• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Rrama Navami is on Saturday, 28th March 2015.

Status
Not open for further replies.
Sri Rrama Navami is on Saturday, 28th March 2015.


180px-Lord_Rama-image.jpg



Since Shriram is an incarnation of Shrivishnu, He too is worshipped like Shrivishnu in sixteen steps (Shodashopachārpūja). The leaves of the sacred and medicinal plant called tulsī, found in India, are essential for His worship. Tulsi has the ability to attract the subtlest pure particles (pavitraks) of Shrivishnu. It is even better if one can use Lotus flowers for the worship.

A sweet delicacy made from milk and rice or vermicelli (kheer) or a sweet delicacy made from semolina, pure ghee and sugar (sheera) is Shrivishnu's favorite sacrament (Naivēdya). Choosing the substances offered in the worship according to the science of spirituality helps generate Divine Consciousness (Chaitanya) in the idol, so that it aids one's spiritual progress.

Shree Ram Navami - how to celebrate?
Celebrating Sri Ram Navami
Rama Navami - Hindupedia, the Hindu Encyclopedia
 
உன்னதமான மந்திரமாக ராமநாமம் விளங்குகிற&#

உன்னதமான மந்திரமாக ராமநாமம் விளங்குகிறது.


11083850_893776583977660_6700657137410781110_n.jpg




திருமாலின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் திருப்பிறப்பு
சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில்
கடக லக்னத்தில் நிகழ்ந்தது.


நடுப்பகலில் கோடை வெயிலில் ஸ்ரீஇராமர் அவதாரம்
அயோத்தியில் நிகழ்ந்தது.


ராமர் ஏற்றுக் கொண்ட வனவாசமும் (உஷ்ணத்திலேயே)
பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்தது.


பரந்தாமனின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டே பக்தர்கள் ராமநவமி நன்னாளில் பானகமும் நீர் மோரும் படைத்து மகிழ்கிறோம்


ஸ்ரீஇராமரின் சரித்திரமான இராமாயண விரிவுரையைக் கேட்டுப்
பயன் பெறுகிறோம்..


மூலமந்திரமான ராமநாமத்தை எழுதியும், உச்சரித்தும்
உருவேற்றியும் மகிழ்கிறார்கள்.


உலக சகோதரத்துவம்’ என்ற வார்த்தைக்கு உயர்ந்த சரித்திரமாக விளங்குவது ராமாயணம்தான்.


கங்கைக் கரையில் வேடுவன் குகன், கிஷ்கிந்தையில் குரங்கினத் தலைவன் சுக்ரீவன், இலங்கையில் அரக்கரினத்தைச் சேர்ந்த விபிஷணன், அனைவரையும் தம்பியராக ராமர் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் வரலாறுதானே இராமாயணம்....!


நவமியில் பிறந்த நாயகரான ராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார்.


‘ஓகமாட ஓக பாணமு ஓக பத்னி வரதுடே’ என்கிறது
தியாகய்யரின் கீர்த்தனை.


ஒரு சொல், ஒருவில், ஒரு இல் என
நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது.


‘பட்டாபிஷேகம்’ என்று ராமர் பரவசப்படவில்லை.


‘வனவாசம்’ என்று ராமர் வருத்தப்படவில்லை.


இன்பத்தையும், துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக் கொண்டார். ‘இன்றுபோய் போருக்கு நாளை வா’ என பகைவனுக்கும் கருணை காட்டினார்.


வானரங்கள், பறவை ஜடாயு, கரடி ஜாம்பவான், அணில், என ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்ற மேலான சமத்துவம் கடைப்பிடித்து வாழ்ந்த இதிகாச நாயகரே இராமர்.


ஸ்ரீஇராமநவமி வைபவத்தைக் கொண்டாடும் நாம், ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!


எங்கெல்லாம் இராம நாமம் ஒலிக்கிறதோ, இராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அழுத கண்ணும், தொழுத கையும் உடையவனாக அனுமன் நிற்கிறான் (விளங்குகிறான்)


இராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான்.

ராமர் என்ற பதமே பலருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் தான் கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன், யக்ஞராமன், சந்தானராமன், ஜயராமன், சிவராமன் என்று அனந்தராமர் நாமங்கள்.


நமக்கு மட்டுமல்ல பெருமாளுக்கே அந்த நாமம் பிடித்திருப்பதால்தான் இது வரை எடுத்த ஒன்பது அவதாரங்களில் மூன்று அவதாரப் பெயர் பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர் என விளங்குகிறது.



Source:SLOKAS N MANTRAS

Kamali Ashok
 
Tulasi das's rama charita manas

TULASI DAS'S RAMA CHARITA MANAS

Tulasidas was a great devotee of Sri Rama, who had written Ramayana with the title as 'Rama Charita Manas', which is very popular all over North India.

More than Kamba Ramayanam in the south, there in the north, they venerate this book and do PãrãyaNam quite regularly as a book of God!

It was written only some 400 years back, gaining fame as a classic literary piece, bringing much name and renown to the Hindi / Hindusthani language, which was relatively of a recent vintage.

Still, looking from the point of view of grammar, it was not written in the style and diction of high erudition but rather in the colloquial with some slokas in Sanskrit!

May be that is the reason in a way for its popularity, whereas Kamba Ramayanam written in chaste Tamil, is a bit difficult to understand for the common man.

Though Tulasidas's Rama Charita Manas does have its literary embellishments, appealing very much to highly erudite scholars, it is the Bhakti Rasa of Tulasi Das which has been the cause of its
universal acceptance and popularity.

That was the period of Muslim rule over most of India and destruction and desecration of Hindu Temples was a daily event.

Conversion was widely going on in India those days.

Still if the masses were resisting such compulsions and sticking on to their Mother Religion, the sense of devotion fed by 'Rama Charita Mãnas' was very much one of the reasons.

The character of Rama Bhakta Hanuman who would not bend his head before injustice, his physical prowess, unshakeable celibacy and bachelorhood, fearlessness and courage, his escapades against all odds, his adventurous spirit and his most sensible advices on many occasions to others; made a deep impression on the collective ethos of a whole nation!

(Source: Deivatih Kural, Vol. 7)



Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
ராமன்' என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்' என்று சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது' என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

"ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்தக் குழந்தைகள் யார்?' என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!' என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். 'ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்' என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். 'அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி தா' என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ரஹவான் தர்ம:' என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு "ராம ராம" என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

/periva.proboards.com/
 
அவதாரத்தில் மனிதத்தன்மையும் தெய்வத்தன&#3

அவதாரத்தில் மனிதத்தன்மையும் தெய்வத்தன்மையும்


தர்மோத்தரணம் செய்ய வேண்டுமென்ற லக்ஷ்யத்துக்காக இப்படி அவன் அவதாரம் எடுப்பதில் அநேக ஸாரமான விஷயங்களை உள்ளே சேர்த்துப் பிசைந்து வைத்திருக்கிறான். தர்மத்தை உபதேசம் செய்வதோடு, வாழ்ந்தும் காட்ட வேண்டும். வாழ்க்கையில் ஊறாத தர்மம் எத்தனை அழகாக உபதேசிக்கப்பட்டாலும் பயன் தராது. ஆதர்ச புருஷர்களாக ஸொந்த வாழ்க்கையில் நடத்தி வழிகாட்டுபவர்கள் இருந்தால்தான், 'அடாடா! இவர்கள் இப்படியிப்படிப் பண்ணி எத்தனை சுத்தர்களாக, சாந்தர்களாக இருக்கிறார்கள்! தாங்களும் ஆனந்தமாக இருந்துகொண்டு, லோகத்துக்கும் ஆனந்தமூட்டுகிறார்கள்! நாமும் இந்தப்படி பண்ணிப் பார்க்கவேண்டும்' என்ற எண்ணம் ஜனங்களுக்கு உண்டாகும். இம் மாதிரி ஆதர்ச வாழ்க்கை நடத்தி வழி காட்டுவதற்கும் அவனே அவதாரமாக வரவேண்டியிருக்கிறது.


ஆனால், 'ஆதர்சம்' என்பதற்காக நடைமுறையில் ஜனங்களுக்கு இருக்கிற அத்தனை போக்குகளும் தனக்கு அடியோடு இல்லை என்று அவதார புருஷன் ஒரே உச்சாணியாக இருந்துவிடலாமா? நம்முடைய உணர்ச்சி மோதல்கள் எதுவும் அவனுக்கு இல்லை, நம்முடைய ஆசைகள் எதுவும் அவனுக்கில்லை என்று எப்போதும் அதீத லெவலிலேயே அவன் இருந்து கொண்டிருக்கலாமா? கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவன் வழிகாட்டியாக, 'மாட'லாக, இருக்கவே மாட்டான். அதீத லெவலிலேயே இருப்பவன் எப்படி மற்ற லெவல்கள் இருப்பவர்களுக்கு லக்ஷ்ய புருஷனாக ஆக முடியும்? ஸாண்டோ யானையை மார் மேலே ஏற்றி நிறுத்திக் கொள்கிறானென்றால் நாம் கை தட்டி ஸந்தோஷப்படுவோம், ப்ரமிப்போமே ஒழிய அந்த மாதிரி நாம் பண்ணிப் பார்க்க நினைப்போமா? "அவனுக்கு அது முடிகிறது. நம்மால் முடியுமா?" என்றுதானே சொல்வோம்? அப்படித்தான், அவதார புருஷனொருவன் நம்முடைய பூலோக வாஸனைகளை இல்லாமல் உச்ச மட்டத்தில் பரம தார்மிகமாக எல்லாம் செய்துகொண்டிருந்தானென்றால், 'இவன் நம்முடைய மநுஷ்ய ஜாதியைச் சேர்ந்தவனேயில்லை. நமக்கு இருக்கிற மனஸின் இழுபறிப் போராட்டங்கள், ஆசாபாசங்கள் எதுவும் இவனுக்கு இல்லை' என்று அவனுக்கு நமஸ்காரம் வேண்டுமானால் நிறையச் செய்வாமே தவிர அவன் வழியிலேயே நாமும் சென்று பார்க்கலாம் என்ற உத்ஸாஹத்தைப் பெற மாட்டோம்.


ஆகையால் அவனும் நம் மாதிரி இருப்பதுபோலவே தன்னை மநுஷ்யத்வத்தில் ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டாற்போல நடித்து நடித்தே, ஆனாலும் தப்புக்கும் ரைட்டுக்கும் ஒரு போராட்டம் வரும்போது தப்பில் போகாமல் ரைட்டிலேயே போய், 'தர்மம்தான் செய்ய வேண்டியது. அதுதான் நிலைத்த இன்பத்தையும் சாந்தியையும் தருவது' என்று நமக்குக் காட்டிக்கொடுப்பான். நம் மாதிரியே பல அம்சங்களில் இருந்தும், நாம் ஃபெயில் ஆகிற இடத்திலெல்லாம் அவன் பாஸ் பண்ணிக் காட்டுவான். அப்படியிருந்தால்தான் நமக்கு, 'நாமும் இவன் மாதிரி நடக்கமுடியும்-தர்மமாக வாழமுடியும்.

சாஸ்த்ரம் போட்டுக்கொடுத்திருக்கும் பாடத்தில் பாஸ் பண்ணமுடியும்' என்ற உத்ஸாஹம் உண்டாகும்.
முழுக்க ஸாமானிய ஆளாகவே இருந்துவிட்டால் அவன் என்ன செய்கிறான், தர்மத்தில் போகிறானா இல்லையா என்பதையெல்லாமே நாம் கவனிக்க மாட்டோம். இப்போதுங்கூடப் பெயர் தெரியாமலே பல பேர் நல்லவர்களாக, தர்மத்திலேயே செல்கிறவர்களாக அங்கங்கே இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் இது எப்படி உலகத்துக்குத் தூண்டுகோலாக உதவ முடியும்? 'ஸத்யமாகவே இருப்பது, மனஸ் ஸாக்ஷிப்படியே செய்வது' என்று ஸமீப காலத்தில் காந்தி ஒருவர்தானா முயற்சி பண்ணியிருப்பார்?



