உதக சாந்தி;
ஆசமனம்;-என்பது காக்கும் கடவுளாம் மஹா விஷ்ணுவை மனதில் இருத்தி சுத்தமான நீரை உட்கொன்டு உள்ளுருப்புகளை சுத்தம் செய்து கொண்டு இறை வயப்படுதல்.பின்னர் கடவுளின் பன்னிரண்டு நாமங்களை போற்றி அவயங்களுக்கு ரக்ஷை இட்டுக்கொள்ளுதல்.
அச்யுதாய நம; அநந்தாய நம; கோவிந்தாய நம; கேசவ, நாராயணா----தாமோதர;
ஹரி;ஓம்; ஶ்ரீ குருப்யோ நம: குருர் ப்ருஹ்மா, குரூர் விஷ்ணு: குரூர் தேவோ மஹேச்வர; குருஸாக்ஷாத் பரப்ருஹ்ம: தஸ்மை ஶ்ரீ குரவே நம: குரவே சர்வ லோகனாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயே சர்வ வித்யானாம் ஶ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நம;
ஸதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம். அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்.குரு சரணார விந்தாப்யாம் நமோ நம;
காலையில் ஸ்நானம் செய்து கணவன் மனைவி இருவரும் பஞ்ச கச்சம், மடிசார் மடி உடுத்தி நெற்றிக்கி இட்டுக்கொண்டு . சந்தியா வந்தன , ஜபம் செய்து விட்டு குத்து விளக்கு ஏற்றவும்..
மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படத்திற்கு எதிரே வைத்து நமஸ்காரம்.. . பிறகு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் தேங்காய் கொடுத்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லி ஆசி பெறுதல்.
ஆசார்யனையும், ருத்விஜர்களையும் மனைவி பின் தொடர ப்ரதக்ஷிணம் செய்யவும். பூஜை செய்ய வேன்டிய இடத்தி.ல் கிழக்கு நோக்கி நிற்கவும்.
ரித்விஜர்களை பார்த்து அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அநுக்ருஹணந்து.. ரித்விஜர்கள் மறுமொழி; அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து.
நின்ற வாறே ஆசார்யனிடம் பவித்ரம், அக்ஷதை பெற்றுக்கொண்டு வலது கை மோதிர விரலில் பவித்ரத்தை போட்டுக்கொன்டு அக்ஷதையை சிறிது தன் தலையிலும், சிறிது மனைவி தலையிலும் போடவும்.
பவித்ரம் தரித்து கொள்ள மந்திரம்: ருத்த்ஸ்யாம ஹவ்யைர் நமஸோப ஸத்ய . மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து.அனுராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீரா:
நான்கு வெற்றிலை, இரன்டு பாக்கு, பழம், தக்ஷிணை , தேங்காய் அடங்கிய தாம்பாலத்தை எடுத்துக்கொண்டு ருத்விஜர்களை பார்த்து நின்று கொண்டு மனைவி வலது பக்கம் நிற்க வேன்டும். கீழ் வரும் வாக்கியம் சொல்லவும்.
ஹரி;ஓம். நம: சதஸே நம: சதஸ: பதயே நமஸ்சகீனாம் புரோகாணாம் சக்ஷுஷே நமோ திவே நம:ப்ருத்வ்யை. ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ
நம:என்று கூறி அக்ஷதை போட்டு நமஸ்காரம் செய்யவும்.
கையில் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆசாரியனிடம் தாம்பாளத்தை கொடுக்கவும்.
. கணவன், மணைவி, குழந்தைகள். தாயார், தகப்பனார், , அண்ணன்,தம்பி, இவர்கள் மனைவி. குழந்தைகள். இவர்களின் கோத்ரம் பிறந்த நக்ஷத்திரம், பிறந்த ராசி, பெயர், உறவு இவைகளை எழுதி ஆசாரியனிடம் கொடுத்து விடவும்.,
இப்போது ஆசாரியார் சொல்வதை எஜமானன் சொல்ல வேன்டும்.
------------------நக்ஷத்ரே-----------ரா-செள ஜாதஸ்ய-----------சர்மண: மம ----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா;
ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,
ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம
மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹைதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உபநயன) ( சீமந்த)
கர்மாங்கம் ஏபி: ப்ராஹ்மணை : சஹ போதாயந உக்த ப்ராகாரேண உதகசாந்தி கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ருஹாண.
பதில்; யோக்கியதா ஸித்திர் அஸ்து.
மனைவி வலது புறம் உட்கார்ந்திருக்க மஞ்சள் பொடியில் பிள்ளயார் பூஜை.;
பிறகு ஆசனத்தில் கீழ் 4 தர்பங்கள் போட்டுக்கொண்டு தர்பேஷ்வாஸீன:
எனச் சொல்லி ஜலத்தை தொட்டு விட்டு கையில் விரல் இடுக்கில் 4 தர்பங்கள் சேர்த்துக்கொன்டு தர்பாந் தாரயமாண என சொல்லி தொடங்கவும்.
கர்த்தா வலது புறம் நின்று கொண்டிருக்கும் தனது மனைவியை இடது புறம் வரச்சொல்லி அவர் கைகளில் தான் வடக்கு புறமாக பார்த்துக்கொன்டு ஜலம் விட வேண்டும்.பிறகு ஆசார்யனிடமிருந்து 6 தர்ப்பை வாங்கி பத்னி கையில் கொடுக்க வேன்டும்.:
மனைவி வலது பக்கமாக அருகில் இருந்து தர்பைகளை கையில் தாங்கிய வாறு தர்ப்பை நுனிகளால் தன் கணவரை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ஸங்கல்பம் முடியும் வரை எவருடனும் பேசாமல் மந்திரங்களை கூர்ந்து கேட்டு கொன்டிருக்க வேண்டும்.
சங்கல்பம் முடிந்தவுடன் தன் கையில் மூடிக்கொண்டிருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டு விட்டு ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவி கையில் உள்ள தர்பைகளை வாங்கி வடக்கு பக்கம் போட
வேன்டும்.தன் கையால் ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவியை வடக்கு பக்கம் வரச்செய்து அவர் கையிலும் ஜலம் விட வேண்டும். இதன் பின்னரே மனைவி அங்கிருந்து நகர்ந்து செல்லலாம். பிறருடன் பேசலாம்.
வாத்யார் சொல்லும் சங்கல்ப மந்திரங்களை சொல்லவும். சுக்லாம்பரதரம்==
ப்ராணாயாமம்+= மமோ பாத்த சமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண; துதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே
அஷ்டாவிம்சதீதமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரதஹ் கன்டே மேரோ; தக்ஷினே பார்ஸ்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே சாலிவாஹண சகாப்தே ப்ரபவாதி சஷ்டி
ஸம்வத்சராணாம் மத்யே ----------நாம ஸம்வத் ஸரே
----------- அயனே-----------ருதெள--------மாஸே----------பக்ஷே------------சுப திதெள==--------
வாஸர;--------நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்----------சுபதிதெள
-----------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய------------சர்மண;மம; ----------நக்ஷத்ரே--------ராசெள, ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா:
ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,
ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம
மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உPAநனயன)
கர்மாங்கம் உதகசாந்தி கர்ம கரிஷ்யே, ததங்கம் க்ருஹப்ரீதி தாநம் ச கரிஷ்யே. ஜலம் தொடவும்.
விக்னேஷ்வரர் யதாஸ்தானம். க்ருஹ ப்ரீதி தானம். ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா சங்கல்பித உதகசாந்த்யாதி ஆரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ருஹானாம் ஆநுகூல்ய சித்யர்த்தம் யே யே க்ருஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: யே யே க்ருஹா; சுபஸ்தானேஷு
ஸ்திதாஸ்ச தேஷாம் தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப ஏகாதச ஸ்தான பல அவாப்த்யர்த்தம், ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரசாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய; ஸம்ப்ரததே நம: ந மம.
