மஹாளய பக்ஷம்.
முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச்சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதேமஹாளயபூஷித லோகமாகும்.
இங்குதான் மஹாளயபட்சத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும்கொண்டாட...ுகிறார்கள். அதாவது, நமது மூதாதையர்களது பித்ரு லோகங்களில்கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளய பட்சமாகும்.
பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு,பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ருபத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப்பெறுகின்றனர்.
புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள்,தேவர்கள்மற்ற எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம்செய்வதாகச் சொல்லப்படுகிறது.
நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்தர்பணம் போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும்அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பவுர்ணமிக்குஅடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்குஇறந்தபித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால்மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜைசெய்யவேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசையின் போது பிரமாணர்கள் சிறப்பான முறையில்தர்ப்பணம்செய்வார்கள்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள், குறிப்பாக ஆயுதம்மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்துமூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும்என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்