• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

dhanur vyatheepadham.

kgopalan

Active member
வ்யதீபாதம்;-22-12-2020.
முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒரு வருடத்தில் நாம் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை மேலும் தொடர்கிறார்.


அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் முறையை பார்த்தோம். அதில் நாம் இப்போது பார்க்க கூடியது வ்யதீபாத புண்ணிய காலம் என்ற முக்கியமான ஒன்று.

27 யோகங்களுள் இதுவும் வருகிறது. நாம் தினமுமே திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு ஐந்து விதமான லாபங்கள் கிடைக்கின்றன.


இன்றைக்கு என்ன #திதி_என்று_தெரிந்து கொண்டால் ஐஸ்வர்யம் இலாபம் கிடைக்கின்றது.

இன்றைக்கு என்ன #வாரம்_என்று தெரிந்து கொள்வதினால் #ஆயுசு_விருத்தி ஆகின்றது.

இன்றைக்கு என்ன #நட்சத்திரம்_என்று தெரிந்து கொண்டால் பாபம் போகிறது.


இன்றைக்கு என்ன #யோகம்_என்று தெரிந்துகொண்டால் ரோக நிவர்த்தி ஆகிறது.


இன்றைக்கு என்ன #கரணம்_என்று தெரிந்து கொள்வதினால் காரியசித்தி ஏற்படுகிறது.

இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் தினமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

யோகம் என்பது 27 உள்ளது. இந்த 27க்குள் வ்யதீபாதம் என்பதும் ஒரு யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது தர்ம சாஸ்திரத்தில்.

இந்த வ்யதீபாத யோக நாமம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.

இந்த வ்யதீபாத யோகம் சில நட்சத்திரங்களோடும் சில வாரங்களோடும் சில திதிகளோடும் சேர்ந்து வந்தால், அது பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

பொதுவாகவே நாம் யாருக்காவது ஏதாவது ஒரு தானம் செய்யவேண்டும் என்று சங்கல்பித்து கொண்டால், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் செய்தால் ரொம்ப புண்ணியத்தை கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.


#அமாவாசை_அன்று_நாம் செய்யக்கூடிய தானமானது, பத்து மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடியது.

அதைவிட அதிகமான பலனை அதாவது #100_மடங்கு கொடுக்கக்கூடியது, மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடியதான தானம்.


#ஆயிரம்_மடங்கு_பலனைக் கொடுக்கக்கூடிய தான தினம், விஷு புண்ணிய காலம். துலா விஷு சைத்திரை விஷு என்று சித்திரை மாதப்பிறப்பு துலா மாச பிறப்பு.
இந்த இரண்டு தினங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தானங்கள் ஆயிரம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.

#யுகாதி_புண்ணிய_காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், 12000 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.


#தட்சணாயன_உத்தராயண_புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், அதாவது தை மாதப் பிறப்பும் ஆடி மாதப் பிறப்பும் அன்றைய தினத்தில், 12000 X 10 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது

#சந்திர_கிரகணத்தன்று_நாம் செய்யக்கூடிய தான தானம், 12,00,000 லட்சம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.

சூரிய கிரகணத் அன்று நாம் கொடுக்க கூடியதான தானம் #கோடி_மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.

இந்த_வயதீபாதம்_புண்ணிய_காலத்தில் நாம்_செய்யக்கூடிய_தான_தானம், அசங்கேயம்_அதாவது_சொல்லி மாளாது_முடியாது_அளவு_பலனைக் கொடுக்கக் கூடியது.

அந்த அளவுக்கு அதிகமான அகண்ட நிறைய புண்ணியங்களை கொடுக்கக் கூடியது இந்த வயதீபாதம். ஆகையினாலே அன்றைக்கு செய்யக்கூடிய தானம் மிகவும் உத்தமமான பலனைக் கொடுக்கக் கூடியது.

இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது தானங்கள் ஸ்நானங்கள் ஜபங்கள் எல்லாம் அனைத்து விதமான பாவங்களையும் போக்க வல்லது.


இன்றைய நாட்களில் நமக்குத் தெரியாமல் எவ்வளவு தவறுகள் நடந்து விடுகின்றன, அல்லது நாம் செய்ய வேண்டி வருகிறது.
இப்போது உதாரணத்திற்கு, #தைத்த_துணியை நாம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதாவது தையல் விழுந்த துணியை உடுத்திக் கொண்டு தேவ காரியங்களையும் பிதுர் காரியங்களை செய்யக்கூடாது.
ஆனால் தைத்த துணியை தான் நாம் போட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தையல் விழாத துணியை போட்டுக் கொள்ளவே முடியாது என்கின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.


