நரசிம்ம மந்திரம்
நரசிம்ம ஜெயந்தி விரத முறை :
எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசிம்மருக்குரிய ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்
நரசிம்மரை வணங்கி வர நம் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்குவதோடு, மன பயம் போக்கி தைரியமாக எந்த செயலையும் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையக் கூடிய நிலை உண்டாகும்.
நரசிம்மரின் ஜெயந்தி நரசிம்மருக்குரிய ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரத்தை உச்சரித்து நன்மைகளை பெற்று மகிழுங்கள்.
பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவக் கூடியவர் நரசிம்ம பெருமாள். இவரை தொடர்ந்து வணங்கி வர திருமணத் தடை, குழந்தை பேறின்மை, கடன் தொல்லை, குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதோடு, சொத்து தகராறாலும், தம்பதிகளிடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்துந்திருந்தால் அவர்கள் விரைவில் சேரக்கூடிய சூழல் ஏற்படும்.
அதோடு நமக்கு சகல ஐஸ்வர்யத்தையும் அளிக்கக் கூடிய ஸ்தோத்திரம் தான் நரசிம்மரின் ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்,
இதனை தினமும் மாலையில் லட்சுமி நரசிம்மர் முன்பு ஒரு குவலை காய்ச்சிய பாலை படைத்து சொல்லி வர வேண்டும்.
இந்த ஸ்லோகம் படித்து வர மேற்கூரிய அனைத்து நன்மைகள் நிகழ்வதை காண முடியும்.
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
நரசிம்ம ஜெயந்தி விரத முறை :
உண்மையான பக்தருக்கு ஓடி வந்து உதவிடுவார் நரசிம்மர்
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்!
நகாக்ரை சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்!!
நரவத் ஸிம்ஹவச் சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்!!
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே!
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!!
ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!
நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்!
த்யக்தது கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
தாஸபூதா: ஸ்வத ஸர்வே
ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா நமாம்யஹம்!!
சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!
ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நம;
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம:
ஓம் பூம் பூம்யை நம:
[ATTACH=full]12787[/ATTACH]