• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

The reason for Srivenkatesa Suprapadam, What is the purpose?

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தோன்றிய காரணம், நோக்கம் என்ன?

மூலமும் முழுமையான தமிழ் விளக்கமும்!

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
எனும் இந்த அற்புதப் பாடல் உலகெங்கும் பரவி இன்றும் அதிகாலையில் பல வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சுப்ரபாதம், ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் ஆகிய
நான்கு பகுதிகளும் சேர்ந்ததே ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்.

இது ஒலிக்கும் இடங்களில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

உறக்கமே இல்லாது சகல உயிர்களையும் காத்து அருள்பவனே பரந்தாமன்.

ஆனாலும் பாற்கடலில் பாம்பணையில் அறிதுயிலில் வீற்றிருப்பதாக வேதங்கள் அவனைப் போற்றுகின்றது.

அதன் விளைவாக மனித இயல்புக்கு ஏற்ப அன்றாடம் அந்த பரந்தாமனை அதிகாலையில் பாடல்கள்
பாடி துயில் எழுப்புவது வழக்கமாகவும் உள்ளது.

ஸ்ரீரங்கத்துத் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில் அருளிய ரங்கநாதன் திருப்பள்ளியெழுச்சியே
துயில் எழுப்பும் பாடல்களில் முன்னோடியாக உள்ளது.

திருப்பள்ளியெழுச்சி எனும் சுப்ரபாதம் ஆண்டவனை எழுப்பும் பாடல் மட்டுமல்ல, அதன்வழியே விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் நம் ஆன்மாவையும் துயிலெழுப்பி ஆண்டவனின் கருணையை உணரச் செய்வதாகவும் அமைந்து உள்ளன என்கிறார்கள் பெரியோர்கள்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி, 15-ம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் அருளப்பட்டது.

இவர் ஸ்ரீராமாநுஜரின் அவதாரம் என்று போற்றப்படுகிறார்.

ஸ்ரீமணவாள மாமுனிகள் ஆணைப்படி திருமலையில் எழுந்தருளியுள்ள வேங்கடமுடையான் மீது
இவர் பாடிய பாடல் பின்னர் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

சுப்ரபாதம் தொடங்கிய வரலாறு!

விஸ்வாமித்திரர் வேள்விக்கு உதவச் சென்ற ராம, லட்சுமணர்கள் வெகு தூரம் நடந்த களைப்பால் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

உறக்கம் விழித்த விஸ்வாமித்திரர் காலையில் நீராடி, ஜப தபங்களை முடித்து ராம லட்சுமணரை எழுப்ப முயன்றார்.

அவர்கள் அப்போதும் உறங்கியதால் 'கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா' என்று பாடினார்.

"இன்று ஒருநாள் ஸ்ரீராமனை எழுப்பும் பாக்கியத்தை பெற்றேனே. ஸ்ரீராமனின் தாய் கெளசல்யாதேவியோ தினமும் ராமனை எழுப்பும் பேறு பெற்றுள்ளாரே..." என்று தொடங்கி அவர் பாடியதாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.

இதைத் தொடக்கமாகக் கொண்டு பின்னர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் அருளப்பட்டது.

ஒருமுறை திருமலைக்கு வேங்கடவனை தரிசிக்க மணவாள மாமுனிகளும் பயங்கரம் அண்ணாவும் வந்திருந்தனர்.

அதிகாலை ஏகாந்த சேவையில் திருமலை தெய்வத்தை தரிசித்த இருவரும் கண்ணீர் மல்க நின்றிருக்க, 'காக்கும் தெய்வத்தின் அயர்வு நீங்கி துயில் எழுப்பப் பாடுவாய்' என குரு மணவாள மாமுனிகள் ஆணையிட, பயங்கரம் அண்ணாவும் மடை திறந்த வெள்ளமாய் இந்த சுப்ரபாதத்தை பாடினார்
எனக் கூறப்படுகிறது.

தினமும் இதைப் பாடினாலோ பாடுவதைக் கேட்டாலோ நம் ஆன்மாவும் விழித்து எழுந்து பலம் பெறும்.

இதனால் சகல காரியங்களிலும் தெளிவும் திடமும் கொண்டு செயலாற்றி வெற்றி பெற முடியும் என்கிறார்கள் பெரியோர்கள்.

வேங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் சமஸ்கிருதத்தில்...

கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த

உத்திஷ்ட கருடத்வஜ

உத்திஷ்ட கமலா காந்தா

த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே

வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே

ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே

ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே

பவது பிரசன்ன முக சந்திர மண்டலே

விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே

விருஷ சைலநாத தயிதே தயாநிதே

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்

ஆகாச சிந்து கமலானி மனோகரானி

ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா

த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி

பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள

பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்

ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை

சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா

பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி

புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா

காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி

பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்

சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த

ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய

நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய

சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே

கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா

ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா

சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா

ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா

பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்

சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ

ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ

ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே

ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா

ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா

த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:

ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி

நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்

ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம

ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா

பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ

நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா

ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ

நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா

ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா

சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!

கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா

ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!

மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே

தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே

ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே

தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே

ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப புருஷாத்தம வாசுதேவ

வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே

காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே

கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-

சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்

திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்

த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா

திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி

சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா

ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே

தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பிரம்மா ஆதய சுரவரா ச
மகர்ஷ யஸ்தே

சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா

தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ

சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ

வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய

ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்

யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா

தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்

பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே

ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்தோத்திரம்:

கமலா குச சூசுக குங்குமதோ

நியதாருணி தாதுல நீல தனோ

கமலாயத லோசன லோக பதே

விஜயீ-பவ வேங்கட சைல பதே

ச-சதுர்முக சண்முக பஞ்ச முக

பிரமுகாகில தைவத மௌலி மனே

சரணாகத வத்சல சார நிதே

பரிபாலயமாம் விருஷ சைல பதே!

அதி வேல தயா தவ துர்விஷஹைர்

அனு வேல க்ருதைர் அபராத சதை:

பரிதம் த்வரிதம் வ்ருஷ சைல பதே!

பரயா க்ருபயா பரிபாஹி ஹரே!

அதி வேங்கட சைலம் உதாரம தேர்

ஜன தாபி மதா திக, தான ரதாத்

பர தேவ தயா, கதி தாந் நிகமை:

கமலா தயிதாந் ந பரம் கலயே!

கல வேணு ரவா, வச கோப வதூ

சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!

ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்

வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!

அபி ராம, குணா கர, தாசரதே!

ஜக தேக தநுர் தர, தீர மதே

ரகு நாயக, ராம, ரமேச, விபோ!

வரதோ பவ! தேவ, தயா ஜலதே

அவனி தனயா கமநீய கரம்

ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்

ரஜநீ சர ராஜ தமோ மிகிரம்

மகநீயம் அகம் ரகுராம மயே

கல வேணு ரவா, வச கோப வதூ

சத கோடி வ்ருதாத், ஸ்மர கோடி ஸமாத்!

ப்ரதி வல்லவிகா அபி மதாத் சுகதாத்

வசுதேவ சுதாந் ந பரம் கலயே!!

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி

ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச

அகம் தூர தஸ் தே பதாம்போஜ யுக்ம

ப்ரணாம் இச்சய ஆகத்ய சேவாம் கரோமி

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் த்வம்

ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச

அக்ஞானினா மயா தோஷான்

அ சேஷாந் விகிதாந் ஹரே

க்ஷம ஸ்வ த்வம் க்ஷம ஸ்வ த்வம்

சேஷ சைல சிகா மணே!

ஸ்ரீவேங்கடேஸ்வர சுப்ரபாத ஸ்தோத்திரம் தமிழில்:

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்

சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது

மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்

செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே

பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே

பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே

கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே

இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்

மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி

செங்கமல வேங்கடத்தான் திருத்தேனி எழுந்தருள்வாய்

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து

நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து

மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்

ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்

தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்

நன்கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்

பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்

புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்

எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி

நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்

நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்

இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்

செவ்விய தன் வீணையில்
உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.

அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி

கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த

வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே

தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப

மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்

சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்

நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்

கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே

வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா

மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா

ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்

காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்

இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி

நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்

நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்

திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்

பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்

திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்

பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்

வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்

நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்

கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய

திருநடைகள் சிறப்பும் உணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு

கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்

சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்

ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது

பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து

நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்

சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்

என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்

புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்

கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்

புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே

திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்

எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா

மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா

சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி

வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே

உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா

திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா

திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்

பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா

நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா

மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே

இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்

சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து

ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்

கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்

பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்

திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்

அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்

காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்

பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்

தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே

பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே

ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்

திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை

விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை

வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர

எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்.
 

Latest ads

Back
Top