அதேபோல, நாம் #தினமும்_வபனம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். ஏதோ ஒரு ரீதியாக அல்லது உத்தியோகத்தை சொல்லி, முக வபனம் என்று பாதி வபனம்
செய்துகொண்டு இருக்க வேண்டிய நிலை, மீசை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை, #இதையெல்லாம்_ஒரு_குறைபாடாக_நம் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.


இது எல்லாம் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். இதை நாம் வேண்டாம் என்று நினைத்தாலும் கூட வைத்துக்கொள்ள வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.


இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்று பார்க்கும்போது இந்த மாதிரியான வ்யதீபாதம்_புண்ணிய_காலங்களில், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது, அந்த
நதிக்கரையில் இருப்பவர்களுக்கு ஏதாவது தானம் கொடுப்பது, அப்படி செய்வதினால் இந்த மாதிரியான பாபங்கள் எல்லாம் போகிறது. இதற்கெல்லாம் தனியான பரிகாரங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.



நாம் செய்யக்கூடியது ஆன இந்த நாட்களில் தவறுகள் எல்லாம் நடந்து போய் விடுகின்றன, ஆனால் பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் எதுவுமில்லை. பிராயச்சித்தம் தர்ம சாஸ்திரத்தில் இல்லை என்பதினால் பரவாயில்லை என்று நாம் முடிக்க முடியாது.
#எப்பொழுது_தர்மசாஸ்திரம் #ஒன்றை_செய்யக்கூடாது_என்று #சொல்கிறதோ_கட்டாயம்_அதற்கு #பாவங்கள்_உண்டு.


எதற்கான #பிராயச்சித்தம் நம் தர்ம சாஸ்திரத்தில் #சொல்லப்படவில்லையோ_அவைகளை #கட்டாயம்_நாம்_செய்யக்கூடாது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்நாட்களில் இந்த மாதிரியான தவறுகள் நடந்து போய் விடுகின்றன.


இதற்கான பிராயச்சித்தமாக இந்த வ்யதீபாதம் புண்ணிய காலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஒரு உத்தமமான புண்ணிய காலம் இது.


இந்த வ்யதீபாதம் புண்ணிய காலம் விஷயமாக நிறைய தகவல்களை நமக்கு புராணங்கள் காண்பிக்கின்றன.
#முக்கியமாக_வராக_புராணம்_நாரத புராணம் கூறுகிறது இந்த வ்யதீபாத புண்ணிய காலம் என்றால் என்ன? இந்த புண்ணிய காலத்தில் நாம் என்னென்ன எல்லாம் செய்து, என்னென்ன
பலன்களை நாம் அடையலாம் என்பதை இந்த இரண்டு புராணங்களும் விரிவாக காண்பிக்கிறது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.



முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்பணங்களின் வரிசையை பற்றி மேலும் விவரிக்கிறார்.


அதில் நாம் தற்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான புண்ணியகாலம் வ்யதீபாதம். மிக முக்கியமானதொரு புண்ணியகாலம் தர்மசாஸ்திரம் இதைப் பற்றி சொல்லும்போது ஸ்நானம் தானம் ஜபம் தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.

புராணம் ஒரு சரித்திர மூலமாக இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது. வராக புராணத்தில் இருந்து பார்ப்போம்.


எதிர்பாராத விதமாக நமக்கு ஒரு பெரிய அதிகாரம்/பதவி கிடைக்கிறது, என்றால் அதை நாம் வேண்டாம் என்று சொல்லுவோமா?


அந்தப் பதவி நமக்கு கிடைத்தால் நம் மூலமாக பல குடும்பங்கள் முன்னேறும். நாம் நிறைய பேருக்கு நல்லவைகளை செய்ய முடியும்.
அப்படிப்பட்ட ஒரு பதவி நமக்கு கிடைத்தால், எப்படி நாம் அதை விடாமல் பயன்படுத்திக் கொள்வோமோ, அதேபோல் இந்த வ்யதீபாத
புண்ணிய காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வராக புராணம் காண்பித்து, இந்த வ்யதீபாத யோகமானது சில நட்சத்திர வார திதிகளோடு சேர்ந்தால் மிகவும் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது.


