• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

thanniir pandhal ithyaathi.

kgopalan

Active member
தர்ம கடம். 14-04-2022 டு 14-06-2022.
தண்ணீர் பந்தல்.
தர்ம கடம்தானம்: 14-04-2022முதல்14-06-2022வரை.


நாம் கஷ்டபட்டு நேர்மையான முறையில் சம்பாதித்தபணம் பொருள் ஆகியவற்றை மற்றவருக்கு தேவையான நேரத்தில்கொடுப்பதே தானம் எனப்படும்.தண்ணீர்(ஜலம்)இந்த கோடை மாதங்களில் சித்திரை வைகாசி மாதங்களில்

பிறருக்குகொடுப்பதும் சிறந்த தானமாகும்.தண்ணீர் பந்தல் அமைத்துதண்ணிர் கொடுப்பது ப்ரபாதானம் என்று பெயர். இதுஅனைத்து பாபங்களையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மைதரும்.

ப்லாஸ்டிக் குடங்களிலும் தண்ணீர்கொடுக்கலாம்..தண்ணீர் பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள்ஒரு குடம் நிறைய ஜலம்எடுத்து க்கொண்டு ஏஷ தர்மகடோ
தத்த: ப்ருஹ்மவிஷ்ணு சிவாத்மக: அஸ்யப்ரதாநாத் ஸகலா: மமஸந்து மனோரதா:

தர்மகுடம் என்னும் இந்த ஜலம்நிரம்பிய குடத்தை ப்ருஹ்மவிஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காக தானம் செய்கிறேன் இதனால் எனது விருப்பங்கள் அனைத்தும்நிறைவேறட்டும். என்றுசொல்லி குடத்துடன் ஜலத்தைதானம் செய்ய வேண்டும்

.இவ்வாறுகோடை காலம் முழுவதும் தினமும்ஒரு குடம் தானம் செய்யலாம்.முடியாவிட்டால் பிறந்த நக்ஷதிரத்தன்று ஒரு குடம்,அல்லது 3,6,12,குடங்கள்தானம் செய்யலாம்.

இதுமஹா விஷ்ணுவின் அருளை பெற்றுதரும் மஹா புண்ணியத்தை தரும்.

பறவைகளுக்கு மொட்டை மாடியில் ப்லாஸ்டிக் ட்ரேயில் தண்ணீர் விட்டு வைக்கலாம். இதுவும் புண்ணியத்தை தரும்.

16-04--2022.-ஈசான பலி.

ஈஸான பலி:-சித்திரை மாதபெளர்ணமி யன்று செய்வதால்சைத்ரீ என்றும் அழைப்பர்.மாடுகளின்வியாதியை நீக்குவதால் சூலகவம்என்றும் பரமேஸ்வரனுக்குப்ரீதி அளிப்பதால் ஈஸான பலிஎன்றும் அழைப்பர்.



கால் நடைகள்வியாதி இல்லாமல் இருக்கும்.விருத்தியாகும்.அதிகபயன் தரும்.
மீடுஷன்என்றால் அனைத்து ஆசைகளையும்பூர்த்தி செய்விப்பவன் என்றுஅர்த்தம்.ஆதலால்இங்கு பரமேஸ்வரனை மீடுஷன்என்ற பெயரிலும்,பார்வதியைமீடுஷி என்ற பெயரிலும் ஸுப்ரமணியஸ்வாமியை இங்கு ஜயந்தன் என்ற பெயரிலும் இவர்களுக்கு நடுவே வைத்து16உபசாரபூஜை செய்ய வேண்டும்.
ஔபாஸனம்செய்து விட்டு அந்த அக்னியில்ஹவிஸ் தயாரிக்க வேண்டும்.


பைரவர் எனும்சேத்திர பாலகருக்கும் பலிஉண்டு.இதற்குஹவிஸ் லெளகீகா அக்னியிலும்செய்து கொள்ளலாம்.ஸ்ரீருத்ரஜபம் உண்டு.ஈஸானபலி ஶேஷத்தால் ப்ராஹ்மணபோஜனம். தாயாதிகளுக்குசேத்திர பாலகரின் ஶேஷம்சாப்பிட வேண்டும்.


பூஜை,ஹோமம்,பலி மூன்றும்செய்து பகவானை ப்ரீதி செய்விக்கவேண்டும்.
மாடுகள்மேய்ந்து விட்டு சாயரக்சை வீட்டிற்கு திரும்பும் போதுஹோம புகை மாடுகள் மீது படவேண்டும். ஆதலால்தெருவில் அல்லது பசு தொழுவத்தில்அல்லது கோவிலில் செய்ய வேண்டும்.வீட்டில் செய்துப்ரயோஜனமில்லை.


