த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்
யஸ்மின்நேதத்3 விபா4தம் யத இத3
மப4வத்3யேன சேத3ம் யஏதத்
யோSஸ்மாது3த்தீர்ண ரூப : க2லு
ஸகலமித3ம் பா4ஸிதம் யஸ்ய பாஸா|
யோ வாசம் தூ3ர தூ3ரே புனரபி மனஸாம்
யஸ்ய தே3வா முனீந்த்3ரா :
நோ வித்யு3ஸ் தத்வ ரூபம் கிமுபுனரபதே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || (98-1)
அதிஷ்டான ரூபியான எவரிடம் இந்தப் பிரபஞ்சம் ஆரோபிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்றதோ; உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் உள்ள
எவரிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ;
எவரிடம் சென்று இந்தப் பிரபஞ்சம் ஐக்கியம் ஆகின்றதோ;
எவர் இந்தப் பிரபஞ்சமாகவே தோன்றுகின்றாரோ;
எவர் இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் வேறான உருவம் கொண்டவரோ;
எவருடைய பிரகாசத்தால் இந்தப் பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ;
எவர் வாக்குக்கும், மனோ விருத்திக்கும் வெகு தூரத்தில் இருக்கின்றாரோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லையோ; எவருடைய உண்மை ஸ்வரூபத்தை எவருமே அறியவில்லையோ;
அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனுக்கு என்னுடைய நமஸ்காரம்.