இஞ்சிமேடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் -- 1
பெருமைகள் நிறைந்த ‘பாஹி நதி’ என்று போற்றி வணங்கப்படும் செய்யாற்றின் கரையில் ‘‘யக்ஞ வேதிகை’’ (யாகமேடு) என்று பூஜிக்கப்படும் மிகப் புராதனமான திருத்தலம் ‘இஞ்சிமேடு’ திருத்தலமாகும்.
இங்கு கேட்கும் வரங்களைக் கேட்டபடி அருளும் திருக்கோலத்தில் பெருந்தேவித் தாயார் சமேதராக வரதராஜப் பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
அழகிய நிலவு போன்ற தன் திருமுக மண்டலத்தால் எதிரிகளையும் ஈர்க்கக்கூடிய பேராற்றல் படைத்த ரகுகுல திலகன் ராமபிரான் இஞ்சிமேடு திருத்தலத்தில் சீதா-லட்சுமண சமேதராக தன்னை நாடிவந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வரப்பிரசாதியாக சேவை சாதிக்கின்றார்.
இந்த ராமபிரானின் மூல விக்கிரகம் பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும். ரகு வம்ச மன்னர்கள் தங்களின் குல தெய்வமான ரங்கநாதப் பெருமானை யாகங்கள் மற்றும் வேள்விகளால் ஆராதித்தது போன்று இங்கு எழுந்தருளியிருக்கும் ராமபிரானும் ஆராதித்ததாக மிகப் பழமையான ஓலைச் சுவடிகளிலிருந்து அறிய முடிகின்றது.
ராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் தனுசின் (வில்) மேல்புறத்தில் ‘நரசிம்ம மூர்த்தி’ எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய தரிசனமாகும். ராமபிரானின் திருச்சந்நதியில் அஞ்சனை மைந்தன் அனுமன் அஞ்சலி ஹஸ்தனாக ராமனைத் தொழுதவாறு எழுந்தருளியிருக்கின்றார். அருகில் கருடாழ்வார். -
Injimedu, also known as Sri Narasimhapuram, is located on the banks of Cheyyar (Bahunadhi) 24 km from Vandavasi and 140 km from Chennai.
As posted by Mr.Anantha Raman in Facebook