பொரச இலைஅல்லது
அரச இலை60இலைகள்பெரிதாக பார்த்து பறித்துஒவ்வொன்றையும் தனி தனியாகஅலம்பி துடைத்து காய வைத்துகொள்ள வேண்டும்.
இரண்டு ஹவிஸ்உள்ள பாத்திரங்கள்;மற்றும் மூன்றுபாத்திரங்கள்,பூஜை,ஹோமத்திற்குவரட்டி,சுள்ளி,நெய்,நெய் வைக்கபாத்திரம், ஹோமகரண்டி,ஹோமகுண்டம்,அல்லதுசெங்கல்.மணல்,சீலிங்க் பேன்பெட்டி அளவிற்கு


மூன்று அட்டைபெட்டிகள்,தொடுத்தபுஷ்பம்,உதிரிபுஷ்பம்,கற்பூரம்,ஊதுபத்தி,தாம்பூலம்,பழ வகைகள்,மஞ்சள் பொடி,குங்குமம்,சந்தனம்,கற்பூர கரண்டி,டிரே;
ஒரு லிட்டர்தண்ணீர் பிடிக்குமளவிற்கு4பித்தளைசொம்புகள்,நூல்கண்டு.பச்சரிசி1கிலோ,கோலம் போட அரிசிமாவு.பெரியபாக்கு மட்டை-1;பாக்குமட்டையில் ஓட்டை போட ஊசி,சனல்கயிறு.தேங்காய்-4;கலச வஸ்த்ரம்-3.


ஏலக்காய்,பச்சை கற்பூரம்,சிறிதளவுபொடித்து கலசத்தில் சேர்க்க.
எடுத்து கொண்டுவீட்டிலிருந்து புறப்பட்டுகோவிலுக்கு செல்ல வேண்டும்.அங்குஸங்கல்பம்,புண்யாகவசனம்,கிரஹப்ரீதி,விநாயகர்பூஜை, 16உபசாரபூஜை சிவன்,பார்வதி,முருகனுக்கும்செய்து பலி போட்டு,ஹோமம்செய்து ஸ்வசிஷ்டக்ருத்,ஜயாதி ஹோமம்செய்து
ஒரு பெரியபாக்குமட்டையை தண்ணீரில்ஊறவைத்து4துவாரங்கள்செய்து4துவாரங்களிலும்சணல் கயிறு கட்டி உறி மாதிரிசெய்து அதில் ஹவிஸ் வைத்துமர கிளையில் தொங்கவிட்டுருத்திரம்11அனுவாகம்சொல்ல வேண்டும்.


ஹோம அக்னிக்குமேற்கு திசையில் மூன்றுஅட்டைபெட்டி வைத்து அதில் தென்திசையில் மஹா தேவனையும்,நடுவில்முருகனும்,வடக்கேபார்வதியும் மூன்று கலசங்கள்வைத்து,அதில்தண்ணீர் விட்டு,வாசனைபொருட்கள் போட்டு
தேங்காய்வைத்து,கலசவஸ்த்ரம் சாற்றி,சந்த்னம்குங்குமம் இட்டு,மாலைபோட்டு அரிசியின் மேல் வைக்கவேண்டும்.கூர்ச்சம்வைக்க வேண்டும்.சேத்திரபாலகருக்கு கூர்ச்சத்தில்ஆவாஹனம். 16உபசாரபூஜை,பலி,ஹோமம் உண்டு.
பிறகு வீட்டிற்குசென்று ப்ராஹ்மண போஜனம்.தக்சனை.ஆசீர்வாதம்இத்யாதி.

சித்ர குப்தர் அவதரித்த நாள் இன்று. சித்ர குப்தருக்கு 16 உபசார பூஜை செய்யலாம். இன்று உப்பு இல்லாமல் சாப்பிடுவர்.. எருமை பால், தயிர் உபயோகிப்பர். மனிதர்களின் அனைத்து நடவடிக்கை களை ரஹஸ்யமாக
கவனித்து நடு நிலைமையுடன் யம தர்ம ராஜாவிற்கு அறிவிப்பர்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்று சத்ய நாராயண பூஜை செய்வர்.

19-04-2022 வராஹ ஜயந்தி.
ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமியை பாயை போல சுருட்டி கடலுக்கு அடியில் வைத்தான். மஹா விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து ஹிரன்யாசுரனை வதைத்து பூமியை மீட்டு எடுத்து வைத்தார். இன்று.
ஆதலால் இன்று லக்ஷ்மி வராஹ மூர்த்தியை 16 உபசார பூஜை செய்யலாம். பாகவததிலுள்ள வராஹ அவதார அத்யாயாம் படிக்கலாம். வராஹ மந்திரம், ஸ்தோத்திரங்கள் படிக்கலாம். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், வேர்கடலை, போன்றவற்றை வெல்லம் சேர்த்தி வேக வைத்து நிவேதனம் செய்யலாம்.

இதனால் நிலம் மற்றும் வீடு போன்ற பல ப்ரஸ்னைகள் தீரும்.சொந்தமாக வீடு ,நிலம் கிடைக்கும். அனைத்து சுகங்களும் பெறலாம்.
28-04-2022 மத்ஸ்ய ஜயந்தி.

சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி அன்று ஶ்ரீ மஹா விஷ்ணூ மீன் அவதாரம் எடுத்தார் .இன்று காலை விஷ்ணூவைமுறையாக பூஜித்து ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்தித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்யம் தரலாம். ஸத்ய வ்ரதோபதேசாய ஜிஹ்ம மீன ஸ்வரூப த்ருக் ப்ரளயாப்தி க்ருதாவாஸ. க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே , மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: இதமர்க்யம். அநேந அர்க்ய ப்ரதானேன மத்ஸ்ய ஸ்வரூபீ பகவான் ப்ரீயதாம்

வைசாக ஸ்நானம். 01-05-2022 டு 30-05-20


1-5-2022 முதல் 30-5-2022 முடிய வைகாசி ஸ்நானம். தினமும் விடியற் காலையில் செய்ய வேண்டும். வைகாசி மாதத்தில் காலையில்(4-30 மணி முதல் 5-30மணிக்குள் )தினமும்

அல்லது முடிந்த நாட்களில் செய்தாலும் அதற்கேற்ப பலன் உண்டு) சித்திரை அமாவாசைக்கு மறு நாள் முதல் சாந்திரமான வைகாசி மாதம் ஆரம்பமாகும்.


