16/09/2020
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து மஹாளய சிராத்தம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.
மஹாளய சிராத்தத்தை அன்ன ரூபமாக செய்யும்போது சமையலில் ஏதாவது வித்தியாசங்கள் வருமா என்று பார்க்கிறோம்.
பொதுவாக வருடா வருடம் நாம் தாயார் தகப்பனார்களுக்கு செய்யக் கூடியது ஸ்ராத்தங்களில் என்ன விதமான காய்கறிகளை சேர்த்துக் கொள்கிறோமோ அதே நியமம் தான் மஹாளய ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.
தர்மசாஸ்திரம் நாம் என்ன மாதிரியான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வருடாவருடம் நாம் செய்கின்ற சிராத்தத்தை செய்யும்போது பார்க்கலாம்.
இது விஷயமாக நிறைய தகவல்களை தர்ம சாஸ்திரம் நமக்கு கொடுத்திருக்கிறது. அதாவது பொதுவாக தர்மசாஸ்திரம் ஒரு கட்டுப்பாடு சொல்கிறது. நாம் சமைக்கின்ற பொழுது அந்தக் காயை ஒரே மாதிரியான நிறம் நமக்கு தெரிய கூடாது.
அதேபோல் சமைக்கின்ற பொழுது அதிகப்படியான வாசனைகள் வரக்கூடாது. அந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான ஒரே நிறம் வருகிறது என்றால் அதையும் தவிர்க்க வேண்டும்.
#பீட்ரூட்_போன்ற_காய்கறிகளை நாம் சமைக்கும் பொழுது செக்கச்செவேல் என்று நமக்கு தெரிகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை நாம் மருந்தாக சில வியாதிகளுக்கு சாப்பிடலாமே தவிர, தினமும் சமையலில் அதை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
அதேபோல் #சமைக்கின்ற பொழுது #வாசனை_வருகிறது_என்றால்_அதை நாம் சாப்பிடக்கூடாது. அதுவும் சில நோய்களுக்கும் மருந்தாக சாப்பிடலாம். ஆனால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
அதனால்தான் நமக்கு #வெங்காயம் #பூண்டு_முருங்கை என்று இப்படி நிறைய காய்கறிகள் இருக்கின்றன. சமைக்கின்ற பொழுதே வாசனை வர கூடியதான காய்கறிகள். முள்ளங்கி பீர்க்கங்காய் போன்ற இந்த காய்கறிகளை ஏன் சாப்பிட கூடாது என்று சொல்கிறோம். இவைகள் சமைக்கின்ற பொழுது வாசனைகள் வரும்.
#முக்கியமாக_பிதுர்_காரியங்களில்
#இந்த_வகையான_வாசனை_வரக்கூடிய #காய்கறிகளை_சேர்க்கவே_கூடாது. அதேபோல் இந்த காய்கறிகளை பறிக்கின்ற போது #நகங்களை_வைத்து #பறிக்கக்கூடிய_காய்கறிகளை_சமைக்க கூடாது.
#தேசாசாரம்_என்று_ஒன்று_இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும் ஒருவிதமான காய்கறிகள் சாகுபடி நடக்கும். எந்த தேசத்தில் அது சாகுபடி செய்து இருந்தாலும் வாசனைகள் இல்லாமல் இருந்தால் அதை சமைக்கலாம். ஒரே விதமான நிறம் இல்லாமலும் சமைக்கும் போது வாசனை வரக்கூடிய காய்கறிகள் இல்லாமலும் இருந்தால் அதை சமைக்கலாம் தோஷமில்லை.
#ஒரே_விதமான_நிறத்தையோ_அல்லது அதிகப்படியான வாசனையை கொடுக்கக்கூடிய காய்கறிகளை சாப்பிட்டால் அது புத்தியை கெடுக்கும். அதேபோல் நெய்யை சேர்த்து நெய்யில்/எண்ணெயில் பக்குவமாக கூடிய வஸ்துக்கள், உப்பு சேர்த்து செய்யக்கூடிய வஸ்துக்கள், வெல்லம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்யக்கூடிய வஸ்துக்களை* சேர்த்து
கொள்ளலாம்.
ஸ்ராத்த்தில் இது போன்ற காய்கறிகளை தான் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளின் உடைய பட்டியலை தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. ஒவ்வொரு தேசங்களிலும் ஒவ்வொரு விதமான பெயர்களை சொல்கிறது.
இப்பொழுது உதாரணமாக பார்த்தோமேயானால்,
#களஞ்சம்_சாப்பிடக்கூடாது அப்படி என்றால் என்ன, ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் நமக்கு கிடைக்கிறது.*
#களஞ்சம்_என்றால்_வெங்காயம்_பூண்டு #இவைகளுக்கு_அந்த_பெயர். இதை ஒரு பிரதேசத்திலே சொல்கிறார்கள். வேறு சில இடத்திலேயே நிலக்கடலையை அந்தப் பெயருடன் குறிப்பிடுகிறார்கள். நிலக்கடலையை தோலுடன் நிலத்தில் குழி தோண்டி அங்கங்கே போட்டு, மூடிவிடவேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அதை நாம் தோண்டி எடுத்தோம் என்றால் நிலத்தினுடைய சூட்டிலேயே அது பக்குவமாக இருக்கும். அதற்கு சில பிரதேசங்களில் களஞ்சம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் இன்னும் சில பிரதேசங்களில் சில காய்களினுடைய கொட்டைகளை வைத்து அதை உபயோகப்படுத்தி, சாப்பிடுவதற்கு களஞ்சம் என்று பெயர்.
இப்படி தேசத்திற்கு தேசம் அவைகள் வேறுபடுகின்றன. #இதையெல்லாம் #மனதில்_வைத்துக்_கொண்டுதான்
#மகா_பெரியவா_காபி_சாப்பிடக்கூடாது #என்று_சொல்லி_இருக்கிறார். ஏனென்றால் அது ஒரு செடியின் உடைய கொட்டையை எடுத்து காயவைத்து அதை பொடி செய்து போட்டு குடிக்கிறோம். அதை வெண்ணீரில் போடும் போதே வாசனை வரக்கூடிய வஸ்து.
ஆகையினாலே தான் காபி கொட்டையை காப்பியை சாப்பிட கூடாது என்று பெரியவா காண்பித்திருக்கிறார். இப்படி அந்தந்த தேசா சாரங்கள் படி காய்கறிகள் மாறுபடுகின்றது.
என்ன விதமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கின்ற பொழுது, அதாவது கருப்பு நிறத்தில் உள்ள எள், உளுந்து, இவைகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். யவை என்று ஒரு தானியம், கோதுமை மாவை போல அதை உபயோகப்படுத்தலாம். அரிசி, கோதுமை, பாசிப்பருப்பு, சிறுகடுகு, இந்த மாதிரியான தானியங்களை நாம் கட்டாயம் ஸ்ராத்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக சிலவற்றை சேர்த்துக் கொள்ளக் கூடாது. துவரம் பருப்பு, மொச்சை கொட்டை, கொள், கடலை, இவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் ஸ்ராத்த தினத்தில் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.
#கோதுமை_என்கின்ற_தானியத்தை #அவசியம்_நாம்_சிராத்த_தினத்தில் #சேர்க்க_வேண்டும். கோதுமை சேர்க்காமல் செய்யக்கூடிய சமையல் சிராத்தம் நாம் செய்யாத தாகவே ஆகிவிடும். என்று தானியங்களின் வரிசைகளை காண்பிக்கின்றனர். காய்கறிகளும் என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்று காண்பிக்கின்றனர் அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.