• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Svada Stotram

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ ஸ்வதா ஸ்தோத்ரம்
*******

ஸ்வதா என்பது பித்ருக்களுக்கு ப்ரீதியானது
தர்ப்பணம்செய்யும்போது சொல்லப்படும் மந்திரச்சொல்
ஸ்ரீஅக்னி பகவானின் மனைவியரான
ஸ்ரீஸ்வாஹா தேவியானவள் ஸ்ரீ தேவர்களுக்கு கொடுப்பதைக்
கொண்டு போய் சேர்ப்பவள்
ஸ்ரீஸ்வதா தேவியானவள் ஸ்ரீபித்ருக்களுக்கு கொடுப்பதைக்கொண்டு போய் சேர்ப்பவள்

ஸ்வாஹா என்றால் தேவர்கள்ப்ரீதியடைவர்....
ஸ்வதா சப்தத்தால் பித்ருக்கள் ப்ரீதி அடைவர்...

அதன் மஹிமையை நாம் அறிந்துகொள்ளவே இந்தஸ்லோகம் ப்ரும்மவைவர்த்தபுராணத்தில் ப்ரும்மாவால் சொல்லப்பட்டுள்ளது

ப்ரும்மோவாச-

ஸ்வதோச்சாரணமாத்ரேன தீர்த்தஸ்நாயீ பவேன்நர:
முச்யதே ஸர்வ பாபேய்யோ வாஜபேய பலம் லபேத்

(ஸ்வதா என்று சொல்வதாலே மனிதன் சமஸ்த தீர்த்தத்தில் குளித்த பயனைஅடைகிறான்
அவன் சமஸ்தபாபத்திலிருந்தும் விடுப்பட்டு வாஜபேயயாகத்தின் பயனை அடைகிறான் (1)

2. ஸ்வதா ஸ்வதா ஸ்வதாத்யேவம்
யதிவார த்ரயம் ஸ்மரேத்
ஸ்ராத்தஸ்ய பலமாப்னோதி காலஸ்ய தர்பணஸ்ய ச

(ஸ்வதா ஸ்வதா ஸ்வதா என மும்முறைச்சொன்னால் ச்ராத்தம்செய்தபலனை தர்ப்பண பலனை அடைகிறான்)

3. ஸ்ராத்தகாலே ஸ்வதா ஸ்தோத்ரம் ய:ஸ்ருனோதி சமாஹித:
லபேத் ஸ்ராத்தசதானாம் ச
புண்யமேவ ந சம்சய:

(ஸ்ராத்தகாலத்தில் இந்தஸ்வதா ஸ்தோத்திரத்தை யார்கேட்கிறானோ 100ஸ்ராத்தபுண்யத்தை
அடைகிறான் இதில் சந்தேகமில்லை)

4. ஸ்வதா ஸ்வதா ஸ்வதாத்யேவம் த்ரிசந்த்யம் ய:படேன் நர:
ப்ரியாம் வினீதாம் ஸ லபேத் ஸாத்வீம் புத்ரம் குணான்விதம்

(ஸ்வதா என மும்முறை த்ரிகாலசந்த்யாகாலத்தில் ஜபிப்பவன் வினயமானமனைவி சத்குண புத்ரனைஅடைகிறான்)

5. பித்ருணாம் ப்ராணதுல்யாத்வம் த்விஜஜீவன ரூபிணீ
ஸ்ராத்தாதிஷ்டாத்ரு தேவீச ஸ்ராத்தாதீனாம் பலப்ரதா

(ஸ்வதா தேவி பித்ருக்களின் ப்ராணன்
ப்ராம்மணர்களின்ஜீவன்
ஸ்வதாதேவியே ச்ராத்த அதிஷ்டாத்ரி
ஸ்வதாதேவி க்ருபையால் ஸ்ராத்த தர்பண பலங்கள் கிடைக்கின்றன)

6. பஹிர்கச்ச மன்மனச:பித்ரூணாம் துஷ்டிஹேதவே
ஸம்ப்ரீதயே த்விஜாதீனாம் க்ருஹினாம் வ்ருத்திஹேதவே

(பித்ருக்கள் ப்ராம்மணர்கள் த்ருப்திக்காகவும்
க்ருஹஸ்தர்களின் அபிவ்ருத்திக்காகவும் ப்ரும்மாவின் மனதிலிருந்து வெளிப்பட்டாய்)

7. நித்யா த்வம் நித்யரூபாசி
குணரூபாசி சுவ்ரதே
ஆவிர்பாவஸ்திரோபாவ:
ச்ருஷ்டௌ ச ப்ரளயே தவ

(ஸ்வதா தேவியே நீ நித்யமானவள்
ச்ருஷ்டிகாலத்தில்வெளிப்பட்டு ப்ரளயத்தில் மறைந்திருக்கிறாய்)

8-ஓம் ஸ்வஸ்தி நமஸ்வாஹா ஸ்வதா த்வம் தக்ஷிணா ததா
நிரூபிதா சதுர்வேதே
ஷட்ப்ரஸஸ்தாஸ்ச கர்மிணாம்

(தாயே நீயே ஓம் ஸ்வஸ்தி ஸ்வாஹா ஸ்வதா மற்றும் தக்ஷிணை ஆக ரூபமாயிருக்கிறாய்
நான்குவேதமும் இதைச்சொல்கிறது
கர்மத்தை அனுஷ்டிப்போர் இதை ஏற்பர்)

9. புராசீத்வம் ஸ்வதா கோபீ கோலோகே ராதிகா சகீ
த்ருதோரஸி ஸ்வதாத்மானம்
க்ருதம் தேன ஸ்வதா ஸ்ம்ருதா

(தேவி நீங்கள் கோலோகத்தில் ராதிகையின் தோழி
க்ருஷ்ணர் தன் இதயத்தில்தாங்கினார்
ஆகையால் நீங்கள் ஸ்வதா என அறியப்படுகிறீர்கள்)

10. இத்யேவமுக்தா ஸ ப்ரும்மா
ப்ரும்மலோகே ச சம்சதி
தஸ்தௌ ச சஹசா சத்ய;
ஸ்வதா சாவிர் பபூவ ஹ

(இந்தஸ்தோத்ரத்தை ப்ரும்மாஸ்துதித்து அமர்ந்தார்
உடனே ஸ்வதாதேவீ அவர்முன்தோன்றினாள்)

11.
ததா பித்ருப்ய:ப்ரததௌ தாமேவ கமலானனாம்
தாம் சம்ப்ராப்ய யயுஸ்தே
பிதரஸ்ச ப்ரஹர்ஷிதா:

(ப்ரும்மா தன்முன்தோன்றிய ஸ்வதாதேவியை பித்ருக்களுக்கு சமர்பித்தார்
பித்ருக்களும் ஸ்வதாவால் சந்தோஷத்தையும் த்ருப்தியுமாடைந்தனர்)

12-ஸ்வதா ஸ்தோத்ரமிதம்புண்யம்
யஸ்ருனோதி சமாஹித:
ஸ ஸ்நாத:ஸர்வ தீர்தேஷு வேத பாடபலம் லபேத்

(இந்த பவித்ரமானஸ்வதா ஸ்தோத்திரத்தைகேட்போர்
சமஸ்த தீர்த்தஸ்நானபலத்தையும்
வேத பாராயணபலத்தையும் அடைவர்)
நன்றி எழுத்து தமிழாக்கம்
மும்பை பிரம்மஸ்ரீ நாகராஜ வாத்யார்
அவர்கள்
இதை அனைவருக்கும் பகிரவும்
 

Latest ads

Back
Top