SOME CLEVER PEOPLE CAN NOT BE PUNISHED - SINCE THEY ALWAYS FIND
THE LOOPHOLE AND MANAGE TO ESCAPE UNSCATHED FROM THE PUNISHMENT!
24. நாரதரின் நரகம்.

நாரதர் ஒரு நாள் தன் துடுக்குத்தனத்தால்
நாராயணனையும் கோபமூட்டிவிட்டார்.
சாந்த ஸ்வரூபியான இறைவனும்,
சாந்தம் கலைந்து முனியைச் சபித்தார்,
“நரகத்தில் நீ விழுந்து புரள்வாய்” என்று!
நாரணன் வாக்குப் பொய்யாகலாகுமா?
இடியுண்ட நாகம்போல நடுங்கினாலும்,
இறைவனிடம் கேட்டார் “எது நரகம்?”
நாராயணனும், நிலத்தில் மண்மீது
சீரான வரைபடம் ஒன்றை வரைந்தார்.
பிரபஞ்சம் முழுவதும் அங்கே அழகிய
பிரசித்தி பெற்ற படமாக உருவானது.
நரகத்தைச் சுட்டிக் காட்டிய இறைவன்,
‘நரகம்’ எனப் பெயரையும் எழுதினான்.
“இதுவா நரகம்? இதுதானே நரகம்?
இப்போதே நான் அதில் புரள்கின்றேன்!”
மண்ணில் வரைந்த படத்தில் உள்ள
மண் நரகத்தில் புரண்டார் முனிவர்.
“ஏய்க்கின்றீர் நீர்! இதுவா நரகம்?
துய்க்க வேண்டும் தண்டனையை!”
“தாங்களே வரைந்தீர்கள் பிரபஞ்சத்தை!
தாங்களே நரகத்தையும் வரைந்துவிட்டு,
தாங்களே அதன் பெயரையும் எழுதினீர்!
தங்கள் வாக்குப் பொய்யாகலாகுமா ஐயனே?”
நாரணனுக்கே நகைப்பு வந்துவிட்டது.
நாரதரை தண்டிப்பதும் கூடக் கடினமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/24-நாரதரின்-நரகம்/