இன்னம் பலபேர் இருந்திருப்பார்கள். ஆனாலும் தேசம் பூராவுக்குமான ஒரு லெவலில் அவர் கார்யங்கள் செய்பவராக இருந்ததாலேயே 'காந்தீயம்' என்று மற்றவர்களுக்கும் ஒரு வழி ஏற்பட்டு, அவருடைய காலத்தில் நிஜமாகவே பல பேர் அந்த வழியில் போகவும் பாடுபாட்டார்கள். ஆகையினால், தன்னுடைய காலத்தோடு முடியாமல், வரப்போகிற காலத்திலும் தன்னுடைய 'இன்ஃப்ளுயென்ஸ்' இருக்கும்படியாக ஸ்வாமி அவதாரம் செய்யும்போது மாநுஷமாக ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் மநுஷ்யர்களையெல்லாம் தன்னிடம் ஆகர்ஷிக்கும்படியாக ஓரளவு திவ்யாம்சங்களையும், தெய்வ சக்திகளையும் கைக் கொள்ளுவான். அஸாத்யமான ஒரு கார்யத்தைப் பண்ணுவான். பாலனாக இருந்துகொண்டே தாடகை, ஸுபாஹ§ போன்ற ராக்ஷஸர்களை வதம் செய்வான். அல்லது நம்மால் முடியாத ஒரு பெரிய த்யாகத்தைச் செய்து-பட்டாபிஷேகம் நிச்சயம் பண்ணின நாளிலேயே, "காட்டுக்குப் போ!" என்றால் "ஆஹா"! என்று சிரித்த முகமாகப் புறப்பட்டுப்போய்-மநுஷ்யர்களை ஆகர்ஷிப்பான். ஆனால், 'இவன் தெய்வாம்சம்; இவன் செய்வது நமக்கு மாடலாகாது' என்று நாம் ஒரேயடியாகத் தள்ளி நின்றுவிடாமல், இவனே நம் மாதிரி மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டு, 'மரமே கண்டாயா? மட்டையே, கண்டாயா?' என்று திண்டாடியும் காட்டுவான். தெய்வமாகவும் மாநுஷமாகவும் மாறி மாறி இருந்து காட்டி மொத்தத்தில் தர்ம வழியில் நாம் செல்ல ஊக்கம் தருவான். தெய்வ சக்திக்கு மநுஷ சக்தி குறைவானதுதான். தேவர்களைவிட மனிதர்கள் சக்தியில் குறைந்தவர்கள்தான். ஆனாலும் மநுஷ்யர்கள் தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிற அளவுக்கு அல்ப சக்தர்களில்லை.

இந்த்ரிய நிக்ரஹம் செய்து சுத்தமாக வாழ்க்கை நடத்தினால் மநுஷ்யர்களும் எவ்வளவோ சக்தியுடன் கார்யங்கள் செய்யலாம். யோகேச்வரர்களாகப் போனால் தேவர்களைப் போலவும், அவர்களை விடவும்கூட சக்தியை ஸம்பாதித்துக் கொள்ளலாம். தங்களைப்பற்றி ரொம்பக் குறைவாக நினைத்துக்கொண்டிருக்கும் மநுஷ்யர்களுக்கு, 'தாங்களும் இத்தனை சக்தர்களாக, இப்படியிப்படிப் பெரிய கார்யங்களைப் பண்ணமுடியும்' என்ற நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டுவதற்காகவும் பகவான் பகவானாகவே இருந்துகொண்டு தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணாமல் மநுஷ்யனாக வந்து பண்ணுகிறான்.

??????????? ??????????????? ???????????????? : ( ??????????? ????? - ??????? ????? ) : kamakoti.org:
 
முன்னோருக்கு நற்கதி அருளும் வல்வில் ராம&

முன்னோருக்கு நற்கதி அருளும் வல்வில் ராமன்!

ராமா... ஸ்ரீராமா!

