வாத்தியங்களில் வீணையின் சிறப்பு தெரியுமா?
இப்படிபட்ட பெருமைகளை உடையது வீணை என்று சொன்னதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் கல்விக்கடவுளான சரஸ்வதிதான்.
இவர் கச்சபி எனும் வகையைச் சேர்ந்த வீணையைக் கொண்டு இசைக்கிறார்.
ஆனால், வீணையில் 32 வகையான வீணைகள் இருக்கின்றன என்றும், இதில் 31 வகையான வீணையினைக் கடவுளாக இருப்பவர்கள் இசைப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்
2. விஷ்ணு - பிண்டகம்
3. ருத்திரர் - சராசுரம்
4. கவுரி - ருத்ரிகை
5. காளி - காந்தாரி
6. லட்சுமி - சாரங்கி
7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி
8. இந்திரன் - சித்தரம்
9. குபேரன் - அதிசித்திரம்
10. வருணன் - கின்னரி.
எனவே வியாழக்கிழமையில், வீட்டில் விளக்கேற்றி
வீணா தட்சிணாமூர்த்தியை வேண்டிக்கொள்ளுங்கள்.
சுண்டல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களது குழந்தைகள் கல்வி கேள்வியிலும் இசை முதலான கலைகளிலும் சிறந்துவிளங்குவார்கள்.
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள்.
அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள்.
இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள்.
யாகத்தின் இறுதியில் கூறப்படும், ‘ஸ்வாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும்.
வீடுகளில் பாறை மேல் அமர்ந்திருக்கும் சரஸ்வதியை உங்களது குழந்தைகளை பார்த்து வழிபட்டு வரச்செய்தால் உங்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி எளிதாக கை கூடும்.
முக்கிய தகவல்:
காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்ப்பது
விசேஷ தரிசனமாகும்!
காலையில் கண்விழித்ததும் முதன்முதலாக வீணையைப் பார்த்தால் அதைவிடச் சிறப்பு வேறு எதுவும் இல்லை.