• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sangalpa Slogams for Foreign countries during thanrpanam

Status
Not open for further replies.
அன்புடையீர்,
நமஸ்தே. வெளிநாடுகளில் வாழும் நமது உறவினர்களுக்கு பயன் படும்படியாக ஒவ்வொரு நாடுகளின் புராண பெயர்களையும் தர்பண விதியின் படி சங்கல்ப ஸ்லோகங்களையும் (உ.ம்) அமெரிக்கா, கனடா, சைப்ரஸ் தீவு, ரஷ்யா, அரேபியா, ஹாங்காங் ஆகிய இடங்களின் சங்கல்ப ஸ்லோகங்களை தெளிவுபடுத்தினால் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.
அன்புடன்,
சந்திர சேகரன். S.
 
அன்புடையீர்,
நமஸ்தே. வெளிநாடுகளில் வாழும் நமது உறவினர்களுக்கு பயன் படும்படியாக ஒவ்வொரு நாடுகளின் புராண பெயர்களையும் தர்பண விதியின் படி சங்கல்ப ஸ்லோகங்களையும் (உ.ம்) அமெரிக்கா, கனடா, சைப்ரஸ் தீவு, ரஷ்யா, அரேபியா, ஹாங்காங் ஆகிய இடங்களின் சங்கல்ப ஸ்லோகங்களை தெளிவுபடுத்தினால் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.
அன்புடன்,
சந்திர சேகரன். S.

Shri Chandrasekaran Sir,

Here we will have a big problem, I feel. According to our brahmanic saastras, a brahmanan crossing an ocean falls out of caste.

ஜாதி ப்ரஷ்டன் ஆகி விடுகிறான். திரும்பி வந்தாலும் கூட தக்க ப்ராயஸ்சித்த விதிகள் பண்ணினால் தான் அவன்/அவள் ப்ராஹ்மணத்வத்தைத் திரும்பப்பெற முடியும். நமது சாஸ்திரங்கள் அப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கும்போது வெளிநாடு போய் அங்கு ஸ்திரவாஸம் பண்ணுபவரும், வெளிநாடு போய் வந்தவரும் பிராஹ்மணரே அல்லர். பின் தர்ப்பணம் ஏது, சிரார்த்தம் ஏது அவர்களுக்கு? சங்கல்பம் தான் ஏது?
 
Shri Chandrasekaran Sir,

Here we will have a big problem, I feel. According to our brahmanic saastras, a brahmanan crossing an ocean falls out of caste.

ஜாதி ப்ரஷ்டன் ஆகி விடுகிறான். திரும்பி வந்தாலும் கூட தக்க ப்ராயஸ்சித்த விதிகள் பண்ணினால் தான் அவன்/அவள் ப்ராஹ்மணத்வத்தைத் திரும்பப்பெற முடியும். நமது சாஸ்திரங்கள் அப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கும்போது வெளிநாடு போய் அங்கு ஸ்திரவாஸம் பண்ணுபவரும், வெளிநாடு போய் வந்தவரும் பிராஹ்மணரே அல்லர். பின் தர்ப்பணம் ஏது, சிரார்த்தம் ஏது அவர்களுக்கு? சங்கல்பம் தான் ஏது?

Quite right.

But...
Expiation will be some tough "prayachitam" prescribed in sastras. People want to clean their conscience by performing the "pitr karmas" in a foreign soil prescribed for Baratha Varsha, Bharata Kanda.

Regards,
 
namaste everyone.

shrI KRShNaprEmi started the 'Brahma sabhai' in 2003 with a mission to disseminate Hindu shAstra dharma among Hindu brahmins, with special reference to our Hindu diaspora. A big sadas was held in Mylapore and the publication of the manual of dharma was released. The address of the 'Brahma sabhai' is mentioned in the manual as 7, Lloyds Road, Royapettah, Chennai, from where, probably, a copy of the book could be obtained.

