வாழ்வாங்கு வாழ...

நல்லவனாக இரு, ஆனால் ஏமாளியாக அல்ல;
வல்லவனாக இரு, ஆனால் போக்கிரியாக அல்ல.
அறிந்தவனாக இரு, அலட்டிக்கொள்பவனாக அல்ல;
தெரிந்தவனாக இரு, தனிமைப் பட்டவனாக அல்ல.
கொடுப்பவனாக இரு, கொடுக்கும் இன்பத்திற்காகவே;
தடுப்பவனாக இரு, தவறான செயல்களை மட்டுமே.
உதவி செய்பவனாக இரு, உதவியை எதிர்பார்த்து அல்ல;
ஊருக்கு நன்மை செய், பேரும் புகழும் அடைவதற்கு அல்ல.
துணிவுடையவனாக இரு, துயர்களைத் துடைப்பதற்கு;
பணிவுடயவனாக இரு, பதவியை எதிர்பார்த்து அல்ல.
சிந்தனை செய்பவனாக இரு, சீரிய முன்னேற்றத்திற்காக;
வந்தனை செய்பவனாக இரு, வானவர் அருள் பெறுவதற்காக.
சக்தி உடையவனாக இரு, சாதித்து வெல்வதற்கு;
புத்தி உடையவனாக இரு, பகுத்து அறிவதற்காக.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/வாழும்-வழி/