17-01-2021= தை மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி.
மாசி மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி 16-02-21; பங்குனி சுக்ல பஞ்சமி 18-3-21; சித்திரை சுக்ல பஞ்சமி 17-4-21; வைகாசி சுக்ல பஞ்சமி 16-5-21; ஆனி சுக்ல பஞ்சமி 15-6-21; ஆனி மாதம் 14-7-21 மற்றொரு சுக்ல பஞ்சமி வருகிறது. சிராத்த திதி காலத்தில் 15-6-21 சூன்ய திதி என்று போட்டு உள்ளதால் 14-7-21 தான் மாசிகம் செய்ய வேண்டும். ஆடி சுக்ல பஞ்சமி 13-8-21; ஆவணி சுக்ல பஞ்சமி 11-9-21; புரட்டாசி சுக்ல பஞ்சமி 10-10-21; ஐப்பசி சுக்ல பஞ்சமி 8-11-21; கார்த்திகை சுக்ல பஞ்சமி 8-12-21; மார்கழி சுக்ல பஞ்சமி 6-1-22; இதற்கு முந்தைய நாளில் சோதகும்பம் செய்ய வேண்டும். இந்த பஞ்சமி திதி நாளில் மாசிகம் செய்ய வேண்டும்.
நான் உபயோக படுத்துவது திருக்கணித பஞ்சாங்கம். நீங்கள் உபயொக படுத்துவது வேறு பஞ்சாங்கமானால் அதன் படி தேதி மாறும். உங்கள் பஞ்சாங்கப்படி சிராத்த திதி என்று போட்டிருக்கும் காலத்தில் சுக்ல பஞ்சமி திதி போட்ட நாளில் மாசிகம் செய்ய வேண்டும்.
ஊன மாசிகம்;- 27 ஆவது ஊணம்;- 28,29,30 இவற்றில் ஒரு நாள்; 45 ஊனம்:- 41 டு 45 க்குள் ஒரு நாள்; 6ம் மாத ஊனம்:- 171 முதல் 180க்குள் ஒரு நாள்; ஊன ஆப்தீகம்;- 341 முதல் 355 க்குள் ஒரு நாள்; செய்ய வேண்டும்.
ஊனத்தை கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம், செவ்வாய், வெள்ளி, சனி, ப்ரதமை, சதுர்த்தி, சஷ்டி, நவமி, ஏகாதசி, ஆகிய திதிகளிலும் செய்ய க்கூடாது.
உடல் தஹனமான அன்று தான் முதல் நாள் என கணக்கு இதற்கு.
17-1-21 முதல் 27ம் நாள் = ஜனவரி 15 நாள்+ 12 நாள்=பிப்ரவரி 12. இதன் பிறகு 14-2-21 கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம் இல்லாமல் இருந்தால் 27 ம் நாள் ஊனம் செய்ய வேண்டும். பிறகு 45 ஊனம்:- ஜனவரி 15+பிப்ரவரி 28+ மார்ச் 2க்குள் செய்ய வேண்டும்.
1-3-21 அன்று செய்ய வேண்டும். 6ம் மாத ஊனம்:- ஜனவரி15+ பிப்ரவரி 28+ மார்ச்31+
ஏப்ரல் 30+ மே31+ ஜூன் 30+ ஜுலை மாதம் 6ம் தேதி முதல் 15 தேதிக்குள் செய்ய வேன்டும். 12-7-21 அன்று கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம் இல்லை என்றால் ஊனம் செய்யலாம்.
ஆப்த்தீக ஊனம்:- 23-12-21 முதல் 4-1-22 க்குள் ஒரு நாள் செய்ய வேண்டும். 29-12-21 அன்று கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரம் இல்லை என்றால் செய்யலாம்.