12. வெள்ளாட்டுக்குட்டி.

ஆனி மாதத்தில் அன்னையின் அருகே,
அச்சம் என்பதே இன்றி, மிக உல்லாசமாகத்
துள்ளி விளையாடிய வெள்ளாட்டுக் குட்டி,
தள்ளி நின்ற அன்னையிடம் சொன்னது.
“ராசலீலை புஷ்பப் பண்டிகையின் போது,
ராச புஷ்பங்களை நான் நிறைய உண்பேன்!”
”கண்ணே! அது நிறைவேறுமா உந்தன்
எண்ணம் போல என்று நான் அறியேன்!
ராசலீலைக்கு முன்னரே நமக்கு
ராசி இல்லாத காலம் தொடங்கும்!
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நம்மை
துர்கா பூஜையில் பலி இட்டுவிடலாம்.
தப்பியே பிழைத்தாலும் அடுத்து வரும்,
தப்ப முடியாத அந்த ஜகதாத்ரி பூஜை.
ஆடுகள் அனைத்தையுமே பலி கொள்ளும்
அதிலும் ஒருவேளை தப்பிப் பிழைத்தால்,
ராஸ புஷ்பப் பண்டிகையை நாம்,
ரசமாகக் கொண்டாடலாம் கண்ணே!”
நித்ய கண்டம், பூரண ஆயுசு என்பார்!
நினைவில் கொள்வோம் இவ்வுண்மையை!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/12-துள்ளும்-வெள்ளாடு/