Following are some portions in the manual that are relevant to our Hindu brAhmaNa diaspora. Kindly note that I have done only the postman's job in bringing some of the contents of the book to our members for knowledge. Any doubts and clarifications may please be addressed to the relevant authorities.

வேதம் யாருக்கு?

16. ப்ராம்மணர்களுக்கு முறைப்படி விவாஹம் செய்துகொண்ட ப்ராம்மணஸ்த்ரீக்குப் பிறந்து, காலத்தில் உபநயனமாகி, கலப்புமணம் செய்துகொள்ளாமல் தனது ஜாதிப்பெண்ணையே விவாஹம் செய்துகொண்டு, வெளிநாடு போகாமல் தனக்குக் கிடைத்தது போதுமென்ற திருப்தியுடன் வர்ணாச்ரம தர்மங்களை செய்துகொண்டு வாழ்பவன்தான் ப்ராம்மணனாவான்.

வைதீகக்ரியை யாருக்கு?

27. அவ்வாறே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஜெர்மன் முதலிய நாடுகளில் குடியேறிய ப்ராம்மணர்களுக்கும் வைதீகக்ரியையில் தகுதி இல்லை.

28. சாஸ்த்திரத்தை மீறி தன் இச்சையால் எதைச் செய்தாலும் பயனில்லை. இது அபசாரமுமாகும்.

29. பாரதபுண்யபூமிதவிர மற்ற நாடுகளில் வைதீகக்ரியைகள் நடத்துவது சாஸ்த்ரவிரோதம். ஆனால் எந்த தேசத்திலும் எந்த காலத்திலும் எந்த நிலையிலும் ராமநாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். பக்திமார்கம் எந்த நாட்டிலும் செய்ய முடியும்.

30. ஆனால் வேதத்தில் சொன்னபடி ப்ரதிஷ்டையோ, பூஜையோ செய்யாமல், புராணத்தில் சொன்னபடி அல்லது ஆகமத்தில் சொன்னபடி ப்ரதிஷ்டை செய்துகொண்டு பூஜிக்கலாம். நாமஸங்கீர்த்தனம், புராணப்ரவசனம், அஷ்டோத்தர ஸஹஸ்ரநாம அர்ச்சனைகள் எந்த நாட்டிலும் செய்ய முடியும்.

31. வெளிநாட்டிலேயே விவாஹம் செய்துகொள்ளும் ஹிந்துக்கள் புராணமுறைப்படி செய்துகொள்ளலாம், வேதமுறைப்படி இல்லை.

32. வெளிநாட்டிலேயே செத்துவிட்ட ஹிந்துவிற்கும் கோவிந்தாக்கொள்ளி போட்டுவிட்டு நாராயணபலி என்ற க்ரியை புராணமுறைப்படி செய்தால், செத்தவனுக்கு நல்ல கதி கிடைக்கும். வேதமுறைப்படி செய்யக்கூடாது.

ப்ராயச்சித்தம்

33. வெளிநாடு சென்ற ஒரு வருஷத்தில் திரும்பிவரும் ப்ராம்மணன் பஞ்சகவ்யம் சாப்பிட்டு, பூணூல் மாற்றிக்கொண்டு, ஸஹஸ்ராவ்ருத்தி காயத்ரீஜபம் செய்து, ப்ராயச்சித்தம் செய்துகொண்டால் சுத்தமாவான். ப்ராம்மண ஸமூகத்தில் சேர்க்கப்படுவான்.

