Quotes 1771 to 1780

#1771a. பயனற்ற வாழ்வு விரைவான மரணம்.
#1771b. A useless life is an early death.

#1772a. வாழ்வு என்பது வேகத்தை அதிகரிப்பது மட்டும் அல்ல.
#1772b. There is more in life than increasing its speed.

#1773a. தோற்பவன் எப்போதுமே தவறு செய்தவன்.
#1773b. Losers are always wrong.

#1774a. இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம்
#1774b. If you have nothing to lose then you can try everything.

#1775a. பேரம் பேசும் ஒரே விலங்கு மனிதன்
#1775b. Man is an animal that makes bargains.

#1776a. மனிதன்: உணவை உண்டு எண்ணங்களை உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரம்.
#1776b. Man is a machine in which we put in food and produce thoughts.

#1777a. நம்மை எத்தனை உயர்வாக எண்ணுகின்றோம்;
பிறரை எத்தனை தாழ்வாக எண்ணுகின்றோம்;
என்பதை மறைக்கும் கலையே உயரிய நாகரீகம்.
#1777b. Good breeding consists of concealing how much we think of ourselves and how little we think of the others.

#1778a. பெண்கள் எல்லோரும் மணம் புரிய வேண்டும்; ஆண்கள் எவருமே கூடாது.
#1778b. Every woman should marry and no man

#1779a. திருமணம் துன்பத்தை பாதியாக்கும்; இன்பத்தை இரட்டிப்பாகும்; செலவை நான்கு மடங்கு ஆக்கும்.
#1779b. A marriage halves our griefs, doubles our joys and quadruples our expenses.

#1780a. வீழ்ந்து விட்டவனைத் தாக்குவது மனித இயல்பு.
#1780b. It is the nature of the mortals to hit a man when he is down.