Every once in a while I read about this in some form or the other, cyber or written medium. It never fails to disturb me, that Rajaji closed schools, in a country where there was an overwhelming illiteracy.
The people who write this, are those I like and respect....
Here is one such posting today...about Kamaraj, Rajaji, kulakalvi and how it is perceived by NB Tamils. How can someone be without empathy and desire to bring the population up in terms of literacy and standard of living? was it so elitist? each time I read about this, I really wonder about the attitudes of the ruling cliques of those times...prior to Kamaraj.
50 வருடங்களுக்கு முன்னர் : புழுதியும் அனல்காற்றும் போட்டி போட்டுக்கொண்டு முகத்தில் அறையும் அந்த சாலையில் எம்.டி.டி 2727 பதிவு எண்ணைவுடைய அந்த சீருந்து சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு தொடர்வண்டி இருப்பு பாதை. சேரன்மகாதேவி நிலையத்திற்கு தொடர்வண்டி வரும் நேரம் என்பதால் கதவு அடைத்திருந்தது. எனவே வண்டி நிற்க வேண்டிய சூழல். வண்டியிலிருந்த அவர் இறங்கி காலாற வெளியில் நடக்கிறார்.
சாலையின் அருகில் ஒரு சிறுவன் மாடு மேய்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி இலவசமாயிற்றே. அப்படியும் கூட இவன் ஏன் படிக்கவில்லை. படிக்கும் வயதில் மாடு மேய்க்கிறானே என்று பல எண்ணவோட்டங்கள். அவனிடமே கேட்கிறார் “தம்பி, நீ படிக்க வில்லையா, ஏன் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறாய்” சிறுவன் அசரவேயில்லை. பாக்கு வெட்டியிலிருந்து தெறிக்கும் பாக்குதுண்டுகளை போல் அவனிடமிருந்து பதில் வருகிறது “இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??” சிறுவனோ ஒரே நொடியில் பதில் கூறிவிட்டான் அவரிடமோ பல கணங்கள் ஆழ்ந்த மௌனம்.
அந்த பதிலின் ஆழம் அவரை நேரடியாக தாக்குகிறது. முற்பட்ட வகுப்பினரை தவிர பிறர் படிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை அவர் மீண்டும் திறந்தார். அது தவிர மேலும் 14000 பள்ளிகளை புதிதாக திறந்தார்.
ஆனால் பல பள்ளிகளில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை. அவருக்கு அதுவரை காரணம் புரியவில்லை அனைத்து பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான். ஆனால் அது மட்டும் ஏழ்மையை எதிர்கொள்ள போதாது என்பதை அப்பொழுது தான் அவர் உணர்கிறார். பிறகு சுதாரித்து விட்டு கேட்கிறார் “பள்ளிக்கூடத்தில் சாப்பாடு போட்டால் நீ படிக்க வருவாயா ??” சென்னை வந்தார்.
பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். பலரும் எதிர்த்தார்கள். இலவசங்களினால் நாடு முன்னேறாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அசரவேயில்லை. விடாப்பிடியாக திட்டத்தை செயல்படுத்தினார் அந்த சிறுவன் யார் என்று வரலாறு பதிவு செய்து வைக்கவில்லை.
ஆனால் அவரின் மனதில் அவன் விதைத்த விதையானது உயிர் கொண்டு வளர்ந்து விருட்சமானது. அந்த விருட்சத்தின் பழங்களிலிருந்து மேலும் பல மரங்கள் வந்தது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு சோலையே உருவாகிவிட்டது. இன்று அவரது நினைவு தினம்