34. பன்னிரெண்டு வருஷம் வெளிநாட்டிலேயே இருந்துவிட்டவன், இந்தியாவிற்கு வந்து புனர் உபநயனம் செய்துகொண்டு, பன்னிரெண்டாயிரம் காயத்ரீஜபம் செய்து, க்ருச்ரப்ரத்யாம்னாயமாக ஹிரண்யதானம் செய்து, ப்ராயச்சித்தம் செய்துகொண்டால் ப்ராம்மண ஸமூகத்தில் சேர்க்கப்படுவான். இவர்களுக்கு ப்ராயச்சித்தம் செய்துகொண்ட பிறகு வேதோத்தமான க்ரியைகள் உண்டு. பன்னிரெண்டு வருஷம் வெளிநாட்டிலேயே தங்கிவிட்டவன் ப்ராம்மணஜாதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளான். அவனுக்கு வேதம் கிடையாது. ஆனால் ஹிந்துமதத்திலிருந்து விலக்கப்படவில்லை. புராண விதி உண்டு.

35. வெளிநாட்டுப் பெண்களை விவாஹம் செய்துகொண்ட ப்ராம்மணர்களுக்கும் வைதீகக்க்ரியை கிடையாது. புராண முறைப்படி க்ரியைகள் செய்யலாம்.

36. தந்தை முதலிய முக்கிய பந்து வெளிநாட்டிலேயே செத்துவிட்டால், இந்தியாவிலுள்ள கர்த்தா தர்பஸம்ஸ்காரம் செய்து கர்மாவும் ச்ராத்தமும் செய்யலாம்.

.37 கர்த்தா வெளிநாட்டில் இருக்கும்போது இங்கு அவனது முக்கிய பந்து காலமாகிவிட்டால், அவனது அனுமதியை தொலைபேசிமூலமாகவாவது பெற்று வெதப்ர்ஹாமணனே வேறு கர்த்தாவைக்கொண்டு ஈமக்கடன் நடத்தலாம். முக்கிய கர்த்தா வந்தபிறகு மற்ற கர்மாக்களை அவனைக்கொண்டு செய்விக்க வேண்டும். அவனும் தான் வெளிநாடு போய்வந்த ப்ராயச்சித்தத்தை முதலில் செய்துவிட்டு, கர்மாவைத் தொடஙவேண்டும்.

38. வியாதிஸ்தன், பித்துப்பிடித்தவன், சிறையில் அகப்பட்டவன், தூரதேசம் போனவன், யுத்தத்தில் அகப்பட்டவன், விபத்தில் அடிபட்டவன், முதலியவர்கள் வேதப்ராம்மணர்களைக்கொண்டு ச்ரார்த்தம் முதலிய க்ரியைகள் செய்யலாம். கர்த்தாவின் அனுமதிபெற்று, ’அஸ்ய யஜமானஸ்ய’ என்று சொல்லி வாத்தியார் அதை நடத்தலாம். இதனால் கர்மாவை விடக்கூடாது.

39. தூரதேசம் சென்றவன் திரும்பி வராமலேயே என்ன ஆனான் என்று தெரியாதுபோனாலும், பன்னிரெண்டுவருஷம் எதிர்பார்த்துவிட்டு, அவனுக்குத் தர்ப்பணஸம்ஸ்காரமும், கர்மாவும் செய்துவிடலாம். ஒருகால் அவன் திரும்பிவந்துவிட்டால், அவனுக்குப் புனருபநயனம் செய்விக்க வேண்டும்.

40. ஒரு ப்ராம்மணன் ஒரு ப்ராம்மணப்பெண்ணை ரிஜிஸ்டர்மேரேஜ் செய்துகொண்டாலும், பிறகு வைதீகமுறைப்படி அவசியம் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ம்லேச்சதேசம்

53. துபாய், மஸ்கட், லங்கை, சிங்கப்பூர் முதலியவை துவாரகையைப்போல் பாரதபூமியின் உபத்வீபங்களாகவே இருப்பதால் வெளிநாடு ஆகாது. இங்கு வைதீககாரியங்களைச் செய்யலாம். ஆயினும் ம்லேச்சராஜ்ஜியமாக இருப்பதால் போய்வந்தவர்களுக்கு ப்ராயச்சித்தம் உண்டு.