குளிக்கும் போது கீழ் கண்ட ஸ்லோகங்களை சொல்லி ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதிற்கு நிம்மதி, , ஆஸ்தீக ஈடுபாடு தன்னம்பிக்கை ஏற்படுகிறது...

மதுஸூதன தேவேச வைசாகே மேஷகே ரவெள ப்ராத;ஸ்நானம் கரிஷ்யாமி நிர்விக்னம் குரு மாதவ.

வைசாகம் ஸகலம் மாசம் மேஷ ஸங்க்ரமணே ரவே: ப்ராத: ஸ நியம: ஸ்னாஸ்யே ப்ரீயதாம் மது ஸூதன:

மது ஹந்து: ப்ரஸாதேன ப்ராம்ஹணாநா மனு க்ரஹாத் நிர்விக்னமஸ்து மே புண்யம் வைசாக ஸ்நான மன்வஹம்

மாதவே மேஷகே பாநெள முராரே மதுஸூதன ப்ராத: ஸ்நானேந மே நாத பலதோ பவ பாபஹந்.

இவ்வாறு ஸ்நானம் செய்து கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் தர வேன்டும். ( தோய்த்து உலர்த்திய ஆடை உடுத்தி நெற்றி க்கிட்டு கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு அர்க்யம் தரவும்.)

வைசாகே மேஷகே பாநெள ப்ராத: ஸ்நான பராயண: இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி மாதவாய மஹாத்மனே மாதவாய நம: இதமர்க்யம்.

ப்ரும்ஹாத் யா தேவதாஸ் ஸர்வா: ருஷயோ யே ச வைஷ்ணவா; -ப்ரதிக்ருஹ்ய மயா தத்த மர்க்யம் ஸம்யக் ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நம: இதமர்க்யம்.

கங்காத்யாஸ் ஸலிலஸ் ஸர்வாஸ் தீர்த்தானீ ச நதா ஹ்ரதா:. –ப்ரதீ க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீதத கங்காதிப்யோ நம: இதமர்க்யம்.

ருஷய: பாபினாம் சாஸ்தா த்வம் யம: ஸமதர்சின: - ப்ரதி க்ருஹ்ய மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக் ப்ரஸீத மே தர்மராஜாய நம: இதமர்க்கியம்.

02-5-2022. சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷதிரத்தன்று சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். இன்று இவரது கீர்தனங்களை பாடி அல்லது கேட்டு ஆனந்திக்கலாம்..

02-05-2022 அக்ஷய துதியை.
2--5-2022 திங்கள் கிழமை அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.

அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.

குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம். உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.

இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.

இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்த.தியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..

03-5-22அக்ஷய த்ருதியை
அக்ஷயம் என்றால் குறையாதது என்றும் மங்களம் என்றும் பொருள்..வைசாக சுக்ல பக்ஷ த்ருதியை அன்று இது வருகிறது. இன்று புண்ணிய நதிகளில்
நீராடுதல் ஏழைகளுக்கு தானம் அளித்தல்; அன்ன தானம், ஜல தானம், குடை,

செருப்பு, வஸ்த்ரம், பசு, தங்கம் முதலியன தானமளித்தல்.இன்று தங்கம் வாங்கி ஏழை உறவினர்களுக்கு தானமளிக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களை தானமளிக்கலாம்.
நீர்மோர், பானகம், ஜலம் ஒரு பத்து பேருக்கு கொடுக்கலாம்.

அமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றால் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே அட்சய திருதியை எனப்படுகிறது.

இன்று சூரியனும் சந்திரனும் தங்களது உச்ச வீட்டில் இருப்பார்கள்.



எல்லா நலன்களையும்குறைவிலாது அள்ளிக் கொடுக்கும்இந்தத் திருதியை நன்னாளைஅட்சய திருதியை என அழைத்துப்போற்றிக் கொண்டாடினர்.அதனால தான்மிக விலையுயர்ந்ததாக க்கருதப்படும் தங்கத்தை அன்றுமக்கள் வாங்குகின்றனர்.மகாகவி காளிதாசர்அருளிய உத்திர காலாமிருதம்என்னும் ஜோதிட நூல்,திதி நாட்களில்மிகவும் விசேஷமானது திருதியைஎன்று கூறுகிறது.



