புத்தாண்டே வருக! புதுமைகள் புரிக!
புதுமை உண்டு என்பதில் ஐயம் இல்லை
வறுமை மாறுமா என்று தெரியவில்லை!
உணவுக்குத் தவிப்பது ஒரு வறுமை தான்!
உறைவிடம் இல்லாததும் வறுமை தான்!
மானம் மறைக்க ஆடைகள் இல்லையா ?
மனிதனுக்கு அதுவும் கொடிய வறுமை தான்.
இவற்றை எல்லாம் விடக் கொடிய வறுமை
இதுவே என்று உணர்ந்திடுவோம் அனைவரும்.
மனிதத்வத்தின் வறுமை வளர்ந்து வருகிறது
மனிதனே கண்டு அஞ்சும் அசுர வேகத்தில்! :scared:
பாசம், நேசம், அன்பு, பண்பு, கருணை என்று
பன்முகங்கள் கொண்ட ஒரு மனிதன் எங்கே???
out:
பாசம் தன்குழந்தைகளிடம் மட்டுமே பாயும்!
நேசம் தன் உறவினரிடம் மட்டுமே ஊறும்!
அன்பு / காதல் தன் மனைவியிடம் மட்டுமே.
பண்பும், கருணையும் போனதிசை அறியோம்!
மன்னுயிரைத் தன்னுயிர் போலக் கருத வேண்டும்.
தன்னைப் போல பிறரையும் எண்ண வேண்டும்.
ஒரே நிறம் தான் அனைவரின் உதிரமும், உண்மை
ஒரே போன்ற வலியே உண்டாகும் அனைவருக்கும்.
தன்னுள் உள்ள ஈசனே பிறருள்ளும் உள்ளதை
நன்கு உணர்ந்து கொண்டு விட்டால் பின்னர்
பண்ண முடியுமா ஒரு கொடிய பாவச் செயல்?
எண்ண முடியுமா பிறருக்கு தீங்கிழைக்க???
எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு இறைவா!
ray:
எல்லோரும் நல்லவரே... மனம் நேராகுமானால்! :laser: