[h=1]கொஞ்சிப் பேசி…[/h] 
தேவை இன்றி அழுகின்ற ஆண்களையும்,
தேவை இன்றிச் சிரிக்கும் பெண்களையும்,
நம்பக்கூடாது என்பார் அறிவுடையோர்.
நல்ல பயனுள்ள அறிவுரைதான் இது.
அவசியம் இன்றி அதிகப் பணிவுடன்,
அழகிய ஒரு சிறு குழந்தை போலக்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மயக்கும்
வஞ்சியர்களிடம் உஷார் உஷார்!
வஞ்சகமாக ஒரு வலை விரிக்கவே,
கொஞ்சிக் கெஞ்சுவர் சில வஞ்சியர்.
வலையில் சிக்கினால் நாம், சிலந்தி
வலையில் சிக்கின ஒரு பூச்சிதான்.
வில் வணக்கம் தீங்கு குறிப்பது போன்றே,
சொல் வணக்கமும் தீங்கைக் குறிக்கும்.
வெளித் தோற்றத்துக்கு மயங்கிவிடும்
வெகுளிகளின் கதியோ அதோகதி!
சின்ன மீன்களைப் போட்டுப் பிடிப்பார்கள்
சில மனிதர்கள், மிகப் பெரிய மீன்களை;
கொள்ளை கொள்ளும் சிரிப்பால் மயக்கிக்
கொள்ளை அடிப்பார் சில வஞ்சியர்.
காரணம் இன்றிக் குழைவோரிடம் மிக
கவனமாகவே நீங்கள் இருந்திடுங்கள்.
காரியம் ஆகவேண்டியே நடிக்கும் அந்த
காரிகைகள் வாழ்வினை அழித்திடுவர்.
விழிப்புடன் இருந்தால் மட்டுமே
பிழைத்துக் கொள்ள முடியும்.
வழுக்கிவிட்டோம் எனில் வாழ்வே
நழுவிப் போய்விடும் அல்லவா?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.