• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

அது என்ன குண்டலினி சக்தி..? அதை எழுப்புவது எப்படி?

 

 அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில்  இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை  உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக  “யோகம்” இருக்கி...றது.  அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள்.  யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும்  அறிவார்கள்.

 

 இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது.  கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில்  “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக்  குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு  பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர  வென்று ஓடும் போது தான் அது  இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப்  பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத்தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய்  இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே  தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட  முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும். குண்டலினியை  எழுப்பினால்  என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல்  மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

 

 சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக  மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு  எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண  சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. 

 

 இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப்  பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக் கிய மைய நாடிகளில்  இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே  ஆற்றல் மையங்கள். (ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக்  கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள்,  சாதனைகள்,  சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த  ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

 

 முதலில் மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில்  அமைந்துள்ளது. இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல்  சேகரிப்பு ஆகும். இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன்,  உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவ னாக இருப்பான். இந்த மூலா தாரச்  சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி  ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச்  சொல்லப்படுகிறது.

 

 இரண்டாவது சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக  அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச்  சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன் பங்களை  அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரண  மாகச் சொல் லப்படுகிறது.

 

 மூன்றாவது மணிப்பூரகம்: இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது.  இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும்.  மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து  விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது.

 

 நான்காவது அனாகதம்: இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு  அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும்  படை ப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால்  எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன்  குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)

 

 ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத்  தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை  தடுத்து நிறுத்து வது ஆகும்.(ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம்  தடுத்து நிறுத்த ப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப் பட்டிருப்பதை  குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)

 

 ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை): இது மனிதனின் புருவ மத்தியில்  அமைந்து ள்ளது. ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமைவது இந்தச்  சக்கரம்தான்.

 

 இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்): இது உச்சந்  தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து  பேரானந்தத்தை அள்ளித் தரு வது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம்  தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக  மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது  தலையில் உள்ள சஹஸ்ரஹா ரம் தூண்டப் பட்ட நிலையைக் குறிக்கவே.) 

 

 சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்  தூண்டப்படுவது  இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய்  தூண்டப் பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார்கள்.  வெகுசிலர்தான் நான்கு வரை வருகி றார்கள். ஏழு சக்க ரங்களும் தூண்டப்பட  குருவின் துணையும் அருளும் முக்கியம்.

 

 இந்தக் குண்டலினியின் முக்கிய செயல் பாடே இந்தச் சக்கரங்களை முழு  அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர்,  மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை  எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல்  வெளிப்படுகிறது.

 அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப  மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாக  வே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து  புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்  பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர்  அனுபவத்தை உணர  வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடை வதே மனித வாழ்வின்  இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம்,  இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’  என்கிறீர்களா?

 

 நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “ நான் ஏன்  பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந் தால் பதில்  கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையான தா? அப்பதில் முழுமை எனில்  உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்  பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை  பதிலாகத்தான்  இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன்  என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை.  பெரும்பான்மை மக்கள்  “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்று தான்  வாழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வாழ்வை பரி பூரணமாக உணர்வதோ வாழ்வதோ  இல்லை. (நீங்களும் தான்!!?)

 

 பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும்  புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது  தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை  பரிபூரண மாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை  அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை,  அந்தமும் (இறப்பு  க்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப்  புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும்  உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள்  வேறு எதிலாவது ஈடு பட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ /  அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விக ளுக்கெல்லாம்  யாரோ ஒருவர்  பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள்  அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித்தள்ளத் தான்  முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரி பூரணமாக்கும்  அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண  மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை  குண்டலினியை  எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத்  தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகைய தொரு புலன்கள் தாண்டிய அனுபவம்  உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை  அடித்தளமாகக் கொண்டு நகர்த் திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே,  “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல்,  தன்னை  உணர்தல் என்று பலரும் பல வாறாகச் சொல்கிறார்கள்.

 

 சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகி விட்டது. அது  எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவ தாயினும்  நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை  வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம்  உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லா வற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது.  இந்த நான்கில் ஏதாவது  ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

 

 உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம  யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக  நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை  அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை  அடைவது கிரியா யோகம்.

 

 இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர்  சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான  அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.  இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும்.  அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத்  துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை  மாற்றிக் கொள்ளலாம்.

 

 




Back
Top