பௌர்ணமி திதி, அமாவாசை திதி,சதுர்த்திதிதி,ஏகாதசி திதி,அஷ்டமி திதிபோன்ற திதிகளைப் போன்றேஅமாவாசைக்குப் பிறகு வரும்திருதியை திதியும் சிறப்புதிதியாகத் திகழ்கிறது.அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாவது திதிநாளான திருதியைத் திருநா ள்திருமகளுக்குரிய நாளாகத்திகழ்கிறது.அதிலும் தமிழ்மாதத்தில்,சித்திரை மாதஅமாவாசைக்குப் பிறகு வரும்3- வதுபிறையான அட்சயத் திருநாள்மிகவும் மகிமைமிக்கது எனசாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சயதிருதியையால் அமைந்த நிகழ்வுகள்:

முற்காலத்தில்வைசியன் ஒருவன் மிகவும்ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான்.அன்றா ட உணவுக்கேவழியில்லை.ஆயினும்,அவன் மிகவும்பக்தியுடன் வாழ்ந்து வந்தான்.அ வன் பக்தியைக்கண்ட பெரியோர்,அவனிடம் அட்சயதிருதியை வழிபாடு பற்றிக்கூறினார்கள்.அவன் ஓர் அட்சயதிருதியை நன்னாளில் அதிகாலைஎழுந்து நீராடி,பாத்திரத்தில்அன்னம் வைத்து தண்ணீர்,



கோதுமை,சத்துமாவு,கரும்புச்சாறு,பால்,தட்சிணைமுதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத்தானம் கொடுத்தான்.அ ன்றையவழிபாடுகளையும் முறைப்படிஅனுசரித்தான். வறுமையின்காரணமாக அவனது மனைவி அவனைத்தடுத்தும்கூட,குறைவில்லாதுஅட்சய திருதியை நன்னாளைஅனுசரித்தான் வைசியன்.இதன் பயனாகஅவன் தனது மறுபிறவியில் குஷபதிசக்ரவர்த்தியாகப் பிறந்து

புகழ் பெற்றான் எனபுராணங்கள் பேசுகின்றன.

யுகங்களுள் இரண்டாவதுயுகமான திரேதாயுகம்,ஓர் அட்சயதிருதியை திருநாளில்தான்ஆரம்பாமாயிற்றாம்.

தன் குருகுல நண்பனானஏழைக் குசேலன் தன்னைப் பார்க்கவந்தபோது அவன் கொடுத்த மூன்றுபிடி அவலைத் தின்று, பதிலாக கோடிகோடி செல்வங்களைக் கொட்டிக்கொடுத்து குசேலனை கிருஷ்ணபரமாத்மா குபேரனாக்கியதிருநாளும் இந்த அட்சய திருதியைநன்னாளில்தான்!

பரசுராமர் அவதரித்தநன்னாள், பலராமர் தோன்றியபொன்னாள் அட்சய திருதியையே!


துரியோதனனின்சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள்வன வாசத்தை மேற்கொள்ளக்கூடியநிலை ஏற்பட்ட போது,ஆகாரத்துக்குஅவர்கள் கஷ்டப்படாமல் இருக்கஅவர்களின் முக்கிய ஆலோசகரானகண்ணன், திரௌபதியிடம்இருந்து அந்த அட்சய பாத்திரத்தைவாங்கி அவர்களிடம் கொடுத்தார்.

அவர்களுக்குத்தேவையானபோது அந்த அட்சயபாத்திரத்தின் மூலம் அள்ளஅள்ளக் குறையாத அன்னங்களை,அ வர்கள்விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப்பெற்று சந்தோஷமாகப் புசித்துவந்தார்கள்.இதை நினைவுபடுத்தும்வகையிலும் இந்த அட்சய திருதியைகொண்டாடப்படுகிறது.



இந்தஅட்சய திரிதியை நாளில்தான்பிட்சாடனரான சிவபெருமான்தன் கபால(பிரம்மகபாலம்)பிட்சைபாத்திரத்தில் நிரம்பும்அளவு உணவை காசியில்அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.



கௌரவர்கள் சபையில்துச்சாதனன் பாஞ்சாலியின்உடையை உருவி மானபங்கப்படுத்தினான்.அ ப்போதுகண்ணபிரான் அட்சய என்று கூறிகைகாட்டி அருள,துச்சாதனன்உருவ உருவ புடவை வளர்ந்துகொண்டே இருந்த நாள் இந்த அட்சயதிரிதியை நாளில்தான்.

இதனால் தான் பாஞ்சாலிமானம் காப்பாற்றப்பட்டது. அட்சய திருதியையில்,எதைச் செய்தாலும்வளர்ந்து கொண்டே இருக்கும்.



அன்றுகொடுக்கும் தானம்,அளவற்றபுண்ணியத்தைக் கொடுக்கும்.அன்றுபித்ருக்களுக்கு பிதுர்பூஜைஎன்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச்செய்து அவர்களின் ஆசியைப்பெற்றால்,குடும்பமும்வாரிசுகளும்வளர்ச்சியடைவார்கள்.



அட்சயதிருதியால்ஏற்படும் பலன்கள்:இந்தநாளில் ஏழை,எளியவர்களுக்குஅன்னதானம் செய்வது,நல்லகாரியங்களுக்கு உதவுவது,எந்தவகையிலாவது பிறருக்கு உறுதுணையாகஇருப்பது இவற்றினாலும்தர்மதேவதையின் அருளைப் பெற்று,இந்த அட்சயதிருதியையில் புண்ணியங்களைச்சேர்த்துக் கொள்ளலாம்.
திருமகள் அம்சமாகநல்ல மனைவி அமைய விரும்புவோர்,தங்களுக்குநல்ல மருமகள் வர விரும்பும்பெற்றோர்,அட்சயதிருதியையில்,திருக்கோயிலில்வைத்து பெண் பார்க்கும்வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோநடத்தினால் விரும்பியபடிமணமகள் அமைவாள்.


அட்சயதிருதியை அன்று என்ன செய்யவேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும்இல்லத்தில் குறைவின்றிநிறைந்திருக்கும் என்பதுநம்பிக்கை. எனவேதான்இந்நாளில் தங்கம் வாங்கவிரும்புகின்றனர்.ஆனால் இவ்வளவுவிலை உயர்ந்த பொருளை அனைவராலும்வாங்க இயலாது.அதற்காக மனம்தளர வேண்டாம். நமக்கு மிகவும்உபயோகமான பொருட்களை வாங்கிப்

பயனடையலாமே.



அன்று உப்பு,அரிசி மற்றும்தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒருசிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும்நாம் மாதாமாதம் மளிகைப்பொருட்கள் வாங்கி ஆக வேண்டும்.அதனை இம்மாதத்தில்மட்டும் இந்த அட்சயதிரிதியைநாளில் வாங்கி வளம் பெறலாமே.



வட இந்தியாவில் இந்நாளைஅகஜித் என்பர்.ஸ்ரீமகாலட்சுமிவிஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான்இடம் பெற்றாள்;நி ரந்தரமாகத்தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில்ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும்தோன்றிய நாளும் இது தான்.



ஸ்ரீலட்சுமியானவள்வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில்ஸ்ரீலட்சுமியாகவும்,இந்திரனிடம்சுவர்க்க லட்சுமியாகவும்,அரசர்களிடம்ராஜ லட்சுமியாகவும்,வீரர்களிடம்தைரிய லட்சுமியாகவும்,கு டும்பத்தில்கிரக லட்சுமியாகவும்,பசுக்களில்கோமாதாவாகவும்,யாகங்களில்தட்சிணையாகவும்,தாமரையில்கமலையாகவும்,அவிர்பாகம்அளிக்கும்போது ஸ்வாகாதேவியாகவும் விளங்குகிறாள்



இப்படி சகல யோகங்களுக்கும்ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.என வே,அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன்நாராயணனின் இணைபிரியாத தேவிஸ்ரீலட்சுமியைப் பூஜிக்கவேண்டும்.


நம்இல்லத்தில் சாஸ்திரப்படிபூஜை செய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும்கிட்டும்.அ ன்று செய்யும்தான-தர்மத்தால்மரண பயம் நீங்கி உடல் நலம்உண்டாகும்.அன்னதானத்தால்விபத்து விலகும்.ஏ ழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம்குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.தானதர்மங்கள்செய்தால் எம வேதனை கிடையாது.



நலிந்தவர்களுக்குஉதவி செய்தால் மறுபிறவியில்ராஜயோக வாழ்க்கை அமையும்.ஆடைகள்தானம் செய்தால் நோய்கள்நீங்கும்;பழங்கள்தானம் செய்தால் உயர் பதவிகள்கிடைக்கும்.மோர்,பானகம்அளித்தால் கல்வி நன்கு வளரும்;தானியங்கள்தானம் கொடுத்தால் அகால மரணம்ஏற்படாது.



தயிர் சாதம் தானம்அளித்தால் பாவ விமோசனம்ஏற்படும்.முன்னோருக்குதர்ப்பணம் செய்தால் வறுமைநீங்கும்.அட்சயதிருதியை அன்று ஆலிலையில்மிருத்யுஞ்ஜய மந்திரத்தைஜபித்து,அதை நோயாளிகளின்தலையணையின் அடியில் வைத்தால்நோய் விரைவில் குணமாகும்என்பது நம்பிக்கை.

அட்சயதிருதியும் அதன் வழிபாட்டுஅமைப்பும்: 03-05-2022

அட்சயதிருதியை நாளில்,பூஜையறையில்குலதெய்வ-இஷ்ட தெய்வங்களைவணங்கி வழிபடும் போது,பூஜையில்தொழில் ஆவணங்கள்,பணம் இவற்றையெல்லாம்வைத்து அவர்களுக்குரியமந்திரங்களையும் உச்சரித்து,வ லம்புரிச்சங்கில் தீர்த்தம்,பால் போன்றவைவைத்து சாமிக்கு நிவேதனம்செய்ய வேண்டும்.மேலும் இத்துடன்அருகம்புல்,வில்வம்,துளசி,மரிக்கொழுந்து,மல்லிகை,செந்தாமரைமலர்களாலும் வீட்டிலும்வியாபார ஸ்தலங்களிலும்வழிபட்டால்,தொழில்முன்னேற்றமும் குடும்பவிருத்தியும் ஏற்படும்.


அளவற்றவளம் தரும் அட்சய திருதியை!

*கர்நாடகமாநிலத்தில் அட்சய திருதியைதினத்தன்று பெண்கள் ஒருமண்டபத்தில் கலசம் வைத்துஅதில் கௌரி தேவியை எழுந்தருளச்செய்து சொர்ண கௌரி விரதம்கடைபிடிப்பர். இதன்மூலம்பார்வதிதேவி,தங்கள் வீட்டுக்குவருவதாக நம்புகின்றனர்.குழந்தைப்பேறு,சுமங்கலிப்பாக்கியம்,உடல்நலம்ஆகியவற்றுக்காக கர்நாடகபெண்கள் விரதம் இருப்பர்.விரத முடிவில்அட்சய திருதியை தானமும்வழங்குவர்.

