இறைவன் = அணோரணீயான் = அணுவைக் காட்டிலும் சிறியவன்
இறைவன் = மஹதோ மஹீயான் = பெரியது அனைத்திற்கும் பெரியவன்
19. எளியவன்!

ஊரையே தன் ஆட்சிக்குள் கொண்ட
ஊர்ப் பெரியவரிடம் பணி புரிந்தான்,
அன்பும், அடக்கமும் கொண்டிருந்த
தன்மையுள்ள வேலையாள் ஒருவன்.
நன்கு விளைந்த இலந்தைப் பழங்கள்,
நான்கு, ஐந்து கிடைத்திடவே, அதைத்
தானே உண்ணாமல் துணியில் சுற்றித்
தன் எஜமானனிடம் எடுத்துச் சென்றான்.
வாயில் சிந்தும் சிறு புன்னகையுடனும்,
கையில் ஒரு பொதியுடனும் கண்டதும்,
அருகில் அழைத்து விசாரித்தவரிடம்,
பெருமையுடன் அளித்தான் பழங்களை.
விரும்பி உண்ணும் எஜமானைப் போலவே
விளங்குபவர் நம் இறைவனும் அறிவீர்!
எளியவருக்கு அவன் மிகவும் எளியவன்!
வலியவருக்கு அவன் மிகவும் வலியவன்!
கள்ளம் இல்லா உள்ளமே அவனுக்கு
வெள்ளையான வெண்ணையாகும்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/19-எளியவர்க்கு-எளியவன்-அவன/