*மகாபாரதத்தில் இதைப் பற்றி சொல்லும் பொழுது, #அதாவது_வ்யதீபாத #யோகமானது_ஞாயிற்றுக்கிழமையோடு
#சேர்ந்தால்_கோடி_சூரிய_கிரகண #புண்ணிய_காலத்திற்கு_துல்லியமாக #சொல்லப்பட்டிருக்கிறது.


#அதேபோல்_திருவோணம்_அஸ்வினி, #அவிட்டம்_திருவாதிரை_ஆயில்யம், #மிருகசீரிஷம்_இந்த_நட்சத்திரங்களோடுசேர்ந்தால்_மிகவும்_புண்ணிய_காலமாக #சொல்லப்பட்டு_இருக்கிறது.


*திதியில் நாம் எடுத்துக் கொண்டால், அமாவாசை யோடு இந்த வயதீபாதம் சேர்ந்தால், அது அர்த்தோதையம் அலப்பிய யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது.*

*இப்படி மகாபாரதம் பல பெருமைகளை இந்த வயதீபாத புண்ணிய காலத்திற்கு காண்பிக்கிறது. வராக புராணமும் அதனுடைய பெருமையை சொல்லி, அதற்கான ஒரு சரித்திரத்தையும் நமக்கு காண்பிக்கிறது.*


*இந்த சரித்திரத்தை சொல்லி, வயதீபாத விரதம் என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விரதம் நாம் எதற்காக செய்து கொள்ள வேண்டும் என்றால், இதை பல பெயர்கள் அனுஷ்டித்து, பல இராஜாக்கள் இந்த விரதத்தை செய்து, நல்ல
புத்திரனையும் தீர்க்கமான ஆயுளையும், ஐஸ்வர்யங்களையும், மனநிம்மதியும் அடைந்திருக்கிறார்கள் என்று இந்த புராணம் காண்பிக்கிறது.*


#மேலும்_பஞ்ச_பாண்டவர்கள் #வனவாசத்தில்_வாசம்_செய்யக்கூடிய #காலத்தில்_இந்த_வ்யதீபாத_விரதத்தை #அனுஷ்டித்ததாக_இந்த_வராக_புராணம் #சொல்கிறது.


*இந்த சரித்திரம் என்ன சொல்கிறது என்றால் முன்னர் ஒரு சமயம், பிரகஸ்பதியினுடைய மனைவியை பார்த்து ஆசைப்பட்டார் சந்திரன்.
சூரியனும் சந்திரனும் இணைபிரியா நண்பர்கள். இந்த இருவரும்தான் இந்த பூமிக்கு சாட்சியாக இருந்து கொண்டு அனைத்து தேவர்களுக்கும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்*


*பிரகஸ்பதியின் மனைவி மிகவும் அலங்காரத்தோடு, ஒரு சமயம் சந்திரன் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு க்ஷணம் மோகித்தான் சந்திரன்.
அதைப் பார்த்ததும் சூரியனுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. அப்பொழுது சூரியன் சொன்னார் சந்திரா நீ மிகவும் தவறு செய்கிறாய் என்று கண்டித்தார்.*


*மிகவும் கோபமாக சந்திரனை கோபித்துக் கொண்டார் சூரியன். சந்திரனுக்கும் சூரியன் இடத்தில் கோபம் வந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டனர்.
இந்த இருவர்கள் உடைய கோபத்தில் இருந்து உருவான ஒரு ஜோதிஸ் ஒரு உக்கிரமான ரூபமாக உருவெடுத்தது.*


*ஒரு புருஷன் உருவானான், எப்படி இருந்தான் என்றால் கண்கள் இரண்டும் சிவக்க சிவக்க கோவைப்பழம் போல் இருந்தது. உதடுகளும் சிவந்திருந்தது. பற்கள் நீளமாக இருந்தன.
நீண்ட புருவம் பெரிய உருவம். அக்னி போல் பள பளபளவென்று பிரகாசமாய் ஒரு ராக்ஷஸ ரூபமாய், ஒரு உருவம் அங்கு வந்து நிற்கிறது.*


#கோபத்திலிருந்து_ஆவிர்பவித்ததினால் #உக்கிரத்துடன்_கூடிய, அந்த உருவம் எதிர்ப்பட்டது. மேலும் அவ்வளவு பெரிய உருவத்தினால் பசி வந்துவிட்டது.
உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அந்த புருஷாத்காரமான உருவம் கிளம்பியது.


