ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி
திருமால் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தி யாகும்.
நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்ய ப்படுகிறது. ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.
அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூ ச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.
திருமாலின் 24 அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழி படக்கூடிய கடவுள் ஆவார். தன்வந் திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
தன்வந்திரி அவதாரம்
அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப் படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண்டை இடுவது உண்டு. தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள். அசுரர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர் . சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றும் சாவு கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.
பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால், அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகாலக்ஷ்மி தோன்றினர். கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாவாவரம் பெற்றனர்.
"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன் திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.
பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே, காலைவரை காத்திருந்து விட்டு திரும்பி சென்றதாகவும், மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக் கதை உள்ளது.
தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியது தன்வந்திரி கடவுளே காரணம் என மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று, இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.
தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.’
விளக்கம்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராக வும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்க ளில் ஏந்தி, அனைத்து பயங்களை போக்கு பவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலக ங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
மந்திரங்களுக்கு சக்தியும், பலமும் அளவிட முடியாது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும், வெல்லமும் சேர்த்து தயாரித்த பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம். தன்வந்திரி போற்றி சொல்லி நோய்களிலிருந்து விடுபடலாம்.
ஸ்ரீ தன்வந்திரி பெருமானை வணங்குகிறேன்.