It is debatable whether a ParihAram really wipes out own sins?
But at least it is a form of acceptance that some mistake has been committed.
Is it not far better than posing and pretending to be pure and innocent?
13. பரிஹாரம்.

அழகிய நந்தவனத்தை உருவாக்கி,
அதைச் செழிப்பாக வளர்த்தான்;
அந்தணன் ஒருவன், தன் வேலை
ஆட்களின் கடின உழைப்பினாலே.
ஏமாந்த நேரம் தோட்டதினுள்ளே
புகுந்து விட்ட கறவைப் பசு ஒன்று,
மேய்ந்து சர்வ நாசமாக்கி விட்டது
பூந்தோட்டம் மொத்தத்தையுமே!
கோபத்தில் கண் மண் தெரியாமல்
கோரமாக அந்தணன் அடித்ததனால்,
விழுந்து சுருண்டு தன் இன்னுயிரை
இழந்து விட்டது அந்தப் பசு பாவம்!
பசுவைக் கொன்ற பாவம் தன் மேல்
படர்ந்த போதிலும் அந்த அந்தணன்,
பசுவைக் கொன்றது தன் கையே என்றும்,
கையின் தேவதை இந்திரனே என்றும்,
மொத்தப் பழியையும், பாவத்தையும்,
தத்தம் செய்து விட்டான் இந்திரனுக்கு.
தாத்தா வேடம் அணிந்து வந்த இந்திரன்
தள்ளாடியபடியே அவனிடம் சென்றான்.
” மிகவும் அழகிய பூந்தோட்டம்” எனத்
தள்ளாடும் தாத்தா புகழவே, அந்தணன்
“மிகவும் கடின முயற்சியின் பரிசு” எனத்
தன்னைத் தானே மெச்சிக் கொண்டான்.
“மரங்களும், செடிகளும்கூட அழகான
வரிசைகளில் அமைந்துள்ளனவே?”
“மரங்கள், செடிகளின் வரிசையும் கூட
வரை வகுத்துத் தந்தது நான் தானே”
‘பாதைகளும் நூல் பிடித்தாற்போல
பார்க்கவே அருமையாக உள்ளனவே!”
“பாதைகளும் கூட என் திட்டமே!” எனப்
பரவசமாகச் சொன்னான் அந்தணன்.
“வேறு ஆட்கள் செய்தவற்றுக்கெல்லாம்
பேரும் புகழும் நீ ஏற்றுக் கொள்வாய்.
பசுவைக் கொன்றுவிட்ட பழி மட்டும்
பாவம் அந்த இந்திரனையே சாருமா?
வெட்கித் தலை குனிந்த அந்தணன்
வெட்டிப் பேச்சுக்களை விட்டு விட்டு,
பசுவைக் கொன்ற தன் தோஷத்துக்குப்
பரிஹாரம் ஒன்றைத் தேட முயன்றான்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/13-பிராமணனும்-இந்திரனும்/