• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

அலஹாபாத்தில் செய்ய வேண்டியவை:-ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து சங்கல்பம், செய்ய வர வேண்டும்.




1. அனுக்ஞை= பர்மிஷன். சங்கல்பம்.


2.விக்னேஸ்வர பூஜை:-3. ப்ராயஸ்சித்த சங்கல்பம், க்ரஹ ப்ரீதி; க்ருச்சராசரணம்; மஹா சங்கல்பம்.


4.வேணி தானம்; 5. ராமேஸ்வரத்தில் பூஜை செய்து எடுத்து வந்த மணலை கரைத்தல்; வபனம் : 6. த்ரிவேணி சங்கம ஸ்நானம். 7. ஹிரண்ய சிராத்தம்.


8. பிண்ட ப்ரதானம்-க்ஷேத்ர பிண்டம்= (16.) தர்ப்பணம்; ப்ருஹ்ம யஞ்யம்.



9. வேணி மாதவர் தரிசனம்; 10. வட வ்ருக்ஷ தர்சனம்; 11.சுத்தமான கங்கை நீர் பிடித்து வைத்துக்கொள்ளுதல்; 12. ராம் காட் ஹனுமார் தரிசனம்;


13. காஞ்சி காம கோடி கோயில் தரிசனம்; 14. தம்பதி பூஜை.



சென்னையிலிருந்து கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் வாரத்திற்கு இரு முறை செல்கிறது அதில் முன் பதிவு முன் கூட்டியே செய்து கொண்டு 36 மணி நேரம் ரயிலில் சென்றால் அலகாபாத் அடையலாம். வசதி உள்ளவர்கள் 2 டயர், 3 டயர் ஏ.சி கோச்சில் செல்லலாம். ஆகாய விமானத்தில் சென்றால் 2 மணி நேரத்தில் அலகாபாத் செல்லலாம்.




பரிப்ராஜகோபனிஷத் :- யானி கானி ச பாபானி ப்ருஹ்மஹத்யா ஸமானி ச கேசான் ஆஶ்ருத்ய திஷ்டந்தி தஸ்மாத் கேசான் வபாம்யஹம். ப்ரும்ஹ ஹத்தி முதலான பாபங்கள் முடியில் சென்று உறைந்து விடுகின்றன. எனவே ப்ராயஸ்சித்தத்திற்காக கேசத்தை களைந்திடல் அவசியம்.( மன வருத்தம் பாராட்டாமல்). த்ரிவேணி சங்கம ஸ்நானம் செய்வதற்கு முன்னால் , வேணி தானத்திற்கு தயாரன பிறகு கர்த்தா முண்டனம் ( வபனம்) செய்து கொள்ள வேண்டும். கனவனின் நல் வாழ்வை வேண்டி , பத்னியர் தலை முடியை வெட்டி த்ரிவேணிக்கு ஸமர்ப்பிப்பது சோபிதமான செயலாகும்.இரண்டு அங்குலம் வெட்டி வேணிக்கு தானம் செய்வது மூலம் அனைத்து மன விருப்பங்களும் நிறைவடையும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். இதனால் பணம், வம்ச வ்ருத்தி, ஆயுள் வ்ருத்தி, ஸெளபாக்கியம் உண்டாகும்.





சுக்ல பக்ஷத்தில் ஒரு நல்ல திதியில் ஏற்புடுய நல்ல நக்ஷத்திரத்தில் செய்வது நல்லது. இதன் ப்ரகாரம் ப்ரயாண தேதியை தேர்ந்தெ டுக்கலாம் . த்ரிவேணி தேவி, கணவர், ப்ராஹ்மணர்கள், சுமங்கலிகள் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.மடி உடுத்தி கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஆசனத்தில் அமர்ந்து வாத்யார் சொல்கின்றபடி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். திதி வாரம் நக்ஷத்திரம் சொல்லி பிறந்தது முதல் இந்நாள் வரை அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை பட்டியலிட்டு , அவற்றை அழிக்க வேண்டி, தனது ஸெளபாக்கியம், கணவரின் ஆயுள் ஆரோக்கிய அபிவ்ருத்தி புத்ர பெளத்ராதிகளின் நல் வாழ்வையும் வேன்டி, , தன் கணவர் மற்றும் மற்ற அந்தணர்கள் ஸம்மதத்துடன் , வேணி மாதவரின் நல்லாசி வேண்டி, வேணி தானம் செய்கிறேன். இதுவே வேணி தான ஸங்கல்ப மந்திரத்தன் அர்த்தம்.




