மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், ஜெகத்ரட்சகனின் குடும்பத்தார் நடத்தும் ஜெ.ஆர்., மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்று, மற்றொரு நிறுவனத்துக்கு விற்று லாபம் சம்பாதித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.
நிலக்கரி ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு, ஐந்து நாட்களுக்கு முன் தான், ஜெகத்ரட்சகன் குடும்பத்திற்கு சொந்தமான, ஜெ.ஆர்., மின் உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனத்தின் முக்கிய இன்னொரு பங்குதாரார் மாஜி அமைச்சர் துரைமுருகனின் மகன்.
இந்த நிறுவனத்துக்கு, அதற்கு முன் மின் உற்பத்தி தொழிலில் அனுபவம் எதுவும் இல்லை. இப்படியிருக்கும்போது, ஒரு நிறுவனம் துவங்கி, ஐந்து நாட்களே ஆன நிலையில், நிலக்கரி ஒதுக்கீட்டைப் எப்படிப் பெற்றது என்பது தான், இப்போது பிரச்னைக்கு முக்கிய காரணம். தமிழக எம்.பி.,களில், பெரும் பணக்காராக இருக்கும் ஜெகத்ரட்சகன் குடும்பத்தாரின், ஜெ.ஆர்., பவர் ஜென் நிறுவனம், நிலக்கரி சுரங்கத் தொழிலே செய்யாமல் பலனடைந்துள்ள விவரம் வட இந்தியா அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகத்ரட்சகன் மற்றும் அவர் குடும்பத்தார் இயக்குனர்களாக இருக்கும், "ஜெ.ஆர்., பவர் ஜென் பிரைவேட் லிமிடெட்' புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டு கழகத்துடன், கடந்த2007ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு,புதுச்சேரி தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகம் ஆகியன,ஒடிசா மாநிலம் நைனி சுரங்கத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டை, 2007ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி வழங்கியுள்ளன. மின் உற்பத்தியில் எவ்வித அனுபவமும் இல்லாத, ஜெ.ஆர்., பவர் ஜென் நிறுவனத்தின், சொத்து மதிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற பிறகு, அதிகரித்துள்ளது.
இதையடுத்து,கடந்த 2010ம் ஆண்டு, இந்நிறுவனத்தின் 51 சதவீத பங்கை, ஐதராபாத்தைச் சார்ந்த "கே.எஸ்.கே. எனர்ஜி வென்டர்ஸ்' நிறுவனத்துக்கு விற்றுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு பெறுபவர்கள், அதைக்கொண்டு மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பிற துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், இத்துறைகளில் எவ்வித அனுபவமும் இல்லாத,ஜெ.ஆர்., பவர் நிறுவனம், நிலக்கரி ஒதுக்கீட்டைப் பெற்று, அதன் மூலம் பங்கை விற்று லாபம் அடைந்துள்ளது. மேலும், ஒதுக்கீட்டை பெற்று, ஐந்து ஆண்டுகளாக எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை. மின் உற்பத்தியும் துவக்கப்படவில்லை.
அரக்கோணம் – காஞ்சிரபுரம் சாலையில், கணபதிபுரம் என்ற இடத்தில் 116 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள ஜெகத்ரட்சகன், அந்த இடத்தில் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி வாங்கி இருக்கிறார்.
ஆனால் அனுமதிப் பெற்று நான்கு ஆண்டுகளாக 116 ஏக்கர் நிலம் தரிசு நிலமாகவே இருக்கிறது.
அதே போல் அரக்கோணம் அதிமுகவை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் 12 ஏக்கர் நிலத்தை வைத்து, இந்தியன் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். கடனை கட்ட முடியாத காரணத்தால் வேணுகோபால் நிலத்தை இந்தியன் வங்கி ஏலம் விட்டது. ஏலத்தில் ஜெகத்ரட்சகன் ரூ4.5 கோடிக்கு எடுத்துள்ளார்.
கணபதிபுரம் 116 ஏக்கர், இந்தியன் வங்கி ஏலத்தில் எடுத்த 12 ஏக்கர் நிலம் இரண்டையும் வைத்து, இந்தியன் வங்கியில் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பல கோடி கடன் வாங்கியுள்ளார். இப்படி முறைகேடுகளில் ஜெகத்ரட்சகன் சிக்கியுள்ளார்..
ஜெகத்ரட்சகன், ஊழல், முறைகேடு தந்தை பட்டியலில் இணைந்துள்ளார்.
(Thanks to Makkal Seithi Maiyam)