"கொழு கொழு கன்றே! என் பேர் என்ன?"
இது நினைவுக்கு வந்தது ...ஆனால் முழுவதுமாக வரவில்லை.
என்ன ஆச்சரியம்! தேடினேன் கிடைத்தது! இது நெட்டில் சுட்டது!!!
படியுங்கள்! சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!!

ஒரு தடவை ஒரு ஈ சுற்றி வந்து கொண்டு இருந்தது. திடீர் என அதற்கு தான் யார் என மறந்து விட்டது. அப்பொழுது அங்கே ஒரு கன்று மேய்ந்து கொண்டு இருந்தது. கன்றிடம் சென்ற ஈ இவ்வாறாக கேட்டது,
"கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன?"
அதற்கு கன்று சொன்னது, "எனக்கு தெரியாது! எனது தாயாருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்". உடனே ஈ கன்றின் தாயான பசுவிடம் சென்று கேட்டது.
"கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! என் பெயர் என்ன?"
.............
.............
.............
"கொழு கொழு கன்றே, கன்றின் தாயே,
கன்று மேய்க்கின்ற ஆயா , ஆயன் கைக் கோலே,
கோலை வளர்த்த கொடிமரமே, கொடிமரத்துக் கொக்கே,
கொக்கு நீராடும் குளமே, குளத்திலுள்ள மீனே,
மீனை பிடிக்கும் வலையா, வலையங்கைச் சட்டியே,
சட்டி செய்யும் குயவா, குயவன் எடுக்கும் மண்ணே,
மண்ணிலுள்ள புல்லே, புல்லை மேயும் குதிரையே,
என் பெயர் என்ன?"
உடனே குதிரை ஈ ஈ ஈ ஈ ஈ..................... என கனைத்தது
அப்பொழுதுதான் ஈ’யிற்கு தான் ஒரு "ஈ" என ஞாபகம் வந்தது.
http://knownotknow.blogspot.com