*அட்சய திருதியைதினத்தன்று பவானி சங்கமேஸ்வரர்ஆலயத்தில் உள்ள முக்கூடல்புண்ணிய தீர்த்தத்தில்நீராடினால் நமது எல்லாபாவங்களும் விலகிவிடும்என்பது ஐதீகம்.

*நவ திருப்பதிகளில்ஒன்றான திருக்கோளூர்,தூத்துக்குடிமாவட்டம் ஆழ்வார் திருநகரிஅருகில் உள்ளது.பெருமாள்,குபேரனுக்குமரக்கால் என்ற அளவை பாத்திரம்கொண்டு செல்வத்தை அளந்துகொடுத்தார்.அந்த மரக்காலைதன் தலைக்கு அடியில் வைத்தபடிபடுத்திருப்பார்.இவரை வைத்தமாநிதிஎன்றும்,செல்வம் அளித்தபெருமாள் என்றும் அழைப்பர்.அட்சய திருதியைநாளில் இவரை தரிசித்தால்வாழ்வில் வளம்சேரும்.

*காசியில்ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களின் பசிபோக்குவதற்காக பார்வதிதேவி,அன்னபூரணியாகஅவதாரம் எடுத்தார்.அன்னம் என்றால்உணவு என்று பொருள்.பூரணி என்றால்முழுமையாக உடையவள் என்றுபொருள்.உணவை முழுமையாககொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம்பெற்று அதிலிருந்து வற்றாதஉணவை எடுத்துக் கொடுத்துபக்தர்களின் பசியைப் போக்கினார்.



அந்த சமயத்தில் மக்களோடுமக்களாக சிவபெருமானும்அன்னபூரணியிடம் உணவு வாங்கிச்சாப்பிட்டார்.அ ந்த நாள்தான்அட்சய திருதியை.எனவே,அட்சய திருதியைதினத்தன்று ஓம் நமச்சிவாயசொல்லி பரமேஸ்வரனின் அருளைப்பெறுவோம்.





*அட்சய திருதியைதினத்தன்று கும்பகோணம் மற்றும்அதன் சுற்று வட்டாரப் பகுதியில்உள்ள16பெருமாள்கோயில்களிலிருந்தும்16பெருமாள்கள்கருட வாகனத்தில் புறப்பட்டுவருவார்கள்.கும்பகோணம்பெரிய தெருவில்16பெருமாள்களும்ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத்தரிசனம் தருவார்கள்.இந்த அற்புததரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையேநடைபெறும்.அன்று16பெருமாள்களையும்வழிபட்டால் வாழ்வில் வளம்பெருகும் என்பது நம்பிக்கை.

*மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்மாநிலங்களில் அட்சய திருதியைஎன்றால் திருமணம் தான்என்கிறார்கள். அந்த நாளில்திருமணம் செய்தால் எல்லாவளமும் பெறலாம் என்பது அவர்களதுநம்பிக்கை.அதனால் அன்றுநிறைய திருமணங்கள்நடைபெறுகின்றன.

அட்சயதிரிதியைதினத்தில் மகாலட்சுமியைவழிபட்டால் செல்வம் பெருகும்என்பது நம்பிக்கை.ஆ னால் மகாலட்சுமியேபிரதிஷ்டை செய்து வழிபட்டசிவன்கோயிலுக்கு சென்றால்பலன் பல மடங்கு பெருகும்என்பது நம்பிக்கை.திருச்சிஅருகே அமைந்துள்ள வெள்ளூரில்தான் மகாலட்சுமி பிரதிஷ்டைசெய்த திருக்காமீஸ்வரர்கோயில் அமைந்துள்ளது.இங்குள்ளஅம்மன் சிவகாம சுந்தரி தெற்குநோக்கி தனி சன்னதியில்அருள்பாலிக்கிறாள்



AkshayaTritiya, also known as Akha Teej, is a holy day for Hindus and Jains.It falls on the third Tithi (lunar day) of Bright Half (ShuklaPaksha) of the pan-Indian month of Vaishakha and one of the four mostimportant days for Hindus.

It is an auspicious day ofthe birthday of Lord Parasurama who is the 6th incarnation of LordVishnu.

On this day the grate Veda Vyas and Lord Ganeshabegan to write Mahabharata. Jains celebrate this day to commemorateTirthankara Rishabha's ending of one-year fast by consuming sugarcanejuice poured into his cupped hands.

Isidered auspicious forstarting new ventures. The legend is that any venture initiated onthe auspicious day of Akshaya Tritiya continues to grow and bringprosperity. Hence, new ventures, like starting a business,construction, etc. is performed on Akshaya Tritiya.


Hinduism

InHinduism, Akshay Tritiya was the day when SaJains celebrateTirthankara Rishabha's first 'ahara'

Followers of Jainism consider Akshaya Tritiiya to be a holy and supremely auspicious day.It is associated with Lord Adinatha, also known as Rishabhadeva,first of the twenty-four Tirthankaras. On this day people who observethe year-long alternative day fasting known as Varshi-tap finishtheir Tapasya by doing parana by drinking sugarcane juice.

