• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sankatahara Chathurthi Doubts-2

sapsrikaanth

Active member
Hello All,
I have few more queries in Sakatahara Chathurthi

please can you educate me on the following things
1) I live in first floor, wherther it is fine to provide ARGHYA in First floor or should I give in Ground floor?
2) can I use a copper plate for ARGHYA (in first floor) and then leave the water in any plant (in 1st Floor) ?
3) in which place we have to give ARGHYA (as per tradition / scripts) ?
4) During ARGHYA, what mantra I have to pray ?
5) After ARGHYA, whether I to have to pray Vinayagar / (Ganapathy) or before ARGHYA I have to pray Vinayagar / (Ganapathy) ?
6) if I donot see the moon, should I need to eat the next morning ?
7) please can you enlist the benefits of Sankatahara Chathurthy ?
8) Sankatahara Chathurthy is done after full moon period . similarly, do we have a procedure for this puja after "no moon day" too ? if so what it is called as ?
9) please can you educate me with a script / book name that tells full procedure (as per vedam / upanishad) for this Sankatahara Chathurthi ?
Thank you and kindest regards
Srikaanth
 
சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.

ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.

சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்

இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு

அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்

ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;

கெளரீ புத்ராய கணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி

வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( (பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;

தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்

கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.

1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம்
கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
இதமர்க்கியம், இதமர்கியம்;

2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
இதமர்கியம், இதமர்க்கியம்.

3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.

4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.

கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா.

என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.

பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.

விநாயகர் புராணம் என்னும் புத்தகம் ப்ரேமா ப்ரசுரம் எல்லா கிரி ட்ரேடிங்க் ஏஜன்சியில் கிடைக்கும். அதில் எல்லா விவரமும் உள்ளது. முதல் மாடியிலேயே வினாயகருக்கு எதிரில் கிண்ணத்தில் அர்கியம் விடவும். அங்குள்ள செடிக்கு அதை ஊற்றலாம்.

முதல் மாடியிலேயே பூஜை செய்யலாம். சந்திரன் தெரியாவிட்டாலும் பூஜை முடிந்தவுடன் சாப்பிடலாம். அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்திக்கு சுக்ல சதுர்த்தி என்று பெயர். ஆவணி மாதம் வரும் வினாயக சதுர்த்தி பூஜை முறையே மாதா மாதம் செய்யலாம்.

ஒரு வருடம் செய்த பிறகு விரத சூடாமணி புத்தக படி விரத உத்யாபனம் செய்ய வேண்டும்.. வினாயகர் புராணம் புத்தகத்தில் பல விவரங்கள் உள்ளன,
 
Sir , Great. Thank u so much. Nandri. I read in Google that one should not have dinner if the moon is not sighted. Let me check the reference book u have provided and I will u further doubts, if any. Like ekadsi no need to fast during suklapaksha vinayagar chathurthi ? u r always helping me. Will be glad if I can meet u one dayy y
 

Latest posts

Latest ads

Back
Top