ஞ்சை மாவட்டம், சுவாமிமலைக்கு அருகில் உள்ளது, திருப் புள்ளப்பூதங்குடி. ‘புள்’ என்றால் பறவை. பறவை அரசனாகிய ஜடாயுவுக்கு மோட்சகதி அருளிய ராமன் அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் இது. மூலவர் ராமன், சக்ரவர்த்தித் திருமகனாக தெற்கில் தலைவைத்து சயனத் திருக்கோலத்தில் அருள, உற்ஸவர் வல்வில்ராமனாக நான்கு திருக்கரங்களுடன் சேவைசாதிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. வல்வில் என்றால் வலிமையான வில்லை உடைய ராமன் என்று பொருள். தாயாரும் இங்கு விசேஷம். ‘பொற் றாமரையாள்’ எனும் திருநாமத்துடன் பூமா தேவியே இங்கு தாயாராக அருள்வது, வெகு விசேஷம் என்கிறார்கள்.

சீதாவைத் தேடி வந்த ராமன், குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் காண்கிறார். சீதாவை ராவணன் கவர்ந்து செல்லும் தகவலை ராமனிடம் சொல்லிவிட்டு, அவருடைய மடியிலேயே உயிர்விடுகிறார் ஜடாயு.அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய, மனைவியும் உடனிருத்தல் அவசியம். ராமன் சீதாதேவியை மனதால் நினைக்க, பூமிபிராட்டியே இங்கே ‘ஹேமாம்புஜவல்லி’ (பொற்றாமரையாள்)

???????????? ?????? ??????? ??????? ?????! - ????? ?????? - 2015-03-31
 
hi

i still remember my younger days abt ramanavami in our village....i was young pre teen age boy..we used to get a lot of

paanakam/kosmalli/ neermore etc....really our ancestors made different padathams/bakshanam for different festival....

its really meaningful...like seedai for janmastami....pori urandai/appam for karthigai....BECOZ WE HAVE NAAKKU NEELAM THAAN..
 
Namaste TBS ji,

This is what a profound bhakta in another site writes about offering of Panakam and Neer mor to Sri Rama (and occasionally to Sri Narasimha Deva too, especially the Panakam):

"Shri RAma is offered jaggery-water (guD-pAni or guL-pANi in Marathi) and NRsimha offered buttermilk -- because when He was under vanavAs (forest days) , after a long day He would be back home and Sita would offer Him guDa-pAni the first thing, so must all the Rushi muni whose Ashrams and huts He visited. Here is why : In the heat when you are out for long, you have to get hydrated with the water and the body needs sugar -- carbs (no food). RAma was quite austere, He ate kanda-mULa (roots) and Sita, LakshmaNa followed suit. In the villages in Maharashtra even today, especially among the farmers, you will see this tradition of offering GuL-pANI to a guest who typically had a long journey in the heat (many times on foot). As for NRsimha Deva what better offering than sAttvik cool buttermilk after His mission was accomplished! I could easily finish a pint or two simply after being out in the hot sun."

Also TBS ji, Sri Krishna in his Jayanthi, is offered many dishes prepared with butter because he so likes butter!

Even though our naakku is indeed very, very long, preparing so many different types of dishes for each occasion, still no one can compete with us in also making all such dishes prepared with a meaning behind them!
 
Ram charitable manas became very famous because it is explained in hindi colloquially for common man to understand+tulsis special intense sadhana because of which he had both lord hanuman as well as lord dramas darshan similar to our tyga brahamam. Every brahmana should on this auspious day worship one of the greatest avatars of lord vishnu. This day incidentally is also very auspious for shirdi saibaba and 9 th day of vasanta navaratri. Powerful ram mantram of vishnu sahsranamama-Shri ram ram ramethy, rame, raame, manorame, Sahasra nam tatuliyam ram nama varanane.
 
ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.

கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆரம்ப பலசுருதியாக

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்”
என்று ஆணித்தரமாகச் சொல்லுவதால் ராம நாம மகிமை நன்குபுரியும்.

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.


ராம், ராமன் என்கிற பெயர்களை வைத்தால், சொல்லவும்/கூப்பிடவும் மிகவும் எளிது. போகிற வழிக்கு புண்ணியமும் சேரும். சிலருக்கு நாராயணன், லட்சுமி நாராயணன், நரசிம்மன் என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். அதை அப்படியே கூப்பிட்டால், ராம நாமத்தைப் போல பலனைப் பெறலாம். ஆனால் கூப்பிடுவதோ, முறையே, நாணா, லச்சு, நர்ஸு என்று கூப்பிடுகிறார்கள். அதுவே ராமன் என்று பெயர் வைத்தால், அதை சுருக்கினாலும் ராம் என்றே ஆகும். ஆகவே, அனைத்து வகையிலும் ராம நாமம் சுலபமானது, சிறந்தது.


ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.




பார்வதி சிவபெருமானிடம் கேட்கும் கேள்வி:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ.

இறைவனின் ஆயிரம் நாமங்களை கற்று, மனப்பாடம் செய்து தினம்தோறும் சொல்வது கற்றறிந்த பண்டிதர்களால் மட்டுமே முடியும். அப்படியில்லாதவர்கள் இறைவனை நினைக்க சுலபமான வழி எது?

அதற்கு சிவபெருமான் சொன்னது:

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே

’ஸ்ரீராம ராம ராமா’ என்ற அழகான நாமத்தை சொன்னால், 1000 திருநாமங்களை சொன்னதன் பலன் கிடைக்கும்.


ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.


எந்தவொரு விஷயத்தையும் பெரியவர்கள் சொன்னால், ‘அவரே சொல்லிட்டார்’னு சொல்வதைக் கேட்டிருக்கலாம். அதைப் போல் தாசரும், ராம நாமத்தின் மகிமையை சொல்லும்போது, பரமசிவன் தன் மனதுக்கு இனியவளிடம் சொன்ன மந்திரம் என்று இதன் பெருமையை எடுத்துரைக்கிறார். நாம் சாதாரணமாக அது இது என்று பேசுவதைப் போல், அந்த மந்திரம், இந்த மந்திரம்னு எதையாவது சொல்லிக்கிட்டிருக்காமல், ‘இந்த’ மந்திரத்தை சொல்லுங்கள் என்கிறார். பாடலையும் அதன் பொருளையும் பாருங்கள். அவ்வப்போது ‘ராம ராம’ என்று சொல்லுங்கள்.


ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.


'ராமா' என்ற மந்திரம், 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்திலுள்ள 'ரா' மற்றும் நமசிவாய' என்ற பீஜா சுரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது.பீஜாசுரம் என்றால், 'உயிர்ப்புள்ள எழுத்து' என்று பொருள். ராம மந்திரம் சொன்னால்,, பட்டமரமும் தளிர்க்கும் என்பது ஐதீகம்.அதனால், இது 'உயிர்ப்பு மந்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

ராம மந்திரத்தைச் சொல்லத் தெரியாமல், 'மரா...மரா...' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான், ராமாயணத்தை முதலில் எழுதியவர்.
காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமான், ராம மந்திரத்தைச் சொல்லி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையை அருளுவதாக நம்பிக்கை.

ராம நாமம் மிகச் சிறந்தது என்பதற்கு பாராட்டாக, வியாச மகாபாரதத்தில், ஸ்ரீபீஷ்மர் மரண அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணனும், அர்ச்சுனனும் தர்மரும் காண வந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைப் பீஷ்மர் கண்டு எல்லையில்லா ஆனந்தத்தில் ஆயிரம் நாராயண விஷ்ணு நாமாக்களை சொல்லி தோத்திரம் செய்தார். அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் பலஸ்ருதியாக, சிவன் பார்வதிக்குச் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது.

“ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தத்வல்யம் ஸ்ரீராம நாம வரானனே” என்பதாக வருகிறது. ஆயிரம் விஷ்ணு நாமாக்களை உன்னால் சொல்ல முடியாது போனாலும், அதில் வரும் இந்த ‘ராமா’ என்ற நாமத்தை மட்டும் ஜபித்தாலே போதும், அவன் ஆயிரம் விஷ்ணு நாமாக்கள் சொன்ன பலனை அடைகிறான்” என்று கூறுவதால், இந்த ராமநாமம் மகிமை பெற்றது. அப்படி சிவபெருமானே வாக்குறுதி அளிப்பதால் அந்த ‘ராம ராமா’ இன்னும் சிறப்புடையதாகிறது.

இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.

அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார். அதை இராமரே ஒப்புக்கொள்கிறார். அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா.