தலை முடி பிறிந்து விடாமல் முடிந்து வைத்த வண்ணம், , முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவரின் கையை பிடித்தபடி இருவரும் சேர்ந்து த்ரிவேணி ஸங்கம ஸ்நானம் செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். வேணி தானத்திற்கு மனைவி கணவனிடம் அனுமதி பெற வேண்டும்.




ஸுமங்கலிகளுக்கு ரவிக்கை துண்டு, ஸெளபாகிய த்ரவ்யங்கள் கொடுக்க வேண்டும். 9 X 5 வேஷ்டி 5, மற்றும் வாத்யாருக்கு 2; 9 கஜம் புடவை-1.


ஸெளபாகிய சாமான் செட்-2.; காலுக்கு வெள்ளி மெட்டி, திரு மாங்கல்யம், தங்கத்தில். தம்பதி பூஜைக்கு.


தச தானம் := தங்கம், வெள்ளி, பசு , பூமி , வேஷ்டி, உப்பு, எள்ளு; தான்யம், வெல்லம், நெய்; முதலியன. இவற்றிர்க்கு மொத்தமாக பைசா வாக தானம் செய்து விடலாம்.


அலகாபாத்திலிருந்து ரயில்வசதி கயா செல்ல உள்ளது. காசியிலிருந்து மிக குறைவாக உள்ளது. ஆதலால் ஒரே நாளில் இவை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ரிசர்வ் முன் கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும். இரவு கயா சென்று கயாவிலும் ஒரே நாளில் எல்லாம் முடித்துகொண்டு அன்று இரவே காசி வந்து விடலாம்.




கயாவில்:- 1. பல்குனி நதி தீர்த்த ஸ்னானம்; மஹா ஸங்கல்பம்; தண்ணிர் இருக்காது. சொம்பில் தண்ணிர் ஊற்றிலிருந்து எடுத்து ப்ரோக்ஷித்து கொள்ளலாம். 2. பல்குனி நதி கரையில் ஹிரண்ய சிராத்தம்; க்ஷேத்ர பிண்டம் 17 எண்ணிக்கை; பசு மாட்டிற்கு இதை கொடுக்க வேண்டும். 3, தில தர்ப்பணம்; 4. விஷ்ணு பாத ஹிரண்ய சிராத்தம்; 5. 64 பிண்டம்-பிண்ட ப்ரதானம்; 6. விஷ்ணு பாதத்தில் க்ஷேத்ர பிண்ட தரிசனம்; 7, மாத்ரு ஷோடசி; 8. அக்ஷய வடம் அன்ன சிராத்தம்-ஹோமம். அல்லது ஹிரண்ய சிராத்தம்; 9. அக்ஷய வட பிண்ட ப்ரதானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; 10. த்ருப்தி தக்ஷிணை; ஆசார்ய சம்பாவனை; 11. காய்,இலை, பழம் விடுதல்; 12. போதி மர தர்சனம்; 9X5 வேஷ்டி--5 அல்லது 2; 5 கயா வாளிகள் சாப்பிட வேண்டும். தற்காலத்தில் கயா வாளிகள் குறைந்து விட்டார்கள். முன்னதாகவே சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்.




அலகாபாத்திலோ அல்லது கயா விலோ அல்லது காசியிலோ புது பூணல் அணிய வேண்டும். வசதி உள்ளவர்கள் காசிக்கு சென்று அங்கிருந்து ஒரு நாள் அலகாபாத் காரில் சென்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு திரும்ப காரில் காசிக்கு வந்து , திரும்ப கயாவிற்கு காரில் ஒரு நாள் சென்று இரவே காரில் திரும்ப காசி வந்து விடலாம்.ஸ்வாமி நாத சாஸ்திரி; ( சிவகுமார்) ; கே. வெங்கடராமன் சாஸ்த்ரி; காசியில் உள்ளார். B-5/311 OUDGHARBI ( HANUMAN GHAT)


VARANASI- 221001; E MAIL :-rshiv kumar@rediffmail.com; www. Shrikashiyatra.com; phone no; (0542)2276134; 2275173; 2276533; cell:- 91 93369 12058; 93353 33137; 94153 36064;




இவரிடம் எல்லா வசதியும் உள்ளது. இட வசதி, போஜன வசதி. கோவில் தரிசனம்; கார் வசதி; ஹிரண்ய சிராத்தம், அலஹாபாத், கயா சிராத்தமும் இவர்களே பொருப்பேற்று செய்து தருகிறார்கள். ஒரு மாதம் முன் கூட்டியே இவர்களிடம் எழுதி தெரிந்து கொள்ள வேன்டும்.




