காதலர் தினம்..by Jeyamohan.
Jeyamohan, i admire, for many many reasons. this is from his blog. the url is below. but the excerpt is Jeyamohan's words, and from my heart...
நாம் திருமணத்தில் எல்லா பொருத்தங்களையும் பார்க்கிறோம். பணம் குடும்பம் சமூக அந்தஸ்து நிறம் படிப்பு வேலை உயரம் எல்லாம். ஆனால் ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா என்று பார்ப்பதில்லை.
அதை கொஞ்சமேனும் பழகாமல் அறியவும் முடியாது. மரபான மணங்களில் ஆண்-பெண்ணை முடிவுசெய்தபின்னர்தான் நாம் அவர்களை பழகவே விடுகிறோம்.
நம் ரசனை,மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓரு நபரிடம் சிலநிமிடங்களுக்குமேல் நம்மால் பேசவே முடிவதில்லை. அப்படி ஒரு திருமணத் துணை அமைந்தால் அந்த உறவு எப்படி இருக்கும்?
நம் திருமணங்களில் ஒருவருடம் தாண்டிவிட்டால் அதன்பின் உரையாடலே நிகழ்வதில்லை.
சாப்பிட்டீங்களா, பிள்ளைங்க தூங்கியாச்சா. நாய்க்கு சோறு வச்சியா என சில சொற்றிடர்களுக்குமேல் உரையாடும் தம்பதிகள் நம்மிடம் மிக மிக அபூர்வம்.
இங்கே ஆண்கள் பெரும்பாலும் நண்பர்களிடம்தான் பேசுகிறார்கள். ‘எங்கிட்ட பேசாதீங்க. உங்க ப்ரண்ட்ஸுன்னா மட்டும் ராப்பகலா சிரிச்சுப்பேசுங்க’ என பெண்கள் புலம்புவதை கண்டிருக்கிறேன்.
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம். வேறு வழியே இல்லை.
இந்த மனவிலகலில் இருந்து திருமண உறவே ஒப்புக்கு நிகழ்வதாக மாறிவிடுகிறது. பெண்கள் குழந்தைகளுடன் ஒரு தனி உலகில் வாழ ஆண் தனித்துவிடப்படுகிறான். நாற்பதை ஒட்டிய வயதுகளில் இளமையின் இலட்சியவேகங்கள் தணிகையில் அவன் இன்னும் தனிமையாக ஆகிறான். குடி போன்றவற்றில் சிக்குகிறா
and this conclusion..
ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் ஒன்றாக நீடிப்பதற்கு சமூகமும் குடும்பமும் அழுத்தம் கொடுக்கின்றன. அவர்கள் எவ்வளவு கசந்தாலும் ஒருவரை ஒருவர் உச்சகட்டமாக வெறுத்தாலும் பிரிய அனுமதிப்பதில்லை.
ஆனால் காதல்மணங்களை பிரிக்கவும் காதலர்களை மனம்சோர்வுறச்செய்யவும்தான் குடும்பமும் சமூகமும் முயல்கின்றன. காதலர்களின் சிறிய பிரச்சினைகளைக்கூட சமூகமும் சுற்றமும் பெரிதுபடுத்துகின்றன.
அதையும் மீறி காதல்மணங்களில் பெரும்பாலானவை சிறந்த உறவுகளாகத்தான் உள்ளன என்பதுதான் நடைமுறை உண்மை. எந்த உறவிலும் சோர்வும் மனக்கசப்புகளும் கொஞ்சம் இருக்கலாம்.
ஆனால் காதல்மணத்தில் இருக்கும் மன ஒருமை முன்பின் அறியாத இருவர் சேர்ந்துவாழ்வதில் நிகழ்வதில்
my sister, who love married, swears by this above
and i, many a time, feel forlorn hearing this, though satisfied on her behalf though.
and Jeyamohan's own life with Arunmozhi Nangai... இருபத்தொன்று வருடம் முன்பு காதலித்து மணம்புரிந்துகொண்டு இத்தனை வருடங்களில் ஒரு சிறு மனக்கசப்பு கூட இல்லாமல் அதே காதலுடன் அதைவிடப்பேரன்புட்ன் வாழக்கூடிய ஒருவன் என்றமுறையில் காதலர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Jeyamohan on Valentine's Day