கும்ப ஸ்தாபனம்;
கும்பத்தோடு சஹஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம். .அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து ஈராயிரம் நாடி நரம்புகள். கும்பத்தில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல். கும்பத்தில் விடப்படும் நீர் ரத்தம் மற்றும் ஏழு தாதுக்கள்.
கும்பத்துக்குள் இடப்படும் நவரத்தினம் , வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம். உள்ளே இடப்படும் கூர்ச்சம் முதுகெலும்பு. மாவிலை=ஜடை; தேங்காய்=கபாலம். ;வெளியே இடப்படும் கூர்ச்சம் ராக்ஷஸர்களை விரட்டும்
குடுமி. நியாஸங்கள், ப்ராணப்ரதிஷ்டை முதலாஃன மந்திரங்கள் ஜீவன்; கீழே பரப்பபடும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம். உத்தரீய மாலைகள். மலர்கள் முதலியன அலங்கார பொருட்கள்.
பொன், வெள்ளி, பஞ்சலோக, தாமிர, வென்கல, பித்தளை, அல்லது மண் குடம் உபயோகிக்க வேன்டும். கோதுமை, அல்லது நெல் அடியில் பரப்ப வேன்டும். நூல் சுற்றிய சுத்தமான குடத்தை தூபம் காட்டி குடத்தை கவிழ்த்து வைத்து பின்பு நிமிர்த்த வேன்டும். பவித்ரம் வைத்து நீர் நிரப்ப வேண்டும்.
கங்கை முதலான புண்ய நதி தீர்த்தம் பெறப்பட்டு நிரப்பலாம்.. வாசனை திரவியங்கள் ஏலக்காய், கிராம்பு, பச்சை கல்பூரம், விலாமிச்சை வேர். , வெட்டி வேர் இந்த நீரில் இடல் வேன்டும்.
உள்ளே அந்தஹ் கூர்ச்சம் வைக்க படும். ஐந்து வகை மரப்பட்டைகள் உள்ளே வைக்கலாம் .நவரத்தினம், மாந்தளிர், தேங்காய், பதுமை, பட்டு, பூணல்;, அலங்கார கூர்ச்சம், சந்தனம், புஷ்ப மாலை இவற்றை மேலே சார்த்தி அலங்கரிக்க வேன்டும்.
கலசம் வைத்து பூஜிக்க வேண்டிய இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும். . காய்ந்த பிறகு
கோலம் போட்டு அதன் மேல் நெல் அல்லது கோதுமை பரப்பி
அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்பவும். இதற்கு ஸ்தன்டிலம் என்று பெயர்.
கீழ் கன்ட மந்திரம் கூறி , ஸ்தண்டிலத்துல் . மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தர்பையால் மூன்று நேர் கோடுகளை வரையவும். நடுக்கோடு: --ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸுருச; வேந ஆவ: ஸ புத்னியா: உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;
வலது கோடு—நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் ஹ்ருதா வேநந்தோ அப்யஸ்சக்ஷதத்வா. ஹிரண்ய பக்ஷம் வருணஸ்ய தூதம் யமஸ்ய
யோநெள சகுணம் புரண்யும்.
இடது கோடு:- ஆப்யாய ஸ்வசமே துதே விஷ்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய சங்கதே.
பிறகு கீழ்கண்டவாறு சொல்லி , தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மூன்று கோடுகள் வரையவும்.
நடுக்கோடு:- யோ ருத்ரோ அக்னெள யோ அப்ஸு ய ஓஷதீஷூ யோ ருத்ரா விச்வா புவநா ஆவிவேச; தஸ்மை ருத்ராய நமோ அஸ்து. . அப உபஸ்பர்சியா ( ஜலத்தை தொடவும் ). சிவனுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இங்கு ஜலம் தொடப்படுகிறது.
மேல் கோடு:--இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம். ஸமூடமஸ்ய பாகும்ஸுரே.
கீழ் கோடு இந்த்ரம் விச்வா : அவீவ்ருதந் சமுத்ரவ்யசசம் கிர: ரதீதமகும் ரதீனாம் வாஜாநாகும் ஸத்பதிம் பதிம் தர்பாந் நிரஸ்ய.
அப உபஸ்ப்ருஸ்ய;-- தர்பையை வடக்கே போட்டு விட்டு ஜலத்தை தொடுக.
ஸ்தண்டிலத்தின் மீது அரிசி மீது இலை போட்டு கருப்பு உளுந்து போட்டு அதன் மேல் இலை போட்டு கறுப்பு எள் போட்டு , அவற்றை சதுரம் செய்து
, அதில் அஷ்டதளம் போட்டு , நான்கு தர்பைகளை கிழக்கு நுனியாக போட்டு , சந்தன நீர் தெளித்து , புஷ்பங்களை தூவி , கலசத்துக்கான கும்பத்தை அமர்த்தவும்.
அமர்த்தும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்;--ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி .தியோயோ ந ஹ ப்ரசோதயாத்..
கும்பத்துள் நீர் நிரப்பி , அந்த உதகும்பத்தை தர்பையினால் தொட்டுக்கொண்டு பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸ்யாப: ஜ்யோதிகும்ஷ்யாப: யஜும்கும்ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்.
பிறகு தீர்த்த பாத்திரத்திலிருந்து உத்தரிணீயால் ஜலத்தை எடுத்து , பின் வரும் மந்திரங்களை ஜபித்தவாறே கும்பத்தில் விடவும்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா- மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க. கையிலிருக்கும் தர்பைகளை மோதிர மற்றும் கட்டை விரல்களால் பிடித்துக்கொன்டு , உள்ளங்கைகள் இரண்டும் மேல் இருக்குமாறு
வைத்துக்கொண்டு , தர்பைகளின் நடுப்பகுதியால் உதகும்ப நீரை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும் .அவ்வாறு தள்ளும் போது கீழ் கண்ட மந்திரங்களை முமுறை ஜபிக்கவும்.
தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேது அர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம் மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாம வஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;
யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுரு ஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதி பதிம் வருணம் த்யாயாமி ;கும்பத்தை தொட்டு வருணனை த்யானிக்கவும். வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;
ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
ஜபம் செய்ய உள்ளவர்களை ஒவ்வொரு வராக நோக்கி ப்ரார்தனை.:
அஸ்மின் உதகசாந்தி ஜபகர்மணி ப்ராச்யாதி திக்ஷு ஜபகர்த்ருப்ய; ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ஆசாரியருக்கும் ருத்விக்குகளுக்கும்
அக்ஷதை போடவும். கையில் உள்ள தர்பையால் கும்பத்தை தொட்டவாறு ஜபத்திற்கு அநுமதி கேட்டல். உதசாந்தி ஜப கர்ம குருத்வம். வயம் குர்ம: என்று ஜபம் செய்ய உள்ளவர்கள் அனுமதிக்க வேண்டும்.
பின்னர் கும்பத்தை தர்பைகளால் தொட்டவாறு பின்வறுமாறு ஜபிக்கவும்.
ஓம் பூ; த்த்ஸ விதுர்-வரேண்யம், ஓம் புவ; பர்கோ தேவஸ்ய தீமஹீ. ஓகும் ஸுவ; தியோ யோ ந; ப்ரசோதயாத்.. ஓம் பூ: த்த் ஸ விதுர்வரேன்யம்
, பர்கோதேவஸ்ய தீ மஹி: ஓம் புவ: தியோயோ ந ப்ரசோதயாத்.. ஓகும் ஸுவ: த்த் ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி ; தியோயோ ந : ப்ரசோதயாத்.