Source: Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
Sri Rama Navami Vratham

Sri Rama Navami Vratham



21615ff211c60b43d866a2b2bca320da_L.jpg


Lord Sri Raman, born in Ayodhya, is the 7th incarnation of Lord Vishnu. Sri Rama Navami is celebrated across the world in a grand way. The word “Rama” literally means one who is divinely blissful and who gives joy to others, and one in whom the sages rejoice. In India Rama Navami is celebrated as Rama’s birthday .Ramnavami falls on the 9th day of the bright fortnight of the month of Chaitra (March-April). In the year 2015 it is on 28 of March. However in southern parts of India Rama Navami is celebrated as wedding anniversary of Lord Rama and Sita-Prati.


Devotees follow different types of Fast during the celebration. It is said that devotees who follow Vrat/fast with sincerity and immense devotion, they'll be blessed with health; wealth and prosperity for the year. Some observe a stringent fast, where they would not drink a drop of water until midnight. This is called nirahar vrat or waterless fast. However few eat single meal during the fast, it may consist of fruits or fruit juice. Alternatively, if eating a full meal, it can include potatoes without turmeric, garlic, ginger or onion and can include any type of vegetable. There are also people who fast for nine days beginning on the first day of Chaitra. Any type of fast you do with devotion by chanting rama mantra/hymns/sloka you will be bless by the Lord.


In chennai Rama Navami is celebrated in all Vaishnavite temples. At Ayodhya Aswamedha Maha Mandapam,47, Arya Gowder Road,West Mambalam, Chennai - 600 033 Sri Rama Parathana & Maha Deepaarathnai is at 7.00am followed by Moola Parayanam-Sri Rama Pattabishekam at 8.30am, Sri Rama Panaga Poojai-7.00pm & Sri Rama Pattabishekam-10.00pm


http://www.swasthiktv.com/index.php/charithra-katha/item/648-sri-rama-navami-vratham
 
The precious gift .

THE PRECIOUS GIFT .


After victory Lord Rama returns to Ayodhya and decides to ceremoniously reward all his well- wishers.
Seeing Hanuman come up to him, an emotionally overwhelmed Rama embraces him warmly, declaring that he could never adequately honour or repay Hanuman for the help and services he received from him. Sita mata , however, insists that Hanuman deserved honor more than anyone else, and asks him to seek a gift. Upon Hanuman's request, Sita mata gives him a necklace of precious stones adorning her neck. When he receives it, Hanuman immediately takes it apart, and peers into each stone. Taken aback, many of those present demands to know why he was destroying the precious gift. Hanuman answers that he was looking into the stones to make sure that Rama and Sita are in them, because if they are not, the necklace is of no value to him.

At this, a few mock Hanuman, saying his reverence and love for Rama and Sita could not possibly be as deep as he was portraying. One of them asks Hanuman what about his own body, if that contains Lord Ram in it. In response, Hanuman tears his chest open, and everyone is stunned to see Rama and Sita literally in his heart. This shows the love and affection of Lord Hanuman towards Lord Ram-Sita


Sage of Kanchi

Gayatri Rao
 
Sri Rama Gayatri Mantra with English Lyrics Sung by Bombay Saradha

Sri Rama Gayatri Mantra with English Lyrics Sung by Bombay Saradha

https://www.youtube.com/watch?v=MdqiOce7YCU


Published on Mar 17, 2015
Rama Gayatri Mantra with English Lyrics sung by Bombay Saradha. Music by Rajinikanth, produced by Sruthilaya Media Corp.
 
Sri Rama nama is bigger than Lord Rama Himself

Sri Rama nama is bigger than Lord Rama Himself


Bhagwan Ram was seated on his royal throne. DevRishi Narad, Rishi Vishwamitra, Guru Vashishta and many other sages were also present in the court four counseling him. They were all contemplating on some religious issue. Right then DevRishi Narad said, “hey scholars, please let me know who is more powerful. “The God himself or His Name”. After a long debate the questions remained unanswered.

Then DevRishi Narad himself declared that “His Name” is higher than the person name and went to the extent of proving the fact before the dispersal of the royal court. Then Narad Ji called Shri Hanuman Ji and said, “when everyone was about to leave the court”, “You will bid greeting to every Sage but not Vishwamitra because he is a king”. Then turn to Rishi and said “He does not deserve the same respect and honor as others present here”.

