தமிழ் கேள்வி பதில் 4-ம், ஆங்கிலத்தில் உள்ள இந்து க்விஸ் 4-ம் வெவ்வேறு கேள்விகளைக் கொண்டவை. இரண்டு மொழிகளும் தெரிந்தவர்கள் இரண்டுக்கும் பதில் தரலாம்.
15-20 மதிப்பெண்கள்- மிகவும் கெட்டிக்காரர்
10-15 வரை- நல்ல மதிப்பெண்
5-10 வரை பரவாயில்லை
5-க்கும் குறைவான மதிப்பெண்கள்- நிறைய நூல்களைப் படிக்கவும்.
1)வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் யார்?
2)திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனை புத்தகங்கள் எத்தனை பாடல்கள் இருக்கின்றன?
3)திருவிருத்தம் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி ஆகிய பாடல் தொகுப்பைப் பாடியவர் யார்? அவைகளின் தனிச் சிறப்பு என்ன?
4)தேவாரம் பாடிய மூவர் யார்?
5)திருவாசகத்தைப் பாடியவர் யார்?
6)சீர்காழியும் திருவாதவூரும் யார் யார் பிறந்த ஊர்கள்?
7)தியாகராஜ சுவாமிகள் எத்தனை கோடி ராம நாமம் ஜபித்தார்?
8)யுதிஷ்டிரர் (தருமன்) நடத்திய யாகத்தில் அன்னதானத்தின் பெருமையை உணர்த்திய பிராணி எது?
9)யுதிஷ்டிரர் வடக்கு நோக்கிப் பயணம் செய்த போது அவருடன் வந்த பிராணி எது?
10)ராமாயணத்தில் குரங்குப் படையுடன் சேது/பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட சிறு பிராணி எது?
11)எதைத் தானம் கொடுத்து சுவர்க்கம் புகுந்தான் ரந்தி தேவன்?
12)தமிழ்நாட்டில் கூத்தனூரில் உள்ள கோவிலின் சிறப்பு என்ன?
13)பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலில் சந்தித்த ஊர் எது?
14)நம்மாழ்வார் வாழ்ந்த திருக்குருகூரின் இன்னொரு பிரசித்தமான பெயர் என்ன?
15)திவ்யப் பிரபந்தத்தில் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய இரண்டு பாசுரங்களை இயற்றியவர் யார்?
16)சேர நாட்டில் திருவஞ்சைக்களத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
17)நீலன் என்ற இயற் பெயர் உடைய ஆழ்வார் யார்?
18)பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, சிவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடிய கவிஞர்கள் யாவர்?
19)விஷ்ணுசித்தன் என்ற இயற் பெயர்கொண்ட ஆழ்வார் யார்?
20)திருவாய்மொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
விடைகள்: 1.)நம்மாழ்வார் 2.)புத்தகங்கள் 24, பாடல்கள் 4000 3.)நான்கும் நம்மாழ்வார் அருளிய நூல்கள், இவைகள் வேதத்தின் சாரமாகக் கருதப்படுவதால் தமிழ் மறை என்றும் அழைக்கப்படுகின்றன.4).அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் 5.)மாணிக்கவாசகர் 6.)சம்பந்தர், மாணிக்கவாசகர் 7.) 96 கோடி ராம நாமம் 8.)கீரி, 9.)நாய், 10.)அணில் 11.)தண்ணீர் தானம் 12.)சரஸ்வதி தேவி கோவில் 13.)திருக்கோவலூர் 14.)ஆழ்வார் திருநகரி 15.)தொண்டரடிப்பொடி ஆழ்வார் 16.)குலசேகர ஆழ்வார்
17.)திருமங்கை ஆழ்வார் 18.)பாரதி, மாணிக்கவாசகர் 19.) பெரியாழ்வார் 20.) பாசுரங்கள் 1102.
For more of the same contact [email protected] or [email protected]