இனி ஜபம்,. கும்பத்தின் நாற்புரதிலிருந்து கொன்டு குறைந்தது நான்கு ருத்விக்குகள் , கும்பத்தை தர்பையால் தொட்டவாறு ஜபம் செய்தல்
வேன்டும். யஜமானனும் சேர்ந்து ஜபிப்பது நல்லது. அவரால் இயலாவிட்டால் காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறு அமர்ந்து இருக்க வேன்டும்.
1. ருக் வேத துவக்க மந்திரம். 2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேதத்தின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம். 5. ரக்ஷிக்கும் அக்னியின் மஹிமையை கூறுதல்
.6. இந்திரனை குறித்த யாகங்களை நினைவு கூர்ந்து கால் நடைகளின் வளமை வேண்டல்.;7. பயம் தருவதை களைந்து அபயம் அளிக்குமாறு இந்த்ரனை வேண்டுதல். 8 பகை அழித்து நலன்கள் அருளுமாறு இந்த்ரணை வேண்டல் ( பகை என்பது நமது கெட்ட குணங்கள் காமம். க்ரோதம், மதம். மாத்சர்யம். கோபம். முதலியன.
.8.கணங்களோடு வந்து மகிழ்ந்து சத்துருக்களை அழித்தருளுமாறு இந்த்ரனை வேண்டல். பகை அழித்து , அபம்ருத்யுவை போக்கி அபயப்ரதானம் அருளுமாறு இந்த்ரனை வேண்டல்.
9. பகை களைந்து . தினசரி நியமங்களை செய்து வர அருளுமாறு , அக்னி, யமன், சவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகிய தேவர்களை வேண்டல்.
10. அக்னி, யமன், ஸவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகியோருக்கு ஆஹூதி.11. அக்னி. ஸோமன், யக்ஞதேவன், ப்ருஹ்மா, தேவர்கள் ஆகியோரிடம் யஜமானனுக்கு நீண்ட ஆயுளை வேன்டுதல்.
12. யஜமானனது பாவங்களை களையுமாறு இந்த்ரனிடமும் வருணனிடமும் வேண்டல்
.13. எஜமானனை பீடித்து இருக்கும் ((அக்னி, மனிதர்கள், கால் நடை, தொழுவம், இல்லம், நீர்,, செடிகள். மரங்கள், ஆகியவை சார்ந்த)) பழிபாவங்களை ஆஹூதியாக்கொண்டு , அவற்றை அழித்து அருளுமாறு இந்தரநிடமும், வருணனிடமும் வேண்டல்..
14,. புகழும் சக்தியுமிக்கவர்களாக செய்துருளுமாறு அக்னி தேவனை வேண்டல்.15. விருப்பங்கள் நிறைவேற வேண்டி தேவர்களுக்கு ஆஹூதி அளித்தல்.16. அனைத்துலக, அனைத்து வகை ஸர்ப்பங்களையும் நமஸ்கரித்தல்.
17. அக்னி, விச்வகர்மா முதலாய திக் தேவதைகளுக்கு “இஷ்டி” (பலி அல்லது உணவு)அளித்து பகை யழிக்க வேண்டல். 18. பகை அழித்து , நாட்டினை மேம்படுத்திட இந்தரனை வேண்டல்.
19. சமகம்—சாந்தி பாடம்—வாழ்க்கை நலன்கள் அனைத்தும் வேண்டல்.
20. அக்னி, இந்த்ரன், மருத் கணங்கள், விஷ்ணு, வாயு, உர்வீ தேவியர்
அச்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி ஆகிய அனைவரையும், விரைந்து வந்து ரக்ஷித்து ,செல்வங்களை அருளுமாறு வேண்டல்/.
21. அச்வமேத யாக மந்திரம்களை கூறி விருப்பங்கள் நிறைவேறவும், பாவங்கள் தொலையவும் தேவதைகளையும், அக்னியையும் வேண்டல்.
அக்னி,
இந்த்ரன், ஸோமன், வருணன், ப்ருஹஸ்பதி, யமன், ஆகியோரிடம் அவர்களது ஸர்பங்களுக்கு நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ள வேண்டல்.,