Those who tell lies get caught in their own lies.
Of late this is being proved day in and day out!
But does it deter the chronic and perpetual liers???
16. யார் பொய்யன்?

கிணற்றிலேயே பிறந்து அந்தக்
கிணற்றிலேயே வாழ்ந்து வந்தது,
வெளியேறி ஒரு முறையேனும்
வெளி உலகைக் காணாத தவளை.
ஒரு நாள் பெய்த பெரு மழையில்,
பெருகிய வெள்ளத்துடன் வந்து
விழுந்தது கிணற்றில், வெளியே
வெகுநாள் வாழ்ந்த வேறு தவளை.
அறிமுகம் நன்றாக முடிந்தபின்,
அதிசய வெளி உலகைப் பற்றி
அளக்கலானது புதுத் தவளை.
ஆச்சரியப்பட்ட கிணற்றுத் தவளை,
“உலகம் எவ்வளவு பெரியது?” என
உற்சாகத்தோடு அதைக் கேட்டது.
முன்னங்கால்களை நன்கு விரித்து
“இவ்வளவு பெரியதா?” என்றது.
“இதையும் விடப் பெரியது!” என,
இங்கிருந்து அங்கு தாவிவிட்டு,
“இவ்வளவு பெரியதா?” என்றது.
“இன்னும் மிகப் பெரியது” எனவே,
“இதைவிடப் பெரியதாக ஏதும்
இருக்கவே முடியாது; அறிவேன்!
பொய்கள் சொல்லுகின்றாய் நீ;
போய்விடு இங்கிருந்து, உடனே”
விரிந்த நோக்கம் இல்லாதவனும்கூட,
விவரமில்லா இந்தத் தவளை போன்றே,
தனக்குத் தெரியாததே இல்லையெனத்
தம்பட்டம் அடித்துக் கொள்கின்றான்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/16-யார்-பொய்யன்/