அடுத்து அரியூர் மஹாதேவ கண பாடிகள்- B-5/309 HNUMAN GHAT;VARANASI-221001; (0542) 2277117; 2275800; MOBILE NOS; 87957 77888; 98949 61599; 96708 04000;


KASI SANKARA MUTT- MANAGER-CHANDRA SEKAR (0542) 9554 66613.; 9415 22872;


2276932; 2276915 ;




காசியில்:- 1. அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை; 2. பூர்வாங்க சங்கல்பம்


நவகிரஹ ப்ரீதி தானம்; பூர்வாங்க தச தானம்; நாந்தி சிராத்தம்; வைஷ்ணவ சிராத்தம்; புண்யாஹ வசனம்; மஹா சங்கல்பம்; ப்ராயஸ்சித்த சங்கல்பம்; பல தானம்; மஹத் ஆசீர்வாதம்; உத்தராங்க பசு தானம்;




சக்ர தீர்த்த ஸ்நானம்; மணி கர்ணிகா தீர்த்த ஸ்நானம்; பார்வண விதானமல்லது ஹிரண்ய ரூப சிராத்தம்; ப்ராஹ்மண போஜனம்; அன்ன ரூப தீர்த்த சிராத்தம்; பிண்ட தானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; தில தர்ப்பணம்; ப்ருஹ்ம யக்யம்;


1 அசி கட்டம்:- ஹரித்வாரில் செய்த பலன் கிடைக்கும்.


2 தச அஸ்வமேத கட்டம்:- ப்ருஹ்மா 10 அஸ்வமேத யாகம் இங்கு செய்ததால் இந்த பெயர்.


3 திரிலோசனா கட்டம், அல்லது வாரணா கட்டம்:-விஷ்ணு பாத உதக தீர்த்தம்.


4 பஞ்ச கங்கா கட்டம்:-கங்கை, யமுனை, ஸரஸ்வதி, கிராணா, தூதப்பா என்ற இவை ஐந்தும் இங்கு சங்கமம். இங்கு பிந்து மாதவர் கோயில் உள்ளது.


பிந்து மாதவர் அவசியம் தரிசிக்க வேண்டும். 250 படி ஏறி பிந்து மாதவரை பார்க்கலாம். அர்ச்சனை செய்யலாம்.


5 மணிகர்ணிகா கட்டம்:- சக்ர புஷ்கர தீர்த்தம்.சிறிது தூரத்தில் பக்கத்தில் ஒரு குளம் உள்ளது. முதலில் அங்கு சென்று ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மணி கர்ணிகா கட்டத்திலும் ஸ்நானம்.




இந்த ஐந்து கட்டங்களிலும் க்ஷேத்ர பிண்ட தானம். ஒவ்வொன்றிலும் 17 பிண்டம். உதிரி அன்னம் நைவேத்தியத்திற்கு. மனைவி உயிருடன் இல்லாதவர்கள் சென்றால் மனைவிக்காக ஒன்று17+1=18 பிண்டம்.


மோட்டார் படகில் இந்த 5 கட்டங்களுக்கும் செல்ல வேண்டும். படகிற்குள் குமிட்டி அடுப்பு, கரி இருக்கும், அடுப்பு பற்ற வைத்து கங்கை தண்ணீர் அரிசியில் ஊற்றி சாதம் வடித்து 17 பிண்டம் பிடித்து வைக்க வேண்டியது கர்த்தாவின் மனைவியின் வேலை. கர்த்தா பிண்டம் வைத்து முடிந்த பின் பாத்திரத்தை அலம்பி வைக்க வேண்டும். மறு கட்டம் படகு செல்லு முன் மறுபடியும் அரிசியை சாதம் வடித்து பிண்டம் பிடித்து வைக்க வேண்டும். இம்மாதிரி 5 கட்டங்களிலும் செய்ய வேண்டும். மடிசார் புடவை கட்டி கொண்டு வர வேண்டும். மோட்டர் படகிற்கு.




இம்மாதிரி ஒரு படகில் ஒரு நேரத்தில் 5 குடும்பம் சென்று பிண்ட தானம் செய்து திரும்பி வரலாம். படகோட்டிக்கு பணம் இந்த ஐவரும் பகிர்ந்து கொள்ளலாம்.


பிண்டத்தை கங்கையில் கரைத்து விடலாம். தர்பைகளை கங்கையில் போட வேண்டாம்.


தில தர்ப்பணம். ப்ருஹ்ம யக்ஞ்யம். கங்கா பூஜை செய்ய வேண்டும்.




