
Picture of Rocket
Multi lingual Parrot mimics Arabic, Urdu and English Words
பல மொழி பேசும் கிளி (கீழே தமிழிலும் தரப் பட்டுள்ளது)
Rocket, a blue fronted parrot can squawk in Arabic, Urdu and English. He lives in Oldham in England.
The bird often surprises passersby with the traditional Arabic greeting ‘asalamu alaikkum’—meaning peace be upon you. Rocket belongs to Mahmood family. It mimics English words. It says Hello to everyone. The owner of the parrot says, “ he sometimes says things that even we don’t understand”. It copies cats and chickens. During summer months, Eshaan Mahmood takes it for a walk. It sits on his shoulder and talks. Children love to chat with it. Rocket has wide publicity in London news papers.
I have already written about parrots reciting Vedas and birds predicting your future. Now after reading this item in today’s newspapers, I am reminded of three other points.
1. Sekkizar who wrote Periyapuranam giving the life history of Tamil Saivaite saints composed a poem about parrots. He says that the parrots recited Tamil hymns Thevaram and Myna birds listen to them in Tiruvarur.
2. Arunagirinathar, a Tamil poet who wrote Thiruppugaz in 15[SUP]th[/SUP] century is believed to have transformed in to a parrot and sung Kandhar Anubhudi
3. Suka Brahmam sang the glory of Krishna in Bhagavatha Puranam in Sanskrit. He is believed to have recited it in the form of a parrot.

Picture of Arunagirinathar
கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்கவும்: Read my earlier posts:
1.Can Parrots Recite Vedas? 2.Birds and Gods 3.Can Birds Predict your Future?
பல மொழி பேசும் கிளி (கீழே தமிழிலும் தரப் பட்டுள்ளது)
இங்கிலாந்தில் ஓல்தாம் என்னும் இடத்தில் ராக்கெட் என்னும் பெயர் உடைய கிளி வசித்து வருகிறது. இதை இஷான் முகமது என்பவர் வளர்க்கிறார். அந்தக் கிளி அராபிய, உருது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல சொற்களை சொல்லும் கிளிகள் வேதம் சொல்லுவது பற்றி எழுதியுள்ளேன். ஜோதிடம் சொல்லுவது பற்றியும் எழுதியுள்ளேன். முதலில் ஆங்கிலத்தில் ஹலோ மற்றும் சொன்ன கிளி இப்போது உருது, அராபிய சொற்களையும் சொல்லுகிறது. சில நேரங்களில் புரியாத பாசையிலும் பேசுகிறது.
அராபிய மொழியில் ‘அசலாமு அலைக்கும்’ (சாந்தி நிலவட்டும்) என்று அழைக்கும். கோடை காலத்தில் இதை தோள் பட்டையில் உட்கார வைத்துக்கொண்டு இஷான் முகமது உலா சுற்றப் போவார். அவரைச் சுற்றி சிறியோரும் பெரியோரும் கிளியைப் பார்ப்பதற்குக் கூடிவிடுவார்கள்.
இதை லண்டன் பத்திரிக்கைகளில் இன்று படித்தவுடம் மூன்று விஷயங்கள் நினைவுக்கு வந்தன. 1.) திருவாரூர் கிளிகள் தேவாரம் சொல்லியதாகவும் அதை நாகணவாய்ப் பறவைகள் கேட்டதாகவும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் எழுத்கிறார்.2.) அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் கிளி வடிவில் உரு மாறி கந்தர் அநுபூதி பாடியதாக ஒரு ஐதீகம் 3.)சம்ஸ்கிருதத்தில் பாகவதம் பாடிய சுக பிரம்மம் கிளி வடிவில் அதைப் பாடியதாகவும் மற்றொரு நம்பிக்கை உள்ளது.

Picture of Parrot Tower at Tiruvannamalai
இதோ பெரிய புராணப் பாடல்:
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர்விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெல்லாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் (பெரியபுராணம்)
*****