Theday of Akshaya Tritiya is worshiped and said to be auspicious inJainism because it is said to have established the very first "aharacharya": a methodology to prepare and serve food to Jain monks.Lord Rishabhadeva denounced the worldly pleasures after dividing hisvast kingdom amongst his 101 sons, prominent of whom areGommateshvara Bahubali (whose world's tallest monolithic statuestands at Shravanbelgola and Chakravarti Bharata; it is known todayas "Bharat").

Lord Rishabhadeva meditated withoutany food and water for six months and after that set out to acceptfood (ahara). He was the first monk of this era. Jain monks do notown anything. They do not even cook food for themselves. When hungryor thirsty, (maximum once in a day), they set out to accept ahara.They do not ask for it and accept where it is offered.



TīrthankaraRishabhadeva went to people to accept food. However, the people ofthat time did not know anything about the lives and disciplines ofmonks, as he was the first monk of Avsarpinī. The people of Ayodhyaoffered him gold, jewellery, gemstones, elephants, horses, expensivegarments and even their daughters to honour their beloved king.

ButRishabhadeva was not in search of these things. He sought only amorsel of food, but nobody offered it to him. Nobody understood thattheir king was looking for food to ensure that the monks who wouldcome after him get food and water in the purest form needed to leadan ascetic life. As there was no choice, he had to fast for one yearuntil King Shreyansa understood his need due to his"purva-bhava-smarana" (previous life).



Shreyansa Kumaroffered him sugarcane juice and thus Rishabhadeva ended his fast.This was on the day of Akshaya Tritiya. Hence, sugarcane juice isconsidered by Jains to be one of the best offerings. On this day,Jains observe a fast to commemorate their first TirthankaraRishabhadeva and end their fast with sugarcane juice.

InHastinapur, there is a fair held on Akshaya Tritiya. Jains arrivefrom all over India in large numbers to end their fasts. The ritualending of a fast by Jains is called parana.


Specialities and Rituals to be followed on Akshaya Tritiya

1.After taking bath early morning on the Akshaya Tritiya Day, chant the holy names of Sri Vishnu then start all your daily rituals.

2.Atcharabhyasam (first Teaching to kid) will be done on this holy day.

3. The boon to stay in the holy chest of Sri Vishnu byGoddess Sri Lakshmi was sought on this day, so this is special dayfor


Goddess Lakshmi.

4. The last rites done on this holy Akshaya Trityiya day will reach our ancestors. So it is conisdered as special to do last rites (yearly rites) on thisday.

5. Annadhanam (providing free food) on this day will bring good boon to the provider.

6. Taking bath on RiverGanges on this day is considered as special.

7. Doing KuberaLakshmi pooja on Akshaya tritiya is belived to bring more wealth as this holy day he got all his wealth praying Goddess Sri Lakshmi.

8.Doing Vishnu Pooja, Chanting Vishnu Sahasranama on this holy day willbring good wealth to you.



9. Chanting the holy names ofGoddess Sri Lakshmi will also bring wealth.

10. In WestBengal, on this holy day, they start writing the new accounts praying Goddess Lakshmi and God Vinayaga.

அட்சயதிருதியை அன்று பின்பற்றவேண்டியவைகள்...

1.அட்சயதிருதியை அன்று அதிகாலையில்நீராடி ஸ்ரீமந் நாராயணனி ன்நாமங்களை சொல்லி புதிய செயல்களைதொடங்க வேண்டும்.

2.குழந்தைகளுக்குகல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம்செய்யும் சடங்கு'அட்சயதிருதியை'நாளில்செய்யப்படு கிறது.

3.மகாலட்சுமிதிருமாள் மார்பில் நீங்காமல்இருப்பதற்காக அட்சய திருதியைதினத்தன்றுதான் சிறப்பு வரம்பெற்றாள்.

4.அட்சதிருதியை தினத்தில் செய்யப்படும்பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்குமுந்தைய நமது மூதாதையர்களுக்கும்போய் சேரும் என்பது ஐதீகம்.என வேஅட்சய திருயை தினத்தன்றுசெய்யப்படும் பித்ருகடன்மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

5..அன்னதானம்செய்வதும்,

6.கங்கையில்குளிப்பதும் அட்சய திருதியைநாளில் கூடுதல் பலன்களைதரும்.

7.பெரியபணக்காரனான குபேரன் அட்சயதிருதியை தினத்தன்று மகாலட்சுமியைமனம் உருகி வணங்கி செல்வத்தைபெருக்குவதாக ஐதீகம்.என வேஅட்சய திருதியை தினத்தன்றுகுபேர லட்சுமி பூஜை செய்வதுசெல்வம் தரும்.

8.அட்சயதிருதியை தினத்தன்று அதிகாலைவிஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரியபலன்களைத்தரும்.

9.மகாலட்சுமியின்அருள் பெற வேண்டுமானால்,அதிகாலைபிரம்ம முகூர்த்த நேரத்தில்எழுந்து குளித்து,பூ ஜைஅறையில் விளக்கு ஏற்றி வணங்கி,மகாலட்சுமிபெயரை உச்சரித்தாலே போதும். செல்வம்தானாக தேடி வரும்.

10.மேற்குவங்காளத்தில் அட்சய திருதியைதினத்தன்று தான் விநாயகரையும்,ல ட்சுமியையும்வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.