*அப்போது சூரியனும் சந்திரனும் அந்த உருவத்தை எங்கேயும் போகாதே என்று தடுத்தார்கள்.
ஏன் எனக்கு பசிக்கின்றது நான் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சத்தம் போட்டு சுற்றி சுற்றி பார்த்தார் அந்த புருஷன்.*


*அப்போது போகக்கூடாது என்று மீண்டும் தடுத்தார் சூரியனும் சந்திரனும். ஏன் நான் இப்போது போகக்கூடாது எனக்கு பசிக்கின்றது.
நான் ஏதாவது சாப்பிட்டால் தான் மேற்கொண்டு, உயிர் வாழ முடியும் என்று சொல்லி சத்தம் போட்டது அந்த புருஷாத்காரமான உருவம்.*


*அப்போது சூரியனும் சந்திரனும், நம்முடைய கோபத்தினால் இப்படிப்பட்ட ஒரு உருவம் வந்துவிட்டது என்று நினைத்து அதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்தார்கள். அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*



*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியது தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*


*அதில் வராக புராணத்தில் இருந்து ஒரு சரித்திரம் மூலமாக வயதீபாத புண்ணிய காலத்தை பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*வியாசர் அதைப்பற்றி மேலும் தொடரும் போது சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஆவிர்பவித்த அந்த புருஷன் இடம் பேசினார்கள். மிகுந்த பசியுடன் இருக்கிறார் அவர்.*


*எது இப்போது கிடைக்கும் அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று இருக்கிறார். எங்கள் இருவரின் கோபத்தினால் நீ ஆவிர்பவித்தாய், நீ ஒரு யோகமாக இருக்கவேண்டும் உனக்கு வ்யதீபாதம் என்று பெயர் இடுகிறோம், ஒரு கால தெய்வமாக நீ இருக்க வேண்டும்.*


*வ்யதீபாத யோகமாக இருந்து அனைத்து யோகங்களும் நீ இராஜாவாக இருப்பாய் மேலும் உனக்கு என்று வரக்கூடிய ஒரு காலம் இருக்கிறது.

அந்த காலத்தில் அனைவரும் செய்யக்கூடியது ஆன, ஸ்நானங்கள் ஜபங்கள் தர்ப்பணங்களை உன் மூலமாக பித்ருக்களுக்கு கிடைக்கட்டும்.
அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பலன்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும். தேவதைகளுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி,
உன்னுடைய காலமான வ்யதீபாதம் அன்று எல்லோரும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும், உன்னை மட்டும் அவர்கள் நினைத்துக் கொண்டு அன்றைய தினம் கர்மாக்களை செய்ய வேண்டும்.*


*அதனால் அன்றைய வ்யதீபாத யோகத்தில் யாரும் முகூர்த்தம் அதாவது கல்யாணம் உபநயனம் செய்ய வேண்டாம், சுப காரியங்களை தவிர்த்து, உன்னையே எல்லோரும் ஜெபித்து அன்றைய தினம் ஹோமங்கள் நடக்கட்டும்.*

*அப்படி சொல்லி ஆரம்பித்து நாம் இருக்கக்கூடிய தான இந்த பூலோகம் மட்டும் இல்லாமல், பதினான்கு லோகங்களிலும் அனைவரும் இந்த வ்யதீபாத யோகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர்.*

*அனைத்து லோகங்களிலும் இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் அவர் அவர்களால் என்ன செய்ய இயலுமோ, அதை செய்வது என்று ஆரம்பித்தனர்.
மேலும் சூரிய சந்திரர்கள், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில், உன்னை மாத்திரம் உத்தேசித்து, தேவ காரியங்களையும் பித்ரு காரியங்களையும், செய்வார்கள்.
அவர்கள் செய்வதை நீ திருப்தியாக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்கக் கூடிய பலனை கொடு.*


*யார் இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வில்லையோ, அல்லது தெரிந்தும் செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்களிடத்திலே
உன்னுடைய பசியின் மூலமாக வந்த கோபத்தை கொடு, குடும்பத்தில் சச்சரவுகள் தகராறுகள் ஏற்படும், உன்னுடைய கோபம் அவர்களுக்கு வேலை செய்யும். இந்த கோபத்தை அவர்களிடத்திலே கொடுத்துவிடு
நீ வைத்துக்கொள்ளக் கூடாது என்று சூரிய சந்திரர்கள் சொல்ல, அப்பொழுது வ
வ்யதீபாதம் சொன்னார், உங்கள் இருவர் களில் மூலமாகத்தான் நான் இங்கு ஆவிர்பவித்து இருக்கிறேன் எனக்கு இந்த அளவுக்கு அனுகிரகம் செய்ததற்கு சந்தோஷப்படுகிறேன்.*


