கார்த்திகை பெண்களுக்கு பிறந்த கார்த்திகேயன் என்பதால் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்கக் கூடிய பக்தர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை மிகவும் விசேஷமானது. அதன் பிறகு ஆடி மாத கிருத்திகையும், தை மாத கிருத்திகையும் பக்தர்களால் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வது விசேஷ பலன்களை கொடுக்கும். தை மாத கிருத்திகை நாள் முழுவதும் உபவாசமிருந்து முருகனை தரிசிப்பவர்களுக்கு மனதில் வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை. இதனை வீட்டிலிருந்தே எப்படி எளிமையாக கடைப்பிடிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்கு போகலாம்.
கார்த்திகை பெண்களாக இருக்கும் ஆறு பெண்களுக்கும், கார்த்திகேயன் வரமாக கிடைத்ததால், கார்த்திகை விரதத்தில் ஆறு விதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது. கார்த்திகேயன் ஆறுமுகனாக விளங்குவதால் ஆறு விதமான பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவில்களில் சண்முக அர்ச்சனை என்று முருக பெருமானுக்கு ஆறு விதமான அர்ச்சகர்கள் கொண்டு, ஆறு விதமான மந்திரங்கள் ஓதி, அபிஷேகங்கள் நடைபெறும். இதனை செய்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாக ஐதீகம் உள்ளது. இதனை நாம் வீட்டிலேயே எப்படி எளிமையாக கடைபிடிக்கலாம்?
கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு ஏதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். விரதம் என்பதே அவரவர்களின் மனம் மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப இருப்பது தான். இதில் உடலை வருத்திக் கொண்டு செய்தாக வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப விரதத்தை அமைத்துக் கொள்ளலாம்.
அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். அதில் முருகப்பெருமானின் படத்திற்கு சந்தன திலகமிட்டு, குங்குமம் வைத்து மணமிக்க முல்லை மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் வேல் இருந்தால் வேலையும் இப்படி அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நைவேத்தியத்திற்கு தேவையானவற்றை தயார்படுத்திக் கொள்ளுங்கள். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம் ஆகிய நைவேத்தியங்களை தயார் செய்து கொள்ளலாம். ஆறு விதமான நைவேத்தியங்கள் தயார் செய்ய முடியாதவர்கள் சர்க்கரைப் பொங்கலை மட்டும் நிவேதனம் வைக்கலாம்.
பின்னர் ஆறுமுகனுக்கு ஒவ்வொரு நைவேத்தியமாக படைத்து, முருகனுடைய திருப்புகழ், போற்றிகள், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்களை பாடி, ஆறு விதமான பூக்களில் ஒவ்வொரு பூக்களாக அர்ச்சிக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். இது போல் ஆறு முறை நைவேத்தியங்களை படைத்து, ஆறு விதமான மந்திரங்களைக் கூறி, ஆறு விதமான பூக்களால் அர்ச்சித்து, ஆரத்தி காண்பிக்க வேண்டும். அதன் பின் நைவேத்தியத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். கடவுளுக்கு செய்யப்பட்ட பிரசாதத்தை கோவிலுக்கு எடுத்து சென்று முருகனை தரிசித்த பின் பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மன அமைதிக்காகவும், தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப முருகனிடம் கோரிக்கைகள் வைத்து விரதம் இருக்கலாம். காலையில் இவற்றை செய்ய முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு பூஜையை செய்யலாம். பின்னர் விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். மிக எளிமையாக கடைபிடிக்க வேண்டிய இந்த கார்த்திகை விரதத்தை முறையாக கடைப்பிடித்து முருகனின் அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.