வார்த்தா கெளரி வ்ரதம்.04-05-2022.

கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.

ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்

ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.


அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.

ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.







கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.

சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.

அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில்.
ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அல்லது கெடுதலான இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷத்தை கொடுக்கும். இதனால் காலத்தில் திருமணம் நடக்காது.

அல்லது திருமணம் ஆனவர்களிடம், ஒற்றுமையின்மை , கருத்து வேறுபாடு, தம்பதிகள் பிறிவு ஏற்படும். இந்த குறைகள் நீங்க இந்த கெளரீ பூஜை தக்க பரிஹாரமாகும்.நோய்கள் நீங்கும், ஆரோக்யம் ஏற்படும்.. ஒற்றுமை ஏற்படும்.

6-5-2022. ஶ்ரீ ராமானுஜர் ஜயந்தி. சித்திரை சுக்ல பக்ஷ பஞ்சமி. திருவாதிரை நக்ஷத்திரம்.



06-05-2022 காலடியில் ஆதி சங்கரர் தோன்றிய நாள்

08-05-2022 பானு ஸப்தமி.
ஸப்தமி திதியும் ஞாயிற்று கிழமையும் சேர்ந்து வரும் நாள். இது ஸூர்ய கிரஹணத்திற்கு சமமானது.
அருணம். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். கேட்கலாம். 1008 ஞாயத்ரி ஜபம் செய்யலாம். தானம் செய்யலாம்.



14-5-22. ந்ருஸிம்ம ஜயந்தி:

வைசாக சுக்ல பக்ஷ சதுர்தசி யன்று மாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதி நக்ஷதிரத்தில் உலகை காக்க அவதரித்தவரை நாமும் இன்று பூஜை, ஸ்தோத்ரம், அர்ச்சனை, வழிபாடு , நமஸ்காரம் செய்து ப்ரார்திப்போம்.

ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்று உபவாசமிருந்து மாலையில் இவரை பூஜிப்பது மிக்க நன்மையை தரும்.. முடியாவிட்டால் இன்றாவது காலை முதல் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில்

ஶ்ரீ ந்ருஸிம்ம மூர்த்தியின் படமோ விக்ரஹமோ வைத்து, ஶ்ரீ மத் பாகவத புத்தகத்துடன் ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர் ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து பானகம் முதலியன நிவேத்யம் செய்து முறைப்படி பூஜிக்கவும்.

பிறகு ஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ள ப்ரஹ்லாத சரித்ரம் ( ஏழாவது ஸ்கந்தம் ஒன்று முதல் பத்து அத்யாயங்கள் ) பாராயணம் செய்யவும். ப்ரஹ்லாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரம் (7 ஆவது ஸ்கந்தம் 9ஆவது சர்க்கம்) பாராயணம் செய்யவும்.

இவ்வாறு இவரை பூஜிப்பதால் மனதிலுள்ள காமம் , க்ரோதம் போன்ற உள் சத்ருக்களும் வெளியே திரியும் விரோதிகளும் நம்மிடம் நண்பர்கள் ஆகிறார்கள். மேலும் நீதி மன்றத்தில் வழக்கு வெற்றி அடையும்..

எவ்வளவு படித்தாலும் படிக்கும் விஷயங்கள் நினைவில் நிற்காமல் ஞாபக மறதியுள்ளவர்கள் இவரை பூஜிப்பதால் நல்ல நினைவு ஆற்றலை பெறலாம்..

தேவர்களின் தலைவனே, ஶ்ரீ ந்ருஸிஹ்மா எனது வம்சத்தில் பிறந்துள்ளவரையும் இனி பிறக்க போகிறவர்களையும் பிறவி பெருங் கடலிலிருந்து கரையேற்றி விடு.

பாபமென்னும் கடலில் மூழ்கியவனும், நோய் துன்பம் என்னும் ஜலத்தால் சூழப்பட்டவனும், பெரிய துக்கத்துடன் கூடியவனுமான என்னை கை கொடுத்து தூக்கி விடுங்கள். ஆதிஷேசன் மீது வீற்றிருப்பவரே.,

உலகம் அனைத்திற்கும் தலைவரே. பாற்கடலில் பள்ளிக்கொண்டு சக்ரத்தை கையில் தாங்கிய ஜனார்த்தனா.ஶ்ரீ ந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில் தேவையான அனைத்து இன்பங்களையுமம் தந்து , இறுதியில் மோக்ஷத்தையும் தந்து அருள் புரிவாய்.

இவ்வாறு பக்தியுடன் ப்ர்ரார்திக்கவும்.. மனதில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி தைரியம், அகத்தூய்மை, உடல் வலிமை நல்ல ஸுக வாழ்வும் ஏற்படும்..


16-5-22. ஆகாமாவை:- ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம் என்ற மாதங்களின் முதல் எழுத்துக்களே ஆகாமாவை என்றாகிறது. இன்று சூரிய உதயத்திற்கு ஒரு மணி முன்பாகவே அதாவது காலை 4-45 மணிக்கே வீட்டிலுள்ள எல்லோருமே ஸ்நானம் செய்து விடலாமே .இதனால் அனைத்து பாபங்களும் விலகும் என்கிறது சாஸ்திரம். முயர்சிக்கலாமே.
 

Latest posts

Latest ads

Back
Top