• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

eesaana bali-19-04-2019.

kgopalan

Active member
19-04-2019.-ஈசான பலி.
ஈஸான பலி:-சித்திரை மாதபெளர்ணமி யன்று செய்வதால்சைத்ரீ என்றும் அழைப்பர்.மாடுகளின்வியாதியை நீக்குவதால் சூலகவம்என்றும் பரமேஸ்வரனுக்குப்ரீதி அளிப்பதால் ஈஸான பலிஎன்றும் அழைப்பர்.



கால் நடைகள்வியாதி இல்லாமல் இருக்கும்.விருத்தியாகும்.அதிகபயன் தரும்.
மீடுஷன்என்றால் அனைத்து ஆசைகளையும்பூர்த்தி செய்விப்பவன் என்றுஅர்த்தம்.ஆதலால்இங்கு பரமேஸ்வரனை மீடுஷன்என்ற பெயரிலும்,பார்வதியைமீடுஷி என்ற பெயரிலும் ஸுப்ரமணியஸ்வாமியை இங்கு ஜயந்தன் என்ற பெயரிலும் இவர்களுக்கு நடுவே வைத்து16உபசாரபூஜை செய்ய வேண்டும்.
ஔபாஸனம்செய்து விட்டு அந்த அக்னியில்ஹவிஸ் தயாரிக்க வேண்டும்.


பைரவர் எனும்சேத்திர பாலகருக்கும் பலிஉண்டு.இதற்குஹவிஸ் லெளகீகா அக்னியிலும்செய்து கொள்ளலாம்.ஸ்ரீருத்ரஜபம் உண்டு.ஈஸானபலி ஶேஷத்தால் ப்ராஹ்மணபோஜனம். தாயாதிகளுக்குசேத்திர பாலகரின் ஶேஷம்சாப்பிட வேண்டும்.


பூஜை,ஹோமம்,பலி மூன்றும்செய்து பகவானை ப்ரீதி செய்விக்கவேண்டும்.
மாடுகள்மேய்ந்து விட்டு சாயரக்சை வீட்டிற்கு திரும்பும் போதுஹோம புகை மாடுகள் மீது படவேண்டும். ஆதலால்தெருவில் அல்லது பசு தொழுவத்தில்அல்லது கோவிலில் செய்ய வேண்டும்.வீட்டில் செய்துப்ரயோஜனமில்லை.


பொரச இலைஅல்லது
அரச இலை60இலைகள்பெரிதாக பார்த்து பறித்துஒவ்வொன்றையும் தனி தனியாகஅலம்பி துடைத்து காய வைத்துகொள்ள வேண்டும்.
இரண்டு ஹவிஸ்உள்ள பாத்திரங்கள்;மற்றும் மூன்றுபாத்திரங்கள்,பூஜை,ஹோமத்திற்குவரட்டி,சுள்ளி,நெய்,நெய் வைக்கபாத்திரம், ஹோமகரண்டி,ஹோமகுண்டம்,அல்லதுசெங்கல்.மணல்,சீலிங்க் பேன்பெட்டி அளவிற்கு


மூன்று அட்டைபெட்டிகள்,தொடுத்தபுஷ்பம்,உதிரிபுஷ்பம்,கற்பூரம்,ஊதுபத்தி,தாம்பூலம்,பழ வகைகள்,மஞ்சள் பொடி,குங்குமம்,சந்தனம்,கற்பூர கரண்டி,டிரே;
ஒரு லிட்டர்தண்ணீர் பிடிக்குமளவிற்கு4பித்தளைசொம்புகள்,நூல்கண்டு.பச்சரிசி1கிலோ,கோலம் போட அரிசிமாவு.பெரியபாக்கு மட்டை-1;பாக்குமட்டையில் ஓட்டை போட ஊசி,சனல்கயிறு.தேங்காய்-4;கலச வஸ்த்ரம்-3.


ஏலக்காய்,பச்சை கற்பூரம்,சிறிதளவுபொடித்து கலசத்தில் சேர்க்க.
எடுத்து கொண்டுவீட்டிலிருந்து புறப்பட்டுகோவிலுக்கு செல்ல வேண்டும்.அங்குஸங்கல்பம்,புண்யாகவசனம்,கிரஹப்ரீதி,விநாயகர்பூஜை, 16உபசாரபூஜை சிவன்,பார்வதி,முருகனுக்கும்செய்து பலி போட்டு,ஹோமம்செய்து ஸ்வசிஷ்டக்ருத்,ஜயாதி ஹோமம்செய்து
ஒரு பெரியபாக்குமட்டையை தண்ணீரில்ஊறவைத்து4துவாரங்கள்செய்து4துவாரங்களிலும்சணல் கயிறு கட்டி உறி மாதிரிசெய்து அதில் ஹவிஸ் வைத்துமர கிளையில் தொங்கவிட்டுருத்திரம்11அனுவாகம்சொல்ல வேண்டும்.


ஹோம அக்னிக்குமேற்கு திசையில் மூன்றுஅட்டைபெட்டி வைத்து அதில் தென்திசையில் மஹா தேவனையும்,நடுவில்முருகனும்,வடக்கேபார்வதியும் மூன்று கலசங்கள்வைத்து,அதில்தண்ணீர் விட்டு,வாசனைபொருட்கள் போட்டு
தேங்காய்வைத்து,கலசவஸ்த்ரம் சாற்றி,சந்த்னம்குங்குமம் இட்டு,மாலைபோட்டு அரிசியின் மேல் வைக்கவேண்டும்.கூர்ச்சம்வைக்க வேண்டும்.சேத்திரபாலகருக்கு கூர்ச்சத்தில்ஆவாஹனம். 16உபசாரபூஜை,பலி,ஹோமம் உண்டு.
பிறகு வீட்டிற்குசென்று ப்ராஹ்மண போஜனம்.தக்சனை.ஆசீர்வாதம்இத்யாதி.
 

Latest posts

Latest ads

Back
Top