கால பைரவர் கோயிலுக்கு சதுர்தசி அன்று செல்வது விஷேசம்.


ப்ருத்வீ லிங்க பூஜை:- ஓம் ஹராய நம: என்று சொல்லி மண் எடுத்து ஓம் மஹேஸ்வராய நம என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து லிங்கமும் பீடமும் செய்க. ஓம் சூல பாணயே நம: என்று சொல்லி ப்ரோக்ஷணம் செய்க.ஓம் பசுபதயே என்று சொல்லி பூஜை செய்க. ஓம் மஹாதேவாய நம: என்று சொல்லி தண்ணீரில் கரைத்து விடவும்.




காசியிலும் தம்பதி பூஜை செய்ய வேண்டும். 9 கஜம் புடவை+ ரவிக்கை-1.


வெள்ளி மெட்டி காலுக்கு-4; தங்க திருமாங்கல்யம்.-1. ஸெளபாக்கிய திரவியங்கள். = கண்ணாடி, சீப்பு, மஞ்சள். குங்குமம். கண்ணாடி வளையல். மெகந்தி, கண் மை; 9x5 வேஷ்டி-1. புஷ்பம், பழம். தாம்பூலம்.தக்ஷிணை. தற்காலத்தில் பண வசதி இல்லாதவர்கள் ஜுவெல்லரி கடையில் விற்கும் ஸ்வாமி படத்திற்கு வைக்கும் தங்கத்தில் பொட்டு கிடைக்கிறது. இதில் ஒன்று ஆயிரம் ரூபாய் விலை ஆகிறது. திருமாங்கல்யத்திற்கு பதில் இதை கொடுக்கவும்.


போஜனம் செய்யும் ஐவருக்கும் 9x5 வேஷ்டி-5. ஒரு நாள் பார்வண விதிப்படி ஹோமம் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். தினமும் மாலை வேளைகளில் கோயில்களுக்கு சென்று வழி பட வேண்டும்.


காசி விசுவ நாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது. கையில் எதுவும் எடுத்து செல்ல முடியாது. பெரு மழை காலங்களில் , கங்கையில் வெள்ள பெருக்கு உள்ள நாட்களில் படகுகள் ஓட்ட அரசு தடை விதிதுள்ளது. யாத்திரை செல்ல திட்ட முடுவோர் ஞாபகம் வைத்து கொள்ளவும்.தீபாவளிக்கும் சிவ ராத்ரிக்கும் இடைபட்ட காலம் அதிகமான குளிர் காலம். ஏப்ரல், மே மாதம் அதிக வெய்யல் கோடை காலம். மஹாளய பக்ஷ காலமும் கூட்டம் அதிகம் வரும். தீபாவளியும், மகர சங்கராந்தியும் திரு விழா காலம்.




மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் சென்று வரலாம். தேவி பாகவதம் மற்றும் வாயு புராணம் புத்ரனின் கடமை பற்றி இவ்வாறு கூறுகிறது. பெற்றோர்களின் ஜீவித காலத்தில் அவர்கள் சொற்களை மீறாமலிருத்தல், அவர்கள் அமரர் ஆன பின் அவர்களது திதியில் சிராத்தம் செய்து பித்ரு போஜனம் செய்வித்தல், கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல் ஆகிய இம்மூன்றும் தான் ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்ததின் பூரண பலனை அவனுக்கு ஸித்திக்க வைக்கும். காசியில் சிறு சந்துகள் அதிகம். அதில் செல்லும்போது தடை விதிக்கபட்டிருந்தும் அவ்விடங்களில் டூ வீலர் களில் சவாரி செய்வோர் அதிகம் உள்ளது. கவனம் தேவை. மிகுந்த ப்ரயாசை பட்டு காசிக்கு சென்று விட்டு அங்கு உள்ள எல்லா நாட்களிலும் கங்கையில் சங்கல்ப ஸ்நானம் செய்யாமல் இருக்க வேண்டாம்.




காசிக்கு காலை 8 மணிக்கு சென்றடைந்தால் அந்த நாளை ஆலயங்கள் பார்க்க வைத்து கொள்ளுங்கள். காசிக்கு மாலையில் வந்தால் தசாஸ்வ மேத கட்டத்தில் , மாலை சுமார் 6-30 மணிக்கு ஆரம்பிக்கும் கங்கா ஆரத்தியை போய் பாருங்கள். அல்லது விசுவ நாதர் ஆலயத்தில் மாலை 7-30 மணிக்கு நடக்கும் ஸப்தரிஷி பூஜை தரிசிக்கலாம்.




காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்தில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்த்ரம் தரித்து பிள்ளையார் பூஜை, கங்கா ஸ்நான சங்கல்பம், கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரனம், ப்ராயசித்த தானங்கள், செய்து கங்கை ஸ்நானம் செய்துவிட்டு தீர்த்த சிராத்தம், ஹோமம், ப்ராஹ்மண போஜனத்துடன் செய்யவும். பின்னர் பிண்ட ப்ரதானம்:-க்ஷேத்ர பிண்டத்துடன் 17 பிண்டங்கள் வைத்து தர்பணம் செய்ய வேண்டும்.




பிண்டங்களை கங்கையில் கரைக்கலாம், அல்லது பசு மாட்டிற்கும் கொடுக்கலாம். மாலையில் கோயில் தரிசனம்.


இரண்டாம் நாள் காலை ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்த ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், கங்கா பூஜை. ஐந்து மணி நேரமாகும். மாலையில் கோயில், ஷாப்பிங்க், இத்யாதி.


மூன்றாவது நாள் தம்பதி பூஜை; முடிந்தவுடன் ஐந்து ப்ராஹ்மணர்கள் வரித்து ஸமாராதனை செய்ய வேண்டும்.




பிற்பகல் வேளைகளில் விசுவனாதர், விசாலாக்ஷி, அன்ன பூரனி, கால பைரவர்,டுண்டி கணபதி, சங்கடமோசன ஆஞ்சனேயர்,காசி மன்னர் அரண்மனை, சாரனாத்,பிந்து மாதவர், தண்ட பானி,பனாரஸ் ஹிண்டு யூனிவர்சிடி, கெளடி மாதா ஆலயம், துர்கா கோவில், முதலியன பார்க்க வேண்டும். அஷ்டமி, சதுர்தசி, ஞாயிறு, செவ்வாய் காலபைரவர் தரிசனம் நல்லது.




கால பைரவர் ஆலயம் செல்லும் போது அங்கு கறுப்பு கலர் ரக்ஷை கயிறுகள் தேவை பட்ட எண்ணிக்கை வாங்கி அவற்றை பூஜாரியிடம் கொடுத்து காலபைரவர் காலடியில் வைத்து புனித மாக்கி வாங்கி வர வேண்டும்.மயில் பீலி தண்டத்தால் கால பைரவர் ஸன்னதியில் பைரவ தன்டனை அவசியம் பெற வேண்டும்.




விசுவ நாதர் ஆலயத்திற்கு அருகாமையில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி. அதன் பின்புறம் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் வேர் அலஹாபாத்தில் உள்ளது. இதன் கிளைகள் கயாவில் உள்ளது. இது மத்திம பாகம்.ப்ரதக்ஷிணம் செய்ய முடியாது. பார்க்கலாம்.




அலஹாபாத்தில் ஒரு நாள், கயாவில் ஒரு நாள், காசியில் மூன்று நாள்.முண்டம், தண்டம், பிண்டம் இம்மூன்று ஊர்களில் இவைகளை முடித்து கொண்டு சென்னை திரும்பலாம்.திரும்பி வருவதற்கும் சென்னையிலேயே ரிசர்வேஷன் டிக்கட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.




2018ம் வருடம் . அலாஹாபாத்தில் வாத்தியார் தக்ஷிணை3000/ரூபாய். கயாவிலும் தக்ஷிணை 3000/ரூபாய், காசியில் தக்ஷிணை 6000ரூபாய் ஆகிறது. பாக்கேஜ் என்று சொல்லி 40,000 டு 50,000 ரூபாய் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகாரம், தங்குமிட வாடகை, இது தவிர .கோயில்களுக்கு செல்ல வேன் உள்ளது. அதில் அழைத்து போய் எல்லா இடங்களையும் காண்பித்து , திரும்ப கொண்டு வந்து விடுவார்கள். இதற்கு பணம் செல்லும் நீங்கள் எல்லாரும் பகிர்ந்து கொடுக்கலாம்.




கால பைரவர் ஆலயத்தில் பைரவாஷ்டகமும், அன்ன பூரணி கோயிலில் அன்னபூர்ணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகம் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெறலாம். கையில் இப்புத்தகம் எடுத்து செல்லுங்கள்.




தர்ம ஸாதனங்கள்:- காசி மஹாத்மியம் 136ம் பக்கம்:- ஸத்யத்தை கடைபிடித்தல், மடி ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்; வள்ளல் தன்மை;கருணை, அடக்கம், களவு எண்ணமின்மை; புலனடக்கம் ஆகியவை அறநெறி பற்றி ஒழுகும் வழிகள்.


Back
Top