54. ஆப்கானிஸ்தான் காந்தாரதேசமாயும் பாகிஸ்தான் ஸிந்துதேசமாயும் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாயும் இருப்பதால், இவைகளும் பாரதபூமியேதான். ஆயினும் ம்லேச்சராஜ்ஜியமாக இருப்பதால் போய்வந்தவர்களுக்கு ப்ராயச்சித்தம் உண்டு.

55. ரஷியா, சைனா, இந்தோனேஷியா, க்ரேக், ஜப்பான் முதலியநாடுகள் பாரதவர்ஷத்தில் ஜம்பூத்வீபத்திலேயே இருக்கும் நாடாக இருப்பதால் இவைகளும் ஆர்யபூமிதான். ஆயினும் ம்லேச்சராஜ்ஜியமாகவும் பாஷாண்டராஜ்ஜியமாகவும் இருப்பதால் ப்ராயச்சித்தம் உண்டு.

56. வெளிநாடு போய்வந்தவர்களுக்கு பாரத தேசத்திலேயே இருக்கும் வேதப்ராம்மணர்கள்தான் ப்ராயச்சித்தம் செய்துவைக்கவேண்டும்.

57. வெளிநாடு போய்வந்த வேதப்ராம்மணனை ப்ராயச்சித்தம் செய்துகொள்ளாவிடில் ஸமூகத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. வைதீகக்ரியைகளுக்கு அர்ஹதை இல்லை. அவன் நடத்தும் வைதீகக்ரியைகளுக்கும் வேதப்ராம்மணர்கள் போகக்கூடாது. ப்ராயச்சித்தம் செய்துகொள்ளாமல் அவன் கோவில்பூஜையும் செய்யக்கூடாது.
**********
 
அன்புடைய திரு. சாயி தேவோ அவர்களுக்கு,
நமஸ்தே,
தங்களது தெளிவான விளக்கங்களுடன் கூடிய பதிலை மிகவும் பயனுள்ளதாக எண்ணுகிறேன். அது பற்றிய புத்தகம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறிர்கள். அதன் விபரங்களை எனக்கு தெரிவிக்கவும்.
அன்புடன்,
சு.சந்திர சேகரன்.
 
namaste shrI S.Chandrasekaran.

A book titled 'Brahma Sabhai', which was more like a souvenir, was published soon after the conference in 2003, at a cost of Rs.120/- and I was fortunate to buy it from a devotee of shrI KRShNapremi, some three years back. Perhaps you might check at the following address to find out if the book is still in print:

Brahma Sabhai
No.7, LLoyds Road
Royapettah
Chennai
 
There is a change in sankalpa mantram at Kaasi compared to South (to Vindhyaas). Those days the opinions were good. Today the question is whether you would like to be a Brahman or a bread-winner (using the word 'bread' itself is abacharam). I think the ideal thing is to do sankalpam omitting, places and geographical position, suitably adopting panchangas to the respective time zones. I think it will be satisfying to the 'karta'. Certainly, I do not mean any disrespect to the shastric or rather social systems.
 
sir,
The sankalpa mantram varies. But I do not know what exactly it is. You can contact
the local priest who, i am sure, will guide you.

Like for instance , in Madras, at the time of shraddha when the Brahmanas are offered
bhojanam, the karta walks a few steps towards north , saying ' Gaya, Gaya,Gaya '

In Delhi, they take a few steps towards southeast, since Gaya is situated south east
of Delhi.
 
Dear Saidevo

Greetings. In some houses I find they keep thirty to forty vigrahams big and small and pictures of Gods on the walls.
I personally feel that one must focus on one or two Gods of their Kuladeivam and seek unto His or HER blessings.
By keeping thirty or forty vigrahams and pictures on the walls you are not able to perform pujas to each and every
moorthi with utmost sincerity and tenacity. Grateful for your considered views as to what the age old tradition is.

PC RAMABADRAN
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top