• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Importantance of Rathasapthami - full explanation

சூரியன் தன் தகதகக்கும் தங்க ரதத்தை வடக்கு திசை நோக்கி திருப்பும் நாளே ரதசப்தமி திருநாளாகும். தை மாதம் அமாவாசை கழிந்து வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அதிகாலையின் எருக்கஇலைக்குளியல் தானே!. அந்த எருக்கஇலை மகிமையை பார்ப்போம்.

ஒருசமயம் காலவ முனிவர் எனும் முக்காலமும் அறிந்த ஞானி.வாழ்ந்து வந்தார் பலரும் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைக் கூறுமாறு கேட்பார்கள். அவரும் கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கூறிவிடுவார். ஒருநாள் இளம் துறவி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார். காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் காலவ முனிவருக்கு அதிர்ச்சி. அவருக்குப் பிடிபடவில்லை.

இளம் துறவி " எவ்வளவோ பேருக்கு திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் பார்த்திருக்கிறார்களா?" என்று அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் எதிர்காலம் பற்றி ஞான எதிர்காலம் எப்படி என்று கேட்டார். காலவ முனிவருக்கு பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் துறவியைக் காணவில்லை. மறைந்துவிட்டார்.

காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களை நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற.... காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.

நவகிரகங்களுக்கு சுயமாக எவருக்கும் வரம் தரும் அதிகாரம் கிடையாது. ஆண்டவன் கட்டளைப்படி விதி நிர்ணயம் தான் அவைகள் செய்து வர வேண்டும். பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் "காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களுக்கு தண்டனை" என்றார் பிரம்மா.

அந்த தண்டனையைக் கேட்டு நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விமோசனம் கேட்டார்கள். பிரம்மன் மனமிறங்கி அவர்களை பூலோகத்த. அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்ய சொன்னார்.

பிரம்மனின் சாபப்படி தொழுநோய் நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தனர். அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு தேவ ரகசியங்கள் சொல்லிக்கொடுத்தார்.

"திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி நீராடி 78 நாட்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு உண்ணவேண்டும். மற்ற நாட்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்... எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்" என்றார்.

அதன்படி நவகிரகங்களும் இருந்து... பிரம்ம சாபம் நீங்கி ...சுகம் பெற்று விண்ணுலகம் சென்றனர்.

வெள்ளெருக்கு இலையில் வைத்து தமிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்பது நம் பண்டைய மருத்துவ முறையாகும். அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை.

ரத ஸப்தமி நாளில் ஏழு எருக்க இலைகள், மஞ்சள். குங்குமம். அட்சதை,எலந்த பழம் ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் சகல பாவமும் விலகுவதோடு நவகிரக தோஷமும் விலகும்

ப்ரம்ம சாபத்தையே நீக்கும் ஆற்றல் படைத்தது எருக்க இலை.

அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, "அர்க்க பத்ரம்' என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம்.. எருக்க இலை என்று ஆனது. பாபங்களும் ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று அர்க்க பத்ர ஸ்நானம் செய்கிறோம்.

எருக்க இலை மகிமைக்கு ஒரு புராண சான்று

எருக்கம் இலையின் மகத்துவம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப் பட்டுள்ளது. மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத் தில் உயிர் விடலாம் என்ற வரம் பெற்றவர். உத்தராயணத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருந்து காத்திருந்தார். காலம் போய்க்கொண்டே இருந்தது. பீஷ்மரின் உயிரோ பிரியவில்லை.நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரைப்

பார்க்க வந்த வேத வியாசரிடம் " நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை... இந்த நரக வேதனையிலிருந்து எப்பொழுது மீள்வேன்...என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா! பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல், இருப்பதும் கூட மிகப்பெரிய பாவம்தான். அதற்கான தண்டனையை அனுபவித்துதான் தீர வேண்டும்" என்று கூறினார்.

பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளைக் களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் இருந்தது மிகப் பெரிய தவறு என புரிந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு வியாசர், எப்பொழுது உ பாவத்தை உணர்ந்தாயோ, அப்பொழுதே அப்பாவம் விலகும் மார்க்கமும் புலப்படும். தீவினையைக் கண்டும் காணாமல் இருந்ததால் உன் உடல் இந்த தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த சூரியன்தான் தன் தீ நாக்குகளால் உனது பாவங்களை பொசுக்க முடியும்' என்றார் வியாசர்.

சூரியனின் நெருப்பைக் கொண்டு எப்படி சுட்டுப் பொசுக்க முடியும்...என வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டி.. வியாசர், அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். இந்த எருக்க இலைதான் தன் இலைமுழுவதிலும் சூரிய கதிர்களை ஆகர்ஷித்து வைத்துக்கொண்டு இருக்கின்றது. உன்னை இந்த எருக்க இலைகளால் உடல் முழுதும் பரப்பி வைக்கின்றேன்" என சொல்லி பீஷ்மரின் தலை முதல் பாதம் வரை எருக்க இலைகளால் மூடிவைத்தார். தவிர பீஷ்மரின் சிரசில் ஏழு எருக்க இலைகள் வைத்து தீர்த்தம் தெளித்தார். உடனே பீஷ்மரின் மனம் சாந்தியடைய ஆரம்பித்தது. பீஷ்மரின் பாவங்களை எருக்கம் இலை சுட்டுப்பொசுக்க ஆரம்பித்தது.

