கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றாலும்
புனிதமான இசைக்கலையே என்னை ஈர்த்தது!
சிறு வயதில் தாத்தா 'ஹரிதாஸ' நாராயணன்
பெருமளவு இசைஞானம் வழங்கினார்! பின்னர்
சிங்காரச் சென்னையில் குடியேற்றம்! மீண்டும்
பாங்காக இசை மேதை திரு இராமநாதனின் சிட்சை!
கற்பூர புத்திக் குழந்தைகள் முதலாக, எளிதில்
ஏற்ற முடியாத வாழைமட்டைப் பெரிசுகள் வரை,
இசை பயிற்றுவிப்பதில் ஈடுபாடு கொண்டு
இசை பரப்பும் பணியைச் செய்கின்றேன்!
யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை மிகவும்
யதார்த்த நடையில் எழுதவும் விருப்பமே!
உதிர்ந்த சில படைப்புக்களை தமிழ் விரும்பிகளுடன்
பகிர்ந்து கொள்ள இதன் மூலம் முனைகின்றேன்!
ஆசையுடன் எனை நக்கீரி என்று அழைக்கும் என்
பாசமிகு அண்ணனை நன்றியுடன் நினைக்கின்றேன்!
ஆவலுடன் என் எழுத்தை ரசித்து ஊக்குவிக்கும்
ஆவல் கொண்ட இதயங்களை வணங்குகின்றேன்!
புதிய பக்கங்கள் இணையும்போது அவற்றுக்கு
இனிய வரவேற்பையும் எதிர்பார்க்கின்றேன்!
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்