Hanuman Ji agreed and obeyed Maha Rishi Narad. RajRishi Vishwamitra was very upset by seeing this rudeness of Hanuman Ji. As he was trying to compose himself DevRishi appeared before him and said, “Did you notice the arrogance of Hanuman? He
know that you have done mare favor for his lord Shri Ram by giving him the knowledge.

It was because of you he could marry Devi Sita, still Hanuman ignored you and paid obeisance to all other saints and sages. He has insulted you intentionally”. Provoked by DevRishi Narad, Rishi Vishwamitra became very angry. He went to King Rama and said, “your devotee Hanuman has insulted me publically, so he should get the death penalty before sunset tomorrow for his arrogance. Rishi Vishwamitra was Shri Ram’s Guru and Ram could not disobey his Guru at any cost, so he had to punish Hanuman Ji for his disrespect shown to the Guru. Shri Ram was dumb-founded for a moment because Hanuman was his most beloved devotee.

The news of the death penalty of Hanuman by Shri Ram became the talk of the town and it spread like a wild fire. Hanuman Ji was very sad too. He repented for his misdeed and went to DevRishi Narad and request him to protect him from Rishi Vishwamitra’s wrath and from the arrows of Shri Ram. I did that because of your suggestion. DevRishi Narad replied very calmly. “Don’t worry Hanuman”. Don’t be dismayed only do what you has been advise to do. Get up early in the morning and take a bath in the Saryu River. Then stand on the banks of the river and start chanting Shri Ram Jai Ram Jai Jai Ram. I will guarantee you, that nothing will happen to you.

The next day Hanuman Ji did as DevRishi Narad told him. People from all over the kingdom gathered there to see the hardest test of Hanuman’s Devotion and Shri Ram’s strict values and rules (Maryada Purushottam). Then Shri Ram Ji came and stood at a distance from Hanuman’s Ji and started looking at him with kindness, but he is called Maryada Purushottam so against his will he started shooting arrows at Hanuman who was fully engrossed in chanting his name Jai Ram Shri Ram Jai Jai Ram.

None of his arrows could touch Hanuman Ji. Shri Ram was exhausted but Hanuman Ji was only looking at his Lord with total surrender, love and devotion. Shri Ram used the most powerful weapons he had never used before but nothing could not harm Hanuman Ji. Then Shri Ram aimed his Brahmastra on him. Hanuman Ji kept chanting Shri Ram Mantra and did not move at all. The crowd of on-lookers was under a spell. They were calling out loudly victory to Shri Ram Bhakta Hanuman repeatedly. When DevRishi Narad notice the culminating Brahmastra he went to Rishi Vishwamitra and requested him to stop the unique battle. He said oh great sage, Hanuman Ji was very ignorant about your grace but does that make a difference in your greatness in anyway?. However this was a little drama that I directed to show the significance of “Ram Naam”.

Do you agree now that Naam is more powerful than Shri Ram Himself. Vishwamitra was convinced and ordered Shri Ram to stop. Hanuman Ji came and prostrated himself on the feet of Shri Ram. He expressed his gratitude and apologized from Maharishi
Vishwamitra. RajRishi not only forgave him but blessed him too, that his devotion towards Ram will be the loftiest example in time to come. “So the Greatness of Ram Naam was established”.

Watch video : www.youtube.com/watch?v=aVgRcrFM8kc
 
ஸ்ரீராம நவமி – From Dheivathin Kural Vol 1

ஸ்ரீராம நவமி – From Dheivathin Kural Vol 1


By
mahesh on March 27, 2015








“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)


ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்காணும் பாகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.


வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஒங்கவே.

ஒருபகல் உலகெல்லாம் உதரத்துட் பொதிந்
தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.


ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றிக் வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.


மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாயணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.


மங்கள கீதம் பாட
மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யொப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்.

மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் – பின்
அபிடேகஞ் செய்தார்.

சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்

(கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)
‘ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.


நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.



https://mahaperiyavaa.wordpress.com/2015/03/27/ஸ்ரீராம-நவமி-from-dheivathin-kural-vol-1/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top