இது நடந்தது ரதசப்தமியன்று. சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் மறுநாள் அஷ்டமியன்று உயிர் நீத்தார். விஷ்ணு சகஸ்ரநாமம்-சிவசகஸ்ர நாமத்தையும் நிஜ தெய்வ தரிசனத்துடன்... உருவாக்கித் துதித்த பீஷ்மரின் பாவத்தைக் கூட சூரியன் தான் சுட்டு பொசுக்க முடியும் என சூர்ய சக்தி ஆகர்ஷ இலையான எருக்க இலைதான் பீஷ்மரின் உயிர் நிலைக்கான கதி தந்தது. அப்படி என்றால் அந்த எருக்க இலையின் மகிமை எத்தனை வீர்யமானதல்லவா!

பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர். "கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்த்தார்க்கடன் அளிக்கும்" என்று கூறினார்.

ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் பக்தர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்த்தார்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்றும் வியாசர் அருளினார்.

பீஷ்மரை பிதாமகர் என்று அழைப்பார்கள். பிதாமகர் என்றால் தாத்தா என பொருள்.

பீஷ்மருக்கு குழந்தைகள் இல்லை.. அதனால் அவருக்கு நாம் எல்லாருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் தான் இன்னாளை, 'பீஷ்ம தர்ப்பண நாள்' என்றும் 'பீஷ்மாஷ்டமி' என்றும் அழைக்கின்றோம்.

ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு நீராடுவது என்பது... சூரியனையே நம் தலையில் வைத்துக் கொண்டாடும் அற்புதம் என்பதை நாம் உணர
வேண்டும்.

அதனால் தான் 5 வினாடிகளில் தலையில் வைத்த மாத்திரம்... நீர் ஊற்றி...நீர் மூலம் சூரியசக்தி உச்சிதலையில் பட்ட வினாடி.. இலைகளை தலையில் இருந்து களைந்து விடுகிறோம்.

ஒரு வினாடி மரபில் ஓராயிர கிரண சக்தி மையம் சுழல செய்யும் மரபு என்பதல்லவா... நமது ரதசப்தமியின் நீராடும் புனிதம்.

"எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம் உண்ணமுடியுமென ஓது" சித்தர்பாடல்

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிரம்பியிருக்கின்றன. முன் காலத்தில் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் சீழ் போன்ற ரணம் பிடிக்காமல் காக்கப்படுகிறது. இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து. பயன் படுத்தி வந்துள்ளனர். தேள் குளவி, தேனீ, கொட்டினால் விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கம் பாலைத் தடவ விஷம் இறங்கும்.

மூன்று துளி எருக்கன் கொடுத்தால், வயிற்றில் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும் எருக்கன் செடியின் இலைகளை எரித்து, மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும். இதன் இலைகள், நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.

கவனம்

தக்க அனுபவரது துணையோடு மேற்கண்ட மருத்துவமுறையை கையாள்வதுதான் சிறந்த பயனை..பலனை..அளிக்கும்.

குறிப்பு -2: எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் நல்ல முறிப்பாகும்.

அதிசியம்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்

இரகசியம்

ரதசப்தமியன்று வீசும் விண்மண்டல ஆற்றலோடு சூரிய கிரணங்களின் ஆகர்ஷ சக்தி இலையான எருக்கயிலையும் சேர்ந்து விழும் நீரால் தேகம் முழுதும் பரவியிருக்கும் விஷக்கிருமிகள் நாசமடைகின்றன. தோலின் விஷங்கள் முறியடிக்கப்படுகிறது. குஷ்ட ரோகங்கள் போன்ற ரோகங்கள் வரும்முன்பே தடுக்கப் படுகிறது. நமது புற தேக ஆராஒளி சிதைவு அடைந்திருந்தால் நிவாரணமாகிறது. அந்த ஆரா சரியான காப்பு தரும்.

தவிர ரதசப்தமியின் நீராடும் புனிதத்தால் பீஷ்மருக்கு அதுவே பிதுர் பூஜையாக மாறி.. பிதுர் ஆசியாகவும் கிடைக்கின்றது. சிவா,விஷ்ணு வந்தனமாகவும் ஆகிறது. வழிபாடாகவும் ஆகிறது.

சூரிய ரத சப்தமியன்று சூரிய இலையில் நீராடல்,சூரிய கிரணங்கள் படுமிடத்தில் தேர் கோலம், சூரிய ஒளிபடுமிடத்தில் அடுப்பு வைத்து பொங்கலிட்டு... பூஜை செய்து ப்ராசாதம் உண்ணல்... என பல விதத்திலும் சூரிய கதிர்களை உள்வாங்கி ஆரோக்யம்..ஆனந்தம்..ஆன்மிகம் யாவும் வரமாக பெற்றிடுவோம்.

சூரிய மகர உலா வலம் வந்து வளம் தரும் ரதம் விழா

ஸ்ரீபாத சரணம் சரணம் நமாமி
 

Latest ads

Back
Top