• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

The origin of Navratri Worship

praveen

Life is a dream
Staff member
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்


நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் #சும்பன்_நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள்.

அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர்.

தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை.

அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர்.

இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர்.

அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.

ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம்.

அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை #ஆதிசக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள்.

அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி #அன்னைக்கு_அளித்துவிட்டு_சிலை_எனஆனார்கள்.

அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.

அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் #பொம்மைக்கொலு வைக்கும் பழக்கம் வந்த்து!

அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி.

ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது.

அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

ஏன் ராத்திரி?

ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம்.

அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு.

மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள்.

படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

அப்போது அன்னையின் படைக்கு #ஊக்கம்கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இது ஒன்பது_இரவுகள் நடந்தது.

அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரியில் எவ்வாறு அம்பிகையை அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.

அம்பிகையை #முதல்மூன்று_நாட்கள்துர்க்கையாகவும்; அடுத்த #மூன்றுநாட்கள்_லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்றுநாட்கள்சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியாக வழிபடுவார்கள்.

  • நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
  • இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.
  • மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.
  • நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.
  • ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.
  • ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம்.
  • ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள்.
  • எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது.

அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்.

ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.

பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி.

அன்று #அன்னைவெற்றித்திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.

இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

ஆண்டுக்கு இருமுறை_நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது.

சித்திரையில் வரும்நவராத்திரிக்கு #வசந்தநவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும்நவராத்திரிக்கு சாரதாநவராத்திரிஎன்றும் பெயர்.

இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும்.

கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும்.

இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர்.

ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது.

புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர்.

நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார்.

கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது.

பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான்.

தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

ஆணவம் சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி
என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம்.

அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ
குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும்
ஸக்தா ஸா பரமேஸ்வரீ!
 

Latest posts

Latest ads

Back
Top