*உங்களுடைய, பிரசாதம் அனுக்கிரகம் ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும், என்று வ்யதீபாதம் சொல்ல, எங்களுடைய அனுகிரகம் உனக்கு எப்போதும் உண்டு.
இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஸ்நானம் தானம் ஜபம், ஹோமம், பித்ரு காரியங்கள், இது அனைத்தும் உன்னையே சாரும். அவர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதை நீ கொடுக்க வேண்டும்.*


*தர்ப்பணம் செய்கின்றவர்கள் அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஜீவ பிதுருக்கள் அதாவது தாயார் தகப்பனார் இருக்கும் போது அவருடைய குழந்தைகள் ஜெபம் ஹோமம் செய்ய வேண்டும்,
நான் இதற்காக ஒரு விரதத்தை சொல்கிறேன் என்று சொல்லி, வ்யதீபாத விரதம் என்ற ஒரு விரதத்தை காண்பித்து #புத்திரன் #வேண்டும்_என்று_ஆசைப்படுகிறவர்கள் #இந்த_விரதத்தை #செய்யவேண்டுமென்று அதற்கான முறையே காண்பிக்கிறார்.*


அதில் இருந்து ஆரம்பித்து இந்த வ்யதீபாத விரதமானது 26 யோகங்கள் உடன் 27ஆவது யோகமாக சேர்ந்து இருந்தது. அந்த வ்யதீபாத நாமயோகம் என்றைக்கு வருகின்றதோ, அன்றைக்கு இந்த விரதத்தை நாம் செய்ய வேண்டும்.


#தனுர்_மாசத்திலே_தனுர்_வ்யதீபாதம் என்று வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய விரதம் அதுதான். அதுதான் ஆரம்பம்.
வ்யதீபாத யோகம் ஆவிர்பவித்த தினம் தான் தனுர் வ்யதீபாதம்.

அந்த மார்கழி மாதம் வரக்கூடிய இந்த வ்யதீபாத விரதத்தை ஆரம்பித்து கொண்டு ஒவ்வொரு மாதமும், காலையிலே ஸ்நானம் செய்து உபவாசகமாக இருந்துகொண்டு,
#தாம்பிர_பாத்திரத்தில்_நாட்டு #சர்க்கரையை_நிரப்பவேண்டும், #அதற்குமேல்_ஒரு_பிரதிமையை #வைத்து_வ்யதீபாததே_நமஹா_என்று #மந்திரத்தைச்_சொல்லி, இதுதான் மந்திரம் வேறு எந்த மந்திரமும் இல்லை, ஷோடச உபசார பூஜைகள் செய்து தித்திப்பு நிவேதனம் செய்து, அதை முதலில் நாம் சாப்பிட வேண்டும்.


*இப்படி ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும். 13 மாதங்கள் இதை செய்ய வேண்டும். வ்யதீபாத புண்ணிய காலம் 13 வரும் ஒரு வருடத்தில்.
பதினான்காவதாக திரும்பவும் தனுர் வ்யதீபாதம் வரும் அன்றைய தினத்தில் அந்த விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.*


#யார்_ஒருவர்_இந்த_விரதத்தைக்_அப்படி #அனுஷ்டிக்கிறார்களோ_மலடியாக #இருந்தாலும்_ஆண்_வாரிசு_பிறக்கும், என்று இந்த வ்யதீபாத புண்ணிய காலம் பெருமையை வராக புராணம் காண்பித்து, வ்யதீபாத
ஸ்ரார்த்தம் செய்து அதன் மூலம் பித்ருக்களுக்கு பலனை கொடுக்கும், பித்ரு சாபம் தோஷம் இருந்தால் நீங்கும் என்று, சொல்லி இந்த விரதத்தின்/தர்ப்பணத்தின் உடைய பெருமையை
காண்பிக்கின்றது வராக புராணம், இதையே தான் நம்முடைய தர்ம சாஸ்திரமும் ஷண்ணவதி தர்ப்பணம் மூலம், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தை காண்பிக்கிறது.*
 

Latest ads

Back
Top