்து குளித்து , புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
இதுவே ஹிந்க்கள் தீபாவளி கொண்டாடு வருவதற்கு காரணம்.

தீபாவளித் திருநாளில் மட்டுமல்ல என்னாலும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு ஞான வாழ்வை நோக்கி பயணிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம்.

தீபாவளி எண்ணெய் குளியல் (கங்கா ஸ்நானம்) பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா?

தீபாவளி தினத்தை கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து தொடங்கி லட்சுமி பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்து வாழ்வின் அனைத்து பலன்களையும் பெறுவோம்.

தீபாவளியை எப்படி கொண்டாடுவது?

தீபாவளி தினத்தில் அதிகாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதாவதுஎண்ணெய் குளியல் செய்தல் அவசியம் குறித்து இங்கு பார்ப்போம்.

கங்கையில் நீராடும் பாக்கியம்:

இந்த விரத நாளில் எண்ணெய், அரப்பு தூள் (சியக்காய்), வெந்நீர்.எண்ணெய்யில் மகா லட்சுமி, சியக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பாள். அதனால், அந்த நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும்.

இந்த தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய்,சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.

அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து வருவது கங்கா ஸ்நானம் என்று பெயர்.
நரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை. உண்மையான புராண கதை தெரியுமா?

எண்ணெய் குளியலின் பலன்கள்:

நாம் தீபாவளி அன்றைய தினத்தில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது.

மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கால் அல்லது அரை மணி நேரமாவது இளம் வெயிலில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் எண்ணெய் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

தீபாவளி தினத்தில் வழிபாடு செய்வது எப்படி?

நம் வீட்டில் பூஜை அறையில், வாழை இலை போட்டு, நாம் செய்துள்ள இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.அன்றைய தினம் கார்த்திகை தீபத்திற்குப் பயன்படுத்தும், தீப மண் அகல் விளக்கை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அனைத்திலும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். அல்லது ஒரே ஒரு தீபத்திற்காவது நெய்யில் ஏற்றலாம்.

தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.

எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

தீபாவளிக்கு முந்தைய கொண்டாட்டங்கள் பின்வருமாறு - வீட்டை சுத்தம் செய்தல், புதுப்பித்தல் பணிகள். தீபாவளியின்போது, மக்கள் தங்கள் வீடு மற்றும் வேலை இடத்தை விளக்குகள், பூக்கள் மற்றும் ரங்கோலியுடன் அலங்கரிக்கின்றனர். .

தீபாவளியின் முதல் நாள் தன்வந்தரி திரியோதாசி அல்லது தன் தேராஸ் என்று அழைக்கப்படுகிறது.

தீபாவளியின் இரண்டாவது நாள் நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இது கார்த்திக் மாதத்தின் இருண்ட இரவின் பதினான்காம் சந்திர நாள் (திதி)

ஸ்கந்த புராணத்தின் படி, மண் விளக்குகள் அல்லது தியாக்கள் சூரியனை அடையாளப்படுத்துகின்றன, இது ஒளி மற்றும் ஆற்றலின் அண்டத்தை கொடுப்பவர் என்று விவரிக்கிறது.

ராமர் அயோத்திக்குத் திரும்பினார்:

இந்து காவியமான ராமாயணத்தின்படி, தீபாவளி என்பது 14 ஆண்டுகள் காடுகளில் கழித்த பின்னர் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் அயோத்தி திரும்பிய நாள். பல இந்துக்கள் லட்சுமி தேவி தீபாவளியன்று அண்ட சமுத்திரத்தின் (சமுத்திர மந்தன்) பிறப்பின் போது பிறந்தார் என்றும் நம்புகிறார்கள். ஆகவே, ராமர் அயோத்தியிற்கு திரும்பியதைக் கொண்டாட தீபாவளி அனுசரிக்கப்படுகிறது.

லட்சுமி பூஜை:

'சமுத்திர மந்தன்' என்று அழைக்கப்படும்* *சமுத்திரத்தை ஒருபுறம் அசூரர்களும் , மறுபுறம் 'தேவர்களும்* *சமூத்திரத்தை கடையும் போது லட்சுமி தோன்றினாள்.* *எனவே, தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது ஒரு பாரம்பரியமாக மாறியது.தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள்.* *இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும்.

திருமகள் திருவருளால் செல்வம் நிறையும்.* *பிணி, மூப்பு, துன்பம் தொலையும். "சுக்லாம் பரதரம்' சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும்.

லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

"ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'

என108 முறை சொல்லலாம்.*

நரக சதுர்தசி

வட இந்தியாவில், தீபாவளி* பண்டிகைகளின் ஒரு பகுதியாக நரக சதுர்தசி அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது சோதி தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாள் நரக சதுர்தசி என்ற பெயரை நரகாசுரனின் புராணக்கதையிலிருந்தும், இறுதியில் கிருஷ்ணரின் கையிலிருந்தும் எடுக்கிறது.

அரக்கன் மன்னர் நரகாசுரன், இந்திர இராச்சியம் 'ஸ்வர்கலோக்' உட்பட பிரபஞ்சம் முழுவதும் தனது ஆட்சியை பரப்பினார். கடவுளின் தாயான அதிதியின் நகைகளையும் திருடி 16000 சிறுமிகளையும் பெண்களையும் கடத்திச் சென்றார். பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்று, இந்திரனின் ஆட்சியையும், அதிதியின் மரியாதையையும் மீட்டெடுத்து, கடத்தப்பட்ட 16000 பெண்களை விடுவித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு, பகவான் கிருஷ்ணரின் கையில் நரகாசுரனின் விடுதலையைக் குறிக்கும் நாள் கொண்டாடப்படுகிறது.

குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.

முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர் களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.

கேதார கௌரி நோன்பு

இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீ ஆன நாள் இது. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். 21 அதிரசம் படைப்பர்.

தன்வந்திரி பூஜை

பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். இவர் மருத்துவக் கடவுள். கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

யமதீபம்

தீபாவளியின் முதல் நாள் இரவு யமதீபம் ஏற்ற வேண்டும். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும்.

யமத்வீதியாஉறவுகளை உறுதிப்படுத்தி உயர்வடையச் செய்யும் உன்னத நாள். தீபாவளியன்று இந்துக்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் அனுப்பும் வழக்கம் உள்ளது.

சூரியனின் பிள்ளை யமன்; பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.
யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது. யமத்வீதியா நன்னாளில் சகோதரனை சந்தோஷப்படுத்தும் சகோதரிகளுக்கு விதவைக் கோலம் உண்டாகாது என்பது நம்பிக்கை.

கோவர்தன் பூஜை

பகவான் கிருஷ்ணர் கோகுலன் குடிமக்களை தனது சிறிய விரலில் சுமந்து செல்லும் கோவர்தன் மலையின் கீழ் பெய்த மழையிலிருந்து காப்பாற்றிய நாளைக் குறிக்க, கோவர்தன் பூஜை தீபாவளியின் அடுத்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. சிறந்த மழை மற்றும் பண்ணை விளைச்சலை எதிர்பார்த்து இந்திரனுக்கு பதிலாக கோவர்தன் மலையை வணங்கும்படி கோகுல் குடிமக்களிடம் கிருஷ்ணர் கேட்டபோது இந்திரனின் கோபத்தின் வெளிப்பாடாக இந்த மழை பெய்தது. எப்போது, பல நாட்கள் தொடர்ந்து மலையைச் சுமந்த பிறகும் கிருஷ்ணர் பின்வாங்கவில்லை, இந்திரன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை நிறுத்தினான். இவ்வாறு, கோவர்தன் மலையின் நினைவாகவும், இந்திரன் மீது ஆண்டவர் கிருஷ்ணர் பெற்ற வெற்றியாகவும், நாட்டின் பல பகுதிகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு சிறிய மாட்டு சாணம் ஒரு நாளில் தயாரிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. விவசாயிகளும் தங்கள் கால்நடைகளை வணங்குகிறார்கள், அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கிறார்கள்.

பாய் தூஜ்

பாய் தூஜா தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களின் ஐந்து நாட்கள் கொண்டாட்டங்களை நிறைவு செய்கிறது. பாய் தூஜைச் சுற்றியுள்ள மிகவும் புகழ்பெற்ற புராணக்கதைகளில் ஒன்று யம்ராஜா மற்றும் யமுனாவின் கதையை விவரிக்கிறது. இந்த நாளில் யம்ராஜா தனது சகோதரி யமுனாவை சந்தித்தார்.

அவரது அன்பு மற்றும் பாசத்தால் மகிழ்ச்சி அடைந்த யமதர்மராஜா, தனது சகோதரிக்கு ஒரு (வரம்) கொடுத்தார், இந்த நாளில் யார் அவரைச் சந்திக்கிறாரோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்.
